-

-

மாற்று னு வரும் அதில போயி டெலிட் பண்ணீ ஹாய் ஒரு வேர்டு டைப் பண்ணா போயிடும் பா.

நான் பண்ணீருக்கேன் பாருங்க.

mail anupi irukaen , please reply ma printha,bye.mailla share pannalam

2013 la Neega potta Link : http://www.arusuvai.com/tamil/node/26275.
Now Totally Different.Sorry for Mention these details.

sharmila

Hi printha ungalta na onnu ketkanum thappa ninaika matenganna na ketkuran pa.

hi sharmila,

\\Now Totally Different.Sorry for Mention these details\\ sorry lam venam

athuvum en id than mm en kooda wrk panra akka potta post,
enakkum enkooda wrk panravangalukkum aruthaley arusuvai website than ,

enakku romba close avanga baby illanu feel pannapo nan than arusuvai pathi solli view panni pakka sonnen, appa than en user name id koduthu question doubts ketka sonnen , avanga kitta id illa so en id use panna sonnen.

en close frd lam en id than use pannuvanga.
ithula ippadi oru prm irukkum nu ippo than teriyuthu, its ok.

sollunga pa

Printha oru information ungalta ketkanum unga mail id iruntha kudunga na athula ketkuren pa.

//en close frd lam en id than use pannuvanga.// இதைப் பற்றி...

க்ளோஸானவங்க கூடவும் சில விஷயங்கள் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

அவர்களை நம்ப வேண்டாம் என்று சொல்வதாக எண்ண வேண்டாம். நம்பிக்கை வைப்பது வேறு, எல்லாவற்றையும் திறந்த புத்தகமாக வைத்திருப்பது வேறு.

இப்போ கூட நீங்கள் ஆரம்பித்த இழையில் அவர்கள் இடையில் உங்களுக்குக் கருத்துச் சொல்ல முனைந்தால், அல்லது அவர்களது கேள்வியொன்றை வைத்தால், முன்பின் முரணாக இருக்க, அது பார்ப்பவர்கள் மனதில் உங்களைப் பற்றி ஒரு நம்பிக்கையீனம் வரக் காரணமாக அமையும். இதனால் உங்களுக்கு எதற்காகப் பதில் சொல்ல வேண்டும் என்கிற எண்ணமும் வரலாமல்லவா!!

உங்களுக்குக் க்ளோசானவர்களெல்லாம் எதற்காக உங்கள் ஐடீயைப் பயன்படுத்த வேண்டும்!! அறுசுவையில் ஐடீ க்ரியேட் செய்வது அத்தனை சிரமமான காரியமா என்ன? சந்தா கட்டக் கூட வேண்டாம். இப்படியிருக்க எதற்காக அவர்களை உங்கள் பெயரைப் பயன்படுத்த விடுகிறீர்கள்? நீங்களே ஆளுக்கொரு ஐடீ க்ரியேட் செய்ய உதவி இருக்கலாமே!

அவர்களது சொந்தப் பெயரில் பேசுவது அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தால் ஒரு புனை பெயரில் வரட்டுமே! இதில் என்ன சிரமம்!!

உங்களுக்குத் தெரியாத உங்கள் தோழமைகளின் அந்தரங்கப் பிரச்சினைகள் இங்கு கேள்விகளாக வைக்கப்படலாம். அதை உங்கள் பிரச்சினையாகவே அங்கே உள்ள இன்னொரு நட்பு பார்க்கக் கூடும். இது உங்களுக்கு நல்லதல்ல. மணமாக இருப்பவர் நீங்கள். உங்கள் பெயரில் என்னென்ன விதமான சந்தேகங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனித்து வந்திருக்கிறீர்களா? மற்றவர்களுக்கு நல்லவராக இருக்க நினைத்து வேண்டாத பிரச்சினைகளைத் தூக்கித் தலையில் போட்டுக் கொள்ளாதீர்கள்.

ஒருவருக்கு நான்கு ஐடீ இருப்பது வேறு. ஒரே ஐடீயைப் பலர் பயன்படுத்துவது... நல்லதில்லை.

முதலில் உங்கள் ஐடீக்கான பாஸ்வர்ட்டை மாற்றுங்கள். உங்கள் தோழிகள் ஏதாவது கேட்டால், எப்படி ஐடீ க்ரியேட் செய்வது என்பதைச் சொல்லிக் கொடுங்கள். அவர்கள் அவர்களாக இருக்கட்டும், நீங்கள் நீங்களாக இருங்கள்.

~~~~~~ ~~~~~~
சிரிக்கிறதுக்கு ஒரு விஷயம் சொல்றேன். :-) சில நாட்களுக்கு முன்னால் இங்கு ஒரு குறிப்பைப் பார்த்தேன். குறிப்பின் கீழ் ஒரு கமண்ட் இருந்தது. குறிப்பைக் கொடுத்த ஆளே தன் குறிப்பை சூப்பர்னு பாராட்டியிருந்தாங்க. ;)) அவங்க பொண்ணும் அதே ஐடீல இருந்து கமண்ட் போட்டதால வந்த சிக்கல். :-)

‍- இமா க்றிஸ்

திருமதி இமாவின் பதிலைப் பார்த்த‌ பின்
நீங்கள் தொடர்ந்தே நீங்களாகவே உங்களுக்கு வேதனையை விலை கொடுத்து வாங்கி உள்ளீர்கள் என்று தான்
தோன்றுகிறது.
முதல் வேலையாக‌ உங்கள் ஐடீயை மாற்றி விட்டு பிறகு அறுசுவைக்கு வாருங்கள். பிறகு உங்களுக்கு மட்டுமே உரித்தான அந்த‌ புது ஐடீ மூலம் பேசலாம். இமா சொன்னது போல் பிறரின் பிரச்சினைகள் உங்களுடையதாகவே பிறரால் கருதப் படுவது மட்டுமல்ல‌ அவர்களால் வதந்தியாக‌ ஊர் உறவுகளிடையேயும் பரப்பப் படும். மணவாழ்வை எதிர் நோக்கியிருக்கும் உங்களுக்கு இது மிக‌ மிக‌ ஆபத்தானது.
82 ல் நாங்கள் இந்த‌ ஊருக்கு வந்த‌ போது எங்கள் எலக்ட்ரீசியன்
மனைவியார் கருக்கலைப்பு செய்து கொள்ளவேண்டி புகழ்பெற்ற‌ (?) மருத்துவமனைக்கு வர‌ அவர்களோடு துணக்கு வந்த‌ நான் வெளிவராண்டாவில்
இருந்தேன். அதைப் பார்த்துவிட்டுச் சென்ற‌ என் தந்தையாரின் நண்பர்கள்
அவ்ரிடம் இதைப் பற்றி சுற்றி வளைத்துப் பேச்சை ஆரம்பிக்க‌ என் தந்தையார்
அனுமதி பெற்றே சென்றதினால் அது ஒன்றும் இல்லாமல் ஆனது. அதற்கப்புறம் இன்று வரை எவ்வள்வு வேதனை என்றாலும் 90% வேறு மருத்துவமனைக்குத் தான் செல்வேன்.
"எற்று என்று இரங்குவ‌ செய்யற்க‌ செய்வானேல் மற்று அன்ன‌ செய்யாமை நன்று" என்ற‌ வள்ளுவர் குறளை ஒவ்வொரு முறையும் நினைவில் கொண்டு
செயலாற்றுக‌, இரண்டு மூன்று நாளில் தொடர்பு கொள்கிறேன்,
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

http://www.arusuvai.com/tamil/node/26079?page=9

இந்த லிங்க்கில் ஒரு வித்தியாசமான கதை. இதில் அவருக்கு அப்பா இல்லை. அம்மா, அக்கா மட்டும்தான். அதில் திடீரென ஒரு அண்ணன் வருகின்றார். ஒன்றும் சொல்வதற்கில்லை. :-)

மேலும் சில பதிவுகள்