சிக்கன் மிளகு சாப்ஸ்

தேதி: May 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கரோலின் இம்மானுவேல் அவர்கள் வழங்கியுள்ள சிக்கன் மிளகு சாப்ஸ் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கரோலின் அவர்களுக்கு நன்றிகள்.

 

சிக்கன் - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தாளிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு


 

பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
அதன் பிறகு தக்காளியைப் போட்டு எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்றாக வதக்கவும்.
சுத்தம் செய்து கழுவிய சிக்கனைப் போட்டு மஞ்சள் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையும் உடன் சேர்த்து வதக்கவும்.
கறி நன்கு வதங்கிய பின்னர் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
கலவை கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் மூடியை திறந்து ஒரு தேக்கரண்டி தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான சிக்கன் மிளகு சாப்ஸ் தயார். இது குழம்பு பதத்திற்கு இருக்கும். பிரட்டல் போல இருக்க வேண்டுமென்றால் இன்னும் சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து கிளறி குழம்பு நன்கு வற்றியவுடன் இறக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்