ரவை கலந்த குழிப்பணியாரம்

தேதி: May 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

ரவை - 400 கிராம்
முட்டை - 4
சீனி - 200 கிராம்
சோடாஉப்பு - ஒரு சிட்டிகை
கெட்டியான தேங்காய் பால் - ஒரு கப்
நெய் அல்லது டால்டா - தேவைக்கேற்ப


 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் சீனி சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
முட்டை கலவையுடன் ரவையைக் கலந்து தோசை மாவை விட சற்று கெட்டியான பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
அதில் தேங்காய்ப் பால், சோடா உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து நெய் அல்லது டால்டா ஊற்றி காய்ந்ததும் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
சுவையான ரவை கலந்து குழிப்பணியாரம் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கிட்சன் குயின் மேடம். எல்லாமே சூப்பரா இருக்கு. படங்கள் அருமை.

எல்லாம் சில‌ காலம்.....