கவலையாக‌ இருக்கு

அன்பு தோழிகல் அனைவருக்கும் வணக்கம் எனக்கு இது மூன்றாவது பிரசவம் எனக்கு முதல் இரண்டு பிரசவும் ஆப்ரேசன் இதுவும் ஆப்ப்ரேசன் தான் டாக்டர் சொல்லிடாங்க‌ அதுவும் கஷ்டம் சொல்லி இருகங்க‌ எனக்கு பயமாக‌ உல்லது எனது பயத்தை போக்கவும் மூன்றாவது ஆப்ப்ரேசன் எதவது பிரச்சனை வரும‌ எனக்கு பதில் சொள்ளாவூம்

No problem kasatavpadathenga yellam avan seyal andavana nammpunga

//முதல் இரண்டு பிரசவும் ஆப்ரேசன் இதுவும் ஆப்பரேசன் தான் டாக்டர் சொல்லிடாங்க‌ அதுவும் கஷ்டம் சொல்லி இருகங்க‌// ம். //எனக்கு பயமாக‌ உல்லது// அது இல்லாமலிருந்தால்தான் புதினம். :-) ஆப்பரேஷன் என்றால் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளே ஒரு பயம் இருந்துட்டேதான் இருக்கும்.

//மூன்றாவது ஆப்ப்ரேசன் எதவது பிரச்சனை வருமா// ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும் நீங்க. டாக்டர் ஆப்பரேஷன் கட்டாயம் என்று சொல்லியிருக்காங்க. கஷ்டம் என்று சொன்னாங்க என்கிறதுக்காக பண்ணாமலிருக்க முடியாது. உங்களுக்கு எதனால கஷ்டம் என்று சொன்னாங்க என்கிறது தெரியல. இந்த விஷயத்தை இரண்டாவது குழந்தை பிறந்த போதே சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். //அதுவும் கஷ்டம்// விபரம் சொல்லியிருப்பாங்க. நீங்களாகப் பிரசவிக்காமல் அதற்கு முன்பாகவே சிசேரியன் பண்ணிட்டா உங்களுக்கும் குழந்தைக்கும் பிரச்சினை குறைவாகத்தான் இருக்கும். யோசிக்காதீங்க.

உங்களுக்கு எதைப் பற்றிப் பயமாக இருக்கிறது??

‍- இமா க்றிஸ்

எனக்கு பதில் அளித்த தோழிகளுக்கு நன்றி imma sis நீங்கள் சொல்வது சரிதான் டாக்டர் ஏற்கனவே இரண்டு ஆப்ரேஷன் என்பதால் மூன்றாவது கொஞ்சம் கஷ்டம் இருக்கும் சொன்னங்க அத நினச்சாத்தான் கவலையா இருக்கு கடவுள் கிட்ட பிராத்தனை பண்ணுங்க தோழிகளே

//இரண்டு ஆப்ரேஷன் என்பதால் மூன்றாவது கொஞ்சம் கஷ்டம் இருக்கும்// என்ன விதமான கஷ்டம் என்று கேட்கலயா? கேட்டிருந்தா யோசிச்சிட்டு இருக்க மாட்டீங்க இப்போ.

சிசேரியன் பண்றதுல கஷ்டம் எதுவும் இருக்காது. பண்ணாம விட்டால்தான் கஷ்டம் எல்லாம். சரியான நேரத்துக்கு பண்ணிட்டாங்கன்னா சரி. அது ட்யூ டேட்டுக்கு முன்னால நடக்கணும். டாக்டர் சொல்றதைக் கவனிச்சுக்கங்க. எப்ப வரச் சொல்றாங்க என்கிறதைக் கேட்டு வைங்க. அந்த தேதிக்கு முன்பாக இருந்தாலும் வலி, ட்ரிப்ளிங் என்று ஆரம்பிச்சா தாமதிக்காம ஹாஸ்பிட்டல் போய்ருங்க. மீதி எல்லாம் சரியாக இருக்கும்.

ஒரு விஷயம் மட்டும் பண்ணாதீங்க. எதற்கும் கை மருந்துகள் வேண்டாம். யார் எத்தனை நம்பிக்கை கொடுத்தாலும் கஷாயங்கள், கை மருந்துகள் குடிக்காதீங்க. எதிர்பாராத நேரம் வலி எடுத்து உடனே ஹாஸ்பிட்டல் போக முடியாட்டா சிரமமாகிரும். மற்றப்படி யோசிக்காதீங்க.

//அத நினச்சாத்தான் கவலையா இருக்கு// நினைக்காதீங்க. நினைக்க வேண்டியது முன்னேற்பாடுகளையும் எச்சரிக்கையாக இருப்பதையும் பற்றி மட்டும்தான். //கடவுள் கிட்ட பிராத்தனை பண்ணுங்க தோழிகளே// பண்ணுறேன். என் அபிப்பிராயம்... வெறும் பிரார்த்தனைகளால் ஆவது எதுவும் இல்லை. நம் கையிலும் நிறைய இருக்கிறது.

அதிகம் பயப்படாதீங்க. இப்போ மருத்துவம் ரொம்ப முன்னேற்றம். நான் முதல் குழந்தை பிறந்த சமயம் மரணத்திலிருந்து மீண்டு வந்தது பெரிய காரியம். பல வருடங்கள் பின்விளைவுகள் என்னோடு கூட வந்தது. இன்னமும் கொஞ்சம் மீதம் இருக்கத்தான் செய்யுது. இன்று வரை என் பழைய ரிப்போர்ட் பார்க்கும் டாக்டர்கள் எல்லோருமே என்னை வியப்பாகத்தான் பார்க்கிறாங்க. எனக்கு மருத்துவம் பார்த்த சர்ஜன்கள் கெட்டித்தனமாக நடந்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

முதல் பிரசவத்தின் பின், இரண்டாவது குழந்தை கிடைக்காமலிருந்தால் எனக்கு நல்லது என்றார்கள்; கிடைக்கச் சந்தர்ப்பம் இல்லையென்றார்கள்; கிடத்தாலும் எட்டாம் மாதம் சிசேரியன் பண்ணாவிட்டால் என் உயிருக்கு ஆபத்து என்றார்கள். இரண்டாவது குழந்தை குறைமாதக் குழந்தை, சிசேரியன். அதனால், நான் இருக்கிறேன். குழந்தையையும் பார்த்து வளர்த்து எடுத்தாயிற்று. இது நடந்தது 26 வருடங்களுக்கு முன். இப்போது மருத்துவம் இன்னும் முன்னேறியிருக்கிறது. பயப்பட வேண்டாம். எப்பொழுதும் ஹாஸ்பிட்டல் போகத் தயாராக இருங்க. சந்தோஷமாக இருங்க.

‍- இமா க்றிஸ்

உங்க‌ டெலிவரி இவ்வலவு கஷ்டத்தில் நடந்த்ததை நினைக்கும் பொது வியப்பாக‌ உல்லது. Nenga romba bold than.எந்த‌ மாதிரி SIDE EFFECT IRUNTHATHU AFTER DELIVERY.BECAUSE ENAKKUM SILA SIDE EFFECS LAM IRUKKUTHU.

//டெலிவரி இவ்வலவு கஷ்டத்தில் நடந்த்ததை// ;)) 'டெலிவரி' கஷ்டத்தில் நடக்கல. :-) பிறகுதான் கஷ்டங்கள் வந்துது.

//romba bold// அது உண்மை. போல்ட் என்று சொல்ல மாட்டேன். அதற்கு முன் மருத்துவரொருவரின் கீழ் சில காலம் வேலை பார்த்திருந்தேன். கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிருந்துது. டாக்டர்கள் மேலும் மருத்துவத்தின் மேலும் முழு நம்பிக்கை இருந்துது. நோயாளி மருத்துவர்களுக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பு எத்தனை முக்கியம் என்பது தெரிந்திருந்தது. ஒரு மனவைராக்கியம்.. அழகான என் குழந்தையை தாயில்லாத குழந்தையாக வளரவிடப் போவது இல்லை என்கிற வைராக்கியம், வாழ வேண்டும் என்கிற ஆசை... அது ஒரு போராட்டம். வென்று வந்தாயிற்று. :-)

//எந்த‌ மாதிரி SIDE EFFECT IRUNTHATHU AFTER DELIVERY.// அதுல்லாம் சொல்றதானா நீங்க கேட்காமலே சொல்லியிருக்க மாட்டேனா? :-) நீங்க ஒரு விபரத்துக்காகத்தான் கேட்கிறீங்க! இங்க இருக்கிற குட்டீஸ்லாம் தனக்கு நகம் உடைஞ்சாலே குழந்தை பிறக்குறதுல சிரமம் இருக்குமான்னு யோசிக்கிற அளவு ஃப்ரஜைலா இருக்காங்க. ஃபிரோஸ் மனசுல இருக்கிற பயம் அவசியமில்லாதது என்று நம்பிக்கை கொடுக்கிறதுதான் என் நோக்கம். உங்களுக்குப் பதில் சொல்றதா நினைச்சு யாரையும் பயமுறுத்திரப்படாது நான். :-)

உங்க பிரச்சினை என்னன்னு சொல்ல முடிந்தால் சொல்லுங்க. அதே அனுபவம் எனக்கு இல்லாமலிருந்தாலும் கூட யோசனை சொல்லலாம்.

‍- இமா க்றிஸ்

Eppavume tired ah irukku. Thookam illamai ,udal paruman, step erum pothu moochu vanguthu intha mathiri symptoms after delivery enaku iruku.still continue aguthu.Enaku pathil sollungal imma ma

இறைவனை நம்புங்கள் மூன்றாவது குழந்தை சுகப்பிரசவமாகவே நடக்கும்.
கிட்டத்தட்ட‌ நாற்பது ஆண்டுகளுக்கு முன் என் தோழிக்கு (என் வயது 62) முதல் பிரசவம் சிசேரியன். இரண்டாவதும் சிசேரியன் என்று சொன்ன‌ டாக்.கல்யாணி அவர்கள் (மகப்பேற்று மருத்துவத்தில் மிகவும் பேர் பெற்ற‌ கல்யாணி அவர்கள் / தற்போதைய‌ கல்யாணி மகப்பேறு மருத்துவ‌ மனை, சென்னை 4.) திடீரென்று விடியற்காலையில் தன் நர்சுஅம்மாவை அனுப்பி கையோடு அழைத்துச் சென்று
சுகப்பிரசவமாக‌ பிரசவம் பார்த்து அழகான‌ பெண் குழந்தையோடு வீட்டிற்கு
அனுப்பி வைத்தார்கள். அன்னாளில் மருத்துவர்களே சிசேரியனை அதிகமாக‌
விரும்புவதில்லை என்று தான் நினைக்கிறேன்.
நாட்டு மருத்துவத்தில் முடக்கறுத்தான் கீரை சுகப்பிரசவத்திற்கு மிகவும்
உறுதுணையாக‌ இருப்பதாக‌ நாட்டு மருத்துவர் கூறியுள்ளார். சன்.டி.வி யில் சக்தி. சுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளார். யு.டியூப்பில் தேடிப்பார்க்கவும்.
பிறந்த‌ ஊர், இந்த‌ 3 வது பிரசவம் யு எஸா அல்லது இந்தியாவா? நான் இதைக் கேட்பது தவறோ என்றும் நினைகிறேன், ஓமியோபதியிலும் இதற்கு மருந்து உண்டு. மலர் மருத்துவத்தில் Resque Remadey என்ற‌ மருந்து கிடைத்தால் அதை வாங்கி ஒரு நாளைக்கு இரண்டு வேளை மூன்று உருண்டைகள் சாப்பிடுங்கள். உங்கள் பயம் எதைப் பற்றியதாக‌ இருந்தாலும் நீங்கி விடும். ஓமியோபதி வெப் சைட்டில் தேடிப்பார்க்கவும்.
தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக‌ இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//Eppavume tired ah irukku. Thookam illamai ,udal paruman, step erum pothu moochu vanguthu intha mathiri symptoms after delivery enaku iruku.still continue aguthu.// இவ்வளவுதானா!! பெருசா வேற என்னவோ கேட்கப் போறீங்க என்று நினைச்சேன். :-)

இப்போ குழந்தை கிடைத்து எவ்வளவு காலம் ஆகுது? நீங்க எனக்கே கூட இது பற்றி வேறு எங்கயாவது சொல்லியிருக்கக் கூடும். திரும்பக் கேட்கிறேன் என்று யோசிக்காதீங்க. இங்கு பலருக்குப் பதில் சொல்றேன். நினைப்பு வைச்சிருக்கிறது கஷ்டமா இருக்கு. பல இடுகைகள் படிப்பதில்லை.

நீங்கள் சொன்ன விடயங்கள் (பருமனைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்.) ஒன்றோடொன்று தொடர்பானவை. பிரசவம் நடந்த ஆரம்பத்தில் இருப்பதுதான். ஆனால் தொடரக் கூடாது. குழந்தை ஆரம்பத்தில் இரவில் விழித்துக் கொள்வதால் தாய்க்கு உறக்கம் குறையலாம். அதனால் களைப்பு இருக்கலாம்.

பொதுவாக எங்கள் மத்தியில் உள்ள தேவையற்ற பழக்கத்தால் பலருக்கும் ஏற்படும் சிரமம் இது என்பது என் அபிப்பிராயம். தாய் இருவருக்கு உண்ண வேண்டும் என்றும் பாலூட்ட வேண்டும் என்றும் காயம் ஆற வேண்டும் என்றும் சாப்பிடும் உணவுத் தெரிவும் அளவும் சரியானதாக இல்லாமலிருப்பதாலும் தேவைக்கு அதிகமாக எடுக்கும் ஓய்வினாலும் உடல் எடை கூடுகிறது. தேவைக்கதிகமான ஓய்வு ஒரு விதத்தில் உடற்பயிற்சியின்மை தானே! எல்லாம் சேர எதைச் செய்தாலும் களைப்பு வரும். தூக்கமின்மை கூடவே வரும். உடல் பருமனாக இருந்தால் மாடி ஏற மூச்சு வாங்குவது இயல்பான விடயம்.

நீங்கள் கவலைப்படும்படியாக உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை. (நீங்கள் இருப்பதாகச் சொல்லவில்லை.) பிரசவம் ஆனபின்னால் எவ்வளவு சீக்கிரம் பழைய நிலைக்குத் திரும்பி அன்றடாட வேலைகளில் ஈடுபடுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது. அப்படிச் செய்திருந்தீர்களானால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இருந்திராது. பிரசவத்தில் சிக்கல்கள் காரணமாக சிலர் அதிக ஓய்வு எடுப்பது அவசியமாகிறது. அவர்களுக்கும் அந்த நிலையிலிருந்து மீள எல்லாம் சரியாக வேண்டும்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, முதலில் உணவைக் கவனிப்பது. அடுத்தது உடற்பயிற்சி. உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பதாக நீங்கள் குறிப்பிடவில்லை. பருமனால்தால் மூச்சு வாங்குகிறது. மாடி ஏறுவது களைப்பு என்று தவிர்க்காதீர்கள். அதுவே கூட நல்ல உடற்பயிற்சிதான். முடிந்தால் தினமும் அரை மணி சமதரையில் வேக நடை நடக்கப் பாருங்கள். கால் தசைகள் பழக்கப்படும். அதன் பின்னால் மாடி ஏறுவது சிரமமாக இராது. எடை குறைந்தால் எல்லாம் தானாகச் சரியாகும்.

தூக்கம்... நீங்கள் குழந்தை எழுவதால் தூக்கம் கெடுகிறது என்று குறிப்பிடவில்லை. அதனால், இத்தனை மணிக்கு உறங்கப் போவது, இத்தனைக்கு எழுவது என்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இரவு உணவு சிறியதாக இருக்கட்டும் நேரத்திற்கே சாப்பிட்டுவிடுங்கள். தூங்கப் போகும் போது மனதில் வேறு சிந்தனைகள் இருந்தால் அது தூக்கம் வர விடாது. முடிந்தால் ஏதாவது புத்தகம் படியுங்கள். கண் களைக்க உறக்கம் தானாக வரும்.
~~~

இப்போதான் இன்னொரு இழையில் படித்தேன். குழந்தை பிறந்து 1 வருஷமும் 7 மாசமும் என்றால் இது உங்கள் பழக்கவழக்கத்தால் வந்த பிரச்சினை. விரைவில் சரி செய்யப் பாருங்கள் சத்யா.

‍- இமா க்றிஸ்

thanka imma ma.night Unavai kuraithu sapitum parthen.2 or 3 manikku again pasithu vidukirathu.athigam sapital edai koodukirathu.Mudintha varai ini exercise seiya pokiren

மேலும் சில பதிவுகள்