தேதி: May 20, 2015
O.H.P ஷீட் - ஒன்று
நீளமான குச்சி - 2
பெயிண்ட்
ப்ரஷ்
அரச இலை
திக்கான நூல்
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இலையை O.H.P ஷீட்டில் வைத்து படத்தில் உள்ளது போல் வரைந்துக் கொள்ளவும். (அல்லது) இலை இல்லாமலே வரைய முடியும் என்றாலும் அரச இலையை போலவே உடல் பகுதி சற்று பெரியதாக இருக்கும்படி வரைந்துக் கொள்ளவும்.

O.H.P ஷீட்டில் வரைந்த இலை வடிவத்தை நறுக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.

இலையின் உடல் பகுதியின் இரண்டு ஓரங்களையும் இணைத்து ஒட்டி விடவும்.

இலையின் கூர்மையான பகுதிக்கும் சற்று கீழே உள்ள பகுதியை லேசாக தீயில் காண்பித்து வளைத்துக் கொள்ளவும். அதிக நேரம் தீயில் காண்பித்தால் உருகி விடும்.

இதேப் போல இரண்டு இலைகளையும் வளைத்து வைத்துக் கொள்ளவும்.

இரண்டு இலைகளிலும் ஒன்றில் ரோஸ் நிற பெயிண்ட்டும் மற்றொன்றில் கோல்ட் நிற பெயிண்ட்டும் அடிக்கவும்.

இலையின் நடுவில் காம்பு போல் வைக்க ஒரு குச்சியில் திக்கான நூலை இறுக்கமாக சுற்றி முடிச்சு போட்டு வைத்துக் கொள்ளவும்.

அதை இலையின் மேல் வழியாக நடுவில் உள்ள ஓட்டையில் விட்டு சிறிய அளவில் வெளியில் நீட்டி கொண்டிருக்கும்படி வைத்து ஒட்டி விடவும்.

O.H.P ஷீட்டில் அழகிய பூக்கள் ரெடி. பூ சாடியில் வைத்து ஷோகேஸில் வைக்கலாம்.

Comments
OHP பூக்கள்
பூக்கள் பார்க்க அந்தூரியம் போல அழகாக இருக்கிறது.
- இமா க்றிஸ்