சாண்ட்விச் ரோஸ்ட்

தேதி: May 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெங்காயம் - ஒன்று
பனீர் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
ப்ரெட்
தயிர் - 150 மி.லி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் பனீரை சேர்த்து பிரட்டி விடவும்.
அதன் பின்னர் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் இரண்டு ப்ரெட் ஸ்லைஸை எடுத்துக் கொண்டு ஒரு பக்கம் முட்டை பனீர் கலவையையும் மற்றொரு ப்ரெட்டில் கெட்டித்தயிரையும் தடவி வைக்கவும்.
இரண்டையும் ஒன்றாக சேர்த்து ப்ரெட் டோஸ்டரில் வைத்து மேலே நெய் அல்லது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்யவும்.
சுவையான எளிதில் செய்துவிடக்கூடிய சாண்ட்விச் ரோஸ்ட் தயார். இதையே தோசை கல்லிலும் போட்டு எடுக்கலாம். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சிற்றுண்டி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முட்டை பனீர் கலவைன்னு சொல்லி இருக்கீங்க‌. ஆனால், முட்டை எப்போ சேர்க்கணும்னு சொல்ல‌ மறந்துட்டீங்களே.:))
பனீர், வெங்காயம் வதக்கும் போது முட்டை சேர்க்கணுமா? தேவையான‌ பொருளில் முட்டை இல்லியே..................
ஈசியான‌ ரெசிபி;))