மாம்பழ ஐஸ்கிரீம்

தேதி: May 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஹரிணி அவர்களின் மாம்பழ ஐஸ்கிரீம் என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஹரிணி அவர்களுக்கு நன்றிகள்.

 

பெரிய மாம்பழம் - 2
குளிர்ந்த பால் - 1 கிண்ணம்
வெனிலா ஐஸ்கிரீம் - 1 கிண்ணம்
ஜெல்லி - 2 மேசைக்க்ரண்டி


 

மாம்பழங்களை தோலை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கின மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, கூழாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே மிக்ஸியில் பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடிக்கவும்.
பால் ஜெல்லி கலவையில் மாம்பழக் கூழை சேர்த்து ஒரு முறை அடித்து எடுக்கவும்.
இந்த கலவையை பாக்ஸில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சுமார் 2 மணி நேரம் குளிரவிடவும்.
அதன் பிறகு எடுத்து பரிமாறும் கோப்பையில் வைத்து மேலே வெனிலா ஐஸ்க்ரீமை வைத்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்