தோழி௧ளே எனது மகளுக்கு 1வயதும் 5மாதங்௧ளும் ஆகிறது
அவள் பேசும் வார்த்தை௧ள் அம்மா,அப்பா, தாத்தா,பாலுக்கு பா, தண்ணி, காகா, சில சமயங்௧ளில் அவள் செய்கையின் மூலம் எனக்கு புரிய வைக்கிறாள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது
சுறுசுறுப்பாகவும்,, உற்சா௧மா௧வும் இருப்பாள்
குறும்புதனத்திற்கும் பஞ்சமில்லை
எனது மகளுக்கு நான் பேசும் திறனை வளர்க்௧ ஆசைபடுகிறேன்
நான் ஏதாவது சொல்லிக்கொடுத்தால் நான் உச்சரிக்கும் வார்த்தையை மட்டுமே ௧வனிக்கிறாளே தவிர சொல்ல மாட்டேன்கிறாள் சிரிப்பு தான்எஅவளது பதிலாகும்
அவளது பேச்சுத்திறனை வளர்ப்பது எப்படி
ஐடியா கொடுங்௧ள் தோழிகளே
ithu mathiri than en payan
ithu mathiri than en payan seikiran.ethavathu solli koduthal sirippu than pathilaga varukirathu.Avan pesum varthaigal amma,appa,thatha,ammmama,juice ku zooce nu soltran malai moliyil.apuram sithi nu solli koduthal sis nu solkiran.ketpatharukku siripagavum alagavum irukkum. poga poga thelivaga katru kolvargal.kavalai vendam.enaku 1year 7 month boy
அன்புள்ள கல்யாணி
உங்கள் ஒன்றறை வயது கூட நிரம்பாத சின்ன சிட்டைப் படுத்துகிறீர்கள் என்று தான் நினக்கிறேன். உங்கள் வீட்டில் நீங்கள் எல்லோரும் எப்போது பேச ஆரம்பித்தீர்கள் என்பதை முத்லில் கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு உங்கள் மகளுக்குப் பேசப் பயிற்சி கொடுக்க முயலுங்கள்.
தான் பார்க்கின்றவற்றை கேட்கின்ற ஒலியோடு தொடர்பு படுத்தி தன் சின்ன மூளையில் குழந்தை பதிய வைத்துக் கொண்ட பின்னரே அந்த சொல்லை சரியான வேளையில் சரியான இடத்தில் சரியாக உச்சரிக்கும்.
நான் உச்சரிக்கும் வார்த்தையை மட்டுமே கவனிக்கிறாளே ... இதுவே மிக மிக நல்ல முன்னேற்றம்.
**********************************************
" அ ஆ அங்காப்புடைய / மீக்கீழ் இதழ் உற" ப ம " பிறக்கும்
அடி நா அடி அண்ணம் உற ய தோன்றும் //
1. அ / ஆ இரண்டு எழுத்துக்களும் வாயை நன்கு அங்காந்து திறந்தால்
ஒலிக்கும் ஓசைகள் (எழுத்துக்கள்)
2. மேல் உதடும் கீழ் உதடும் அழுத்தியும் மென்மையாகவும் அழுத்தி
உச்சரித்தால் " ப ம " பிறக்கும்
3.அடி நாக்கு வாயின் மேல் அண்ணத்தில் படிந்தால் " ய " பிறக்கும்"
தமிழ் இலக்கணத்தில் எழுத்துக்கள் பிறக்கும் இடம் அதற்கான முயற்சி அதற்கான காற்று அடிவயிறு முதல் மூக்கு வரை எங்குஎங்கு தொடங்கும் என்று ஒரு வரையரையே உள்ளது. நன்னூல் இலக்கணம்.
உங்கள் அருமையான குழந்தை, உங்கள் நாக்கின் அசைவுகளை
நன்கு கவனிக்கிறாள். அதற்கான படப் பாடப் புத்தகங்கள் கிடைக்கின்றன.
அவற்றை வாங்கிப்பார்த்து அதன் படியே சொல்லிக்கொடுங்கள்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்க்கான ஆசிரியப் பயிற்சி பாடப் புத்தகம் இதற்கு உதவும். சிறு பிள்ளைகளுக்கான கை வீசம்மா கைவீசு போன்ற பழைய பாடல்கள் இந்த உலகை அறிமுகப்படுத்தும் பாடல்கள். தேடி எடுத்துப் பழக்குங்கள். வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பூங்கோதை அம்மா
அம்மா பதில் சொன்னதற்கு மிக்௧ நன்றி மா
பக்௧த்தில் இருக்கும் வீட்டு காரர்௧ள் தான் ஏன் உங்௧ குழந்தை இன்னும் சரியா பேசமாட்டேன்கிறானு கேட்டாங்௧ அதான் என் சந்தே௧த்திற்கான பதிவை போட்டேன் மா
நீங்கள் சொல்வதுபோல் நான் செய்கிறேன்
ML
sathya
Thanks sathya answer pannathathuku
ML
Hi
வணக்கம் தோழிகளே என்னுடைய மகளுக்கு 41/2 வயது ஆகிறது. அவள் kindergarden செல்கிறாள். நாங்கள் சீங்கப்பூரில் இருக்கிறோம். அவள் எங்களுக்கு ஒரே மகள் என்பதால் வீட்டில் தனியாக விளையாடுவாள். Evening playground செல்வோம். வீட்டில் இருக்கும் போதும் , வெளியில் செல்லும்போதும் நன்றாக பேசுகிறாள். ஆனால் பள்ளியில் மட்டும் அமைதியாக இருக்கிறாள். 2 வருடங்களாக பள்ளிக்கு செல்கிறாள். நன்றாக ஆங்கிலம் பேசுகிறாள். Teacher கூறுவதை நன்றாக புரிந்துகொள்ளுகிறாள். Teacher கேள்வி கேட்டால் பதில் சொல்லுகிறாள்.டாக்டரிடம் checkup செய்துவிட்டோம் , அவரும் ஒன் றும் இல்லை என்று சொல்லிவிட்டார். அவளை பள்ளியில் மற்ற பிள்ளைகள் போல் பேசவைப்பது எப்படி?
Hi
வணக்கம் தோழிகளே என்னுடைய மகளுக்கு 41/2 வயது ஆகிறது. அவள் kindergarden செல்கிறாள். நாங்கள் சீங்கப்பூரில் இருக்கிறோம். அவள் எங்களுக்கு ஒரே மகள் என்பதால் வீட்டில் தனியாக விளையாடுவாள். Evening playground செல்வோம். வீட்டில் இருக்கும் போதும் , வெளியில் செல்லும்போதும் நன்றாக பேசுகிறாள். ஆனால் பள்ளியில் மட்டும் அமைதியாக இருக்கிறாள். 2 வருடங்களாக பள்ளிக்கு செல்கிறாள். நன்றாக ஆங்கிலம் பேசுகிறாள். Teacher கூறுவதை நன்றாக புரிந்துகொள்ளுகிறாள். Teacher கேள்வி கேட்டால் பதில் சொல்லுகிறாள்.டாக்டரிடம் checkup செய்துவிட்டோம் , அவரும் ஒன் றும் இல்லை என்று சொல்லிவிட்டார். அவளை பள்ளியில் மற்ற பிள்ளைகள் போல் பேசவைப்பது எப்படி?
அன்புள்ள சீதாவுக்கு
அன்புள்ள சீதாவிற்கு, ஒரு நாலரை வயது குழந்தையை ! நீங்கள் அவள் இயல்பைப் புரிந்து கொள்ள வில்லை என்று தான் நினைக்கிறேன். நன்றாகப் படிக்கிறாள்.***** பள்ளியில் மட்டும் அமைதியாக இருக்கிறாள்.
நீங்கள் பணியில் இருக்கும் போது உங்களுக்கு குழந்தை பிறந்தாளா?
உங்கள் பணி மனஇறுக்கமான பணியா? கருவுற்ற போது அதிகமாக யாருடனும்
பேசாமல் இருந்தீர்களா? உங்கள் கணவரின் சுபாவம் எப்படி?
உங்கள் இருவரின் குடும்பத்திலும் அதிகமாகப் பேசாதவர்கள் தாத்தா பாட்டி,அத்தை உறவுகள் இருந்தால் பரம்பரையாக (தற்போது ஜீன்ஸ் என்கிறோம்) அமைவது உண்டு.,
பள்ளியில் ஆசிரியை குறை இருந்தால் உடனே சொல்லி இருப்பார்களே.
அது இல்லாத போது வீணாக மனதை குழப்பிக் கொள்ள வேண்டியதே இல்லை
அழகான மலர்ச் செண்டு உங்கள் மகள். அனிச்ச மலர் போன்ற மகளை மென்மையாகக் கையாளுங்கள். மோப்பக் குழையும் அனிச்சமலர்.
இறையருளால் நலமனைத்தும் பெற்றிட இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
Vanakkam amma
வணக்கம் அம்மா, நீங்கள் கூறுவது போல் நான் பணிக்கு செல்லவில்லை . என் கணவர் அதிகம் பேச மாட்டார் . கடந்த வாரம் parents - teacher meeting சென்ற போது கூறினார்கள் . சென்ற வருடமும் இதே காரணம் தான் சொன்னார்கள். பள்ளிக்கு செல்லும்போதும் வரும்போதும் சந்தோஷமாக இருக்கிறாள். இன்று பள்ளியில் என்ன செய்தாய் என்று கேட்டால் , அனைத்தையும் கூறிவிடுவாள். என்னுடைய கேள்வி என்னவென்றால் வீட்டில் இருக்கும்போதும் வெளியில் நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும் போதும் நன்றாக பேசுபவள் பள்ளியில் பேசுவதில்லை ஏன் ?
hai friends
arusuvai pageku nan new member...enaku help pannunga plzz..ennudaiya baby ku 3 month start agiruku ..motion waterya pora...dr ta kaetathuku motion test eduka sonnanga report parthutu infection agirukunu sonnanga tablet syrub thandanga..tablet syrub kuduthale vomit pannidura..payama iruku..plz yarathu partha reply pannunga plzz
abrose
இன்ஃபெக்க்ஷன் இருந்தால் தந்த மருந்தைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். பால் கொடுப்பதை மட்டும் குறைத்து விடாதீர்கள். டீஹைட்ரேட்டட் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- இமா க்றிஸ்