ஆலு பாலக்

தேதி: May 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாலக் கீரை - ஒரு கட்டு
உருளைக்கிழங்கு - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 2
தக்காளி - ஒன்று
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு
சீரகம்
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
எண்ணெய்


 

பாலக் கீரை மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கி வைக்கவும்.
குக்கரில் கீரையுடன் நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்த கீரை ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு மசிக்கவும். ( மத்து கொண்டும் மசிக்கலாம் )
ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.
உருளை வெந்ததும் மசித்த கீரையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் உப்பு சரி பார்த்து இறக்கவும்.
சுவையான, எளிதாக செய்யக்கூடிய ஆலு பாலக் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு பிடிச்சு இருக்கு வாணி. பசளி எப்போதாவதுதான் கிடைக்கும். கிடைத்தால் உங்கள் குறிப்பின்படி சமைத்துப் பார்ப்பேன்.

‍- இமா க்றிஸ்