சளிக்கு மல்லி தண்ணீர் கொடுக்கலாமா

7 மாத குழந்தைக்கு சளி பிடித்துள்ளது.. மல்லி வேக வைத்த தண்ணீர் கொடுக்கலாமா. எத்தனை நாள் வரை கொடுக்கலாம்.. ப்ளீஸ் தெளிவு படுத்துங்கள் தோழிகளே..

Enaku theintha matrum nangal payanpaduthum murai: Elakkai(Cardamom) sudu panni antha smella (vaasanai) kulanthai mugarum padi seithal nalla palan kidaikkum.ithu nattu maruthuvathil sonnathu sun tv la. karpoora valli ilai ya thanniril kothkka vaithu antha neerai oru sangu (10ml) kuduthalum sali kuraiyum .try panni parunga.

ரொம்ப நன்றி தோழி. கற்பூர வல்லி இலை சாறு காலையில் தான் கொடுக்கனுமா மூன்று வேளையும் கொடுக்கலாமா.. ஏலக்காய் வாசனை நுகர்ந்தால் மூக்கடைப்பு சரி ஆகுமா

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

உங்கள் *** யார் குழந்தை தாயிடம் பால் குடிக்கிறதா, திட‌ உணவு தருகிறீர்களா தாய்க்கு சளி பிடித்துள்ளதா,
தாயிடம் பால் குடித்தால் தாய்க்கும் சேர்த்துத் தான் மருந்து
சுக்கு /மல்லி/ (தனியா விதை) மிளகு /சித்தரத்தை/ கண்ட‌ திப்பிலி(குச்சியாக‌ இருக்கும் இவற்றை 1+4+ பங்கு + 20 மிளகு= சித்தரத்தை ஒரு அங்குலம் + 5 குச்சிகள் இதனோடு சதகுப்பை என்று ஒன்று கேக் சீட் போல‌ இருக்கும்.
அது ஒரு டீஸ்பூன் (இனிப்பு காரம் நல்ல‌ மணம் உடையது கிரைப் வாட்டர் போல‌) இவை எல்லாவற்றையும் மணம் வர‌ வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு டீஸ்பூன் பொடியுடன் 1 1/2 டம்ள்ர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி ரொம்பக் காரமாக‌ இல்லாம்ல் பாலில் சர்க்கரை கலந்து குடித்தால் கால் ட்ம்ளர் அளவு குடிக்கவையுங்கள். நல்ல‌ ரோஸ் மில்க் போல‌ இருக்கும்.
இதையே சித்தரத்தை தவிர‌ இவற்றோடு அரிசி திப்பிலி சேர்த்து காரக் குழம்பு வைத்தால் குழம்பு கொதித்து இறக்குவதற்கு 10 நிமிடம் முன்னால் குழம்பு அளவைப் பொறுத்து அரை அல்லது ஒரு டீஸ்பூன் போட்டு கொதிக்கவைத்து இறக்கி சாதத்துடன் சாப்பிட‌ சளி கை கால் வலி, தலை வலி சுரம் இவை தீரும்.
ஓமவல்லி இலைச்சாறு அரை டீஸ்பூனே போதும்,. ரசம் சாதம் தருவதானால் ரசத்தை இறக்கும் போது 5/6 ஓமவல்லி இலைகளை போட்டு வையுங்கள், குப்பை மேனிகீரையை தக்காளியோடு சேர்த்து சூப் போல‌ வைத்து குடிக்கவையுங்கள்
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

கற்பூர வல்லி இலை சாறு காலையில் தான் கொடுக்கனுமா மூன்று வேளையும் கொடுக்கலாமா --Morning Empty stomach la kuduthal romba nallathu.2 times kudukalam per day.

ஏலக்காய் வாசனை நுகர்ந்தால் மூக்கடைப்பு சரி ஆகுமா --Sari agum.DAily 2 times pannunga. 2 or 3 nalil sari agividum

நீங்கள் பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி அம்மா. என் மகளுக்கு தான் சளி. அடிக்கடி சளி பிடித்து அவதிபடுகிறாள். எனக்கு சளி இல்லை.. திட உணவு 2வாரமாக கொடுக்கிறேன்.. ஆனால் பாப்பாக்கு சாப்பிட தெரியவில்லை. குமட்டுகிறாள். தாய் பால் தான் தருகிறேன்.. நீங்கள் சொன்ன சித்திரத்தை மருந்து எனக்கு மட்டுமா. குழந்தைக்குமா..

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

ஏலக்காய் சூடு செய்தேன் வாசனை வரவில்லை.. எப்படி சூடு பண்ணணும்.. நான் வெறும் வாணலியில் 3 ஏலக்காய் போட்டு வறுத்தேன். வாசனை வரவில்லை.எப்படி செய்வது

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

verum vANALIYIL 5 OR 6 ELAKAYAI ERANDAKA (2AH) UDAITHU VARUKKA VENDAM.ELAKAI VASAM VARAATHU.BUTPUGAI MATHIRI VARUM. ANDTHA PUGAIYAI BABY MOOKIN ARUKIN VAIKKA VENDUM.ELAKAI VARUTHAL LIGHT AH PUGAI VARUM PA

பாப்பாவுக்கு திட‌ உணவாக‌ இட்லியில் காரம் புளிப்பு அதிகம் இல்லாத‌ ரசம் கலந்து நன்கு குழைத்து உங்கள் ஆள் காட்டி விரலால் எடுத்து குழந்தையில் நாக்கில் தடவி விடுங்கள். குழந்தை உங்கள் விரலைச் சப்பும் போது பாலை விழுங்குவது போல‌ விழுங்கிப் பழகும். கூடுமானவரை கையால் ஊட்டி விடுதல் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே நல்ல‌ புரிதலை ஏற்படுத்தும்.
பாலாடையைப் பயன்படுத்துங்கள், பால், மருந்து, கஞ்சி போன்றவை தர‌
மிகவும் உதவியாக‌ இருக்கும், குடிக்க‌ மறுக்கும் போது லேசாக‌ அழுத்திவீட்டு குடிக்கவைக்கலாம். ஸ்பூனில் கொடுக்கும் போது அதன் ஓரங்கள் குழ்ந்தை குடிக்க‌ மறுத்து ஒதுக்கும் போது குழந்தையின் வாயின் பல‌ இடங்களில் காயப் படுத்திவிடும், அந்த‌ அனுபவம் அடுத்தமுறை ஸ்பூனைப் பார்த்தாலே குழந்தை முரண்டு பிடிக்க‌ ஆரம்பித்து விடும், ஒரு முறை முயன்று பாருங்கள்.
சித்தரத்தை எல்லோரும் சாப்பிடலாம். பாப்பாவுக்கு தாராளமாகத் தரலாம்.
குழம்பிலும் தாராளமாக சேர்க்கலாம்.
வேகவைத்து மசித்த‌ உருளைக்கிழங்கு /சர்க்கரை வள்ளிகிழங்கு/ ஆள் வள்ளிக் கிழங்கு சாப்பிடாத‌ குழந்தை யாரும் கிடையாது; திட‌ உண்வு பழக்கும் போது
மசித்த‌ கிழங்குடன் சர்க்கரை/ தேன்/ பனைவெல்லம் பனஞ் சர்க்கரை இவற்றை ஒரு நாளைக்கு ஒன்றாக் கலந்து கொடுத்து வாருங்கள். குழந்தை சப்பிச் சாப்பிட‌ பழகும். பனை வெல்லம் சர்க்கரை உணவில் உள்ள‌ நஞ்சினை
நீக்கி விடும். வெள்ளைச் சர்க்கரையை குறைத்து விடுங்கள்.
ஓமவல்லி மிகச் சுடான மருந்து, ஆறு சொட்டுக்கு மேல் வேண்டாம்
ஒரு நாளைக்கு ஒருமுறையே போதும் குழந்தையைப் பொறுத்து மாறுபடும். குப்பைமேனிக் கீரை கிடைத்தால் சூப் வைத்துக் கொடுங்கள்.
சளியை வாந்தியாகவும் மலத்தின் மூலமாகவும் வெளியேற்றும். கூடவே வயிற்றில் பூச்சி இருந்தாலும் மலத்தின் மூலமாக‌ வெளியேறும்.
வேறு எந்த‌ விசப்பூச்சிகளின் விசத்தினுக்கும் இது தான் மருந்து.
ஏலக்காயை கம்பியில் செருகி அதன் பின் நெருப்பில் சுடவேண்டும்.
கவனம் வேண்டும்,
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அம்மா, நான் பாப்பாக்கு ceralac தான் இப்பொழுது கொடுக்கிறேன். இட்லி தனியா கொடுத்தா குமட்டுறா வாந்தி பண்றா. நீங்கள் சொன்ன விதத்தில் கொடுக்க பழகுகிறேன். இட்லி க்கு தேன் கலந்து கொடுக்கலாமா. வெள்ளை சர்க்கரை சேர்க்க விருப்பமில்லை. எனக்கு சுகர் இருக்கிறது 3வருடமாக. அதனால் பாப்பா உணவு விசயத்தில் என்ன கொடுத்து எப்படி ஆரோக்யமாக வளர்ப்பது என்று குழப்பமாக பயமாக இருக்கிறது...
சத்து மாவு தனியாக அரைத்து வைத்து உள்ளேன். அதை எப்படி(liquid ஆ solid ஆ) கொடுப்பது என்று கூறுங்கள்.

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

மேலும் சில பதிவுகள்