வயிறு தெரியவில்லை

எனக்கு இது 8வது மாதம். வயிறு சுத்தமா தெரியவில்லை. நார்மலா இருப்பதை விட‌ கொஞ்சம் மேல் எழும்பி இருக்கு அவ்வளவு தான். பாப்பாவு'க்கு உள்ளே இடம் பத்துமான்னு டவுட்டா இருக்கு. 8 மாதம்னு சொன்னா நம்ப‌ மாட்றாங்க‌. எனக்கு இது எந்த‌ மாதம், வாரம்'னு நீங்களே சொல்லுங்கள். என்னோட‌ ட்யூ டேட் ஆகஸ்ட் 11.

சிலருக்கு வயிறு தெரியாது. எடை லாம் கரெக்ட்டா இருக்கா? டெலிவரி டேட் எப்ப கொடுத்துருக்காங்க???? உயரம இருந்தால் வயிறு தெரியாது. ..

அன்பு தோழி. தேவி

//பாப்பாவு'க்கு உள்ளே இடம் பத்துமான்னு டவுட்டா இருக்கு.// :-) பயப்படாதீங்க. கருப்பை ஒன்றும் ப்ளாஸ்டிக் பாக்ஸ் இல்லை. பலூன் போல, குழந்தையின் வளர்ச்சியோடு அதுவும் வளரும்.

//சொன்னா நம்ப‌ மாட்றாங்க‌.// பயப்படாதீங்க. நானும் இப்படித்தான் இருந்தேன். பார்க்கிறவங்க நான் தப்பா கணக்கு வைத்திருக்கிறேனோ என்கிற சந்தேகத்துல கேட்டிருக்காங்க. குழந்தை பிறந்த மாதம் கூட பெரிதாக வயிறு தெரியவில்லை. உங்க கணக்கு தப்பானா உங்களைப் பார்க்கிற டாக்டருக்கு தெரிஞ்சுரும். அவங்க கேட்டிருப்பாங்க.

வயிறு சின்னதாக இருக்கிறதால குழந்தை சின்னதாகவோ எடை குறைவாகவோ இருக்கும் என்கிறதும் இல்லை. யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

//உயரம இருந்தால் வயிறு தெரியாது.// ;)) ஆஹா!

அதுல்லாம் சும்மா கதை தேவி. இமா ஹைட்டுக்கே வயிறு தெரியலைன்னா உயரம் குள்ளம்லாம் கணக்குல எடுக்க முடியாது.

சிலருக்குத் தெரியாது, அவ்வளவுதான். பாக்குறவங்க சும்மா கேட்டு வைப்பாங்கதான். அதுல்லாம் கண்டுக்கப்படாது. என்ன சந்தேகம்னாலும் டாக்டர்ட்ட கேட்டுரணும் சரண்யா.

‍- இமா க்றிஸ்

thank you imma amma and ashvath devi sister.
நான் ஹைட் குள்ளமா தான் இருப்பேன். எனக்கு ஆகஸ்ட் 11 ட்யூ டேட் கொடுத்து இருக்காங்க.

யோசிக்காதீங்க. எல்லாம் சரியா இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்