கிட்ஸ் க்ராஃப்ட் - ஃபிங்கர் டால்

தேதி: May 27, 2015

4
Average: 4 (3 votes)

 

க்ளீனிங் டிஸ்யூ க்ளாத்
சிவப்புநிற ஸ்பாஞ்ச் ஷீட்
பெவிக்கால்
கத்தரிக்கோல்
ஃபேப்பரிக் பெயிண்ட் - கருப்பு மற்றும் சிவப்புநிறம்
வெள்ளைநிற நூல்
உல்லன்நூல் - விரும்பிய நிறத்தில்

 

க்ளீனிங் டிஸ்யூ விரும்பிய நிறங்களில் எடுத்துக் கொள்ளவும்.
க்ளீனிங் டிஸ்யூ துணியை 16 செ.மீ நீளம் x 5 செ.மீ அகலத்தில் நறுக்கி அதனை இரண்டாக மடக்கவும்.
அதன் மேல் பக்கத்தை மட்டும் வளைவாக நறுக்கி விடவும்.
சிவப்புநிற ஸ்பாஞ்ச் ஷீட்டை 3 செ.மீ சதுரத்துண்டுகளாக நறுக்கி, அதன் அடிப்பகுதியை மட்டும் சுருக்கி நூலால் கட்டி முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
இதனை ஓவல் வடிவில் நறுக்கி வைத்த துணியின் பின்பக்கம் வைத்து ஒட்டவும். கருப்புநிற பெயிண்டால் ஓவல் வடிவில் கண் போன்று வைக்கவும். இந்த பெயிண்ட் காய்ந்ததும் அதன் அடியில் வெள்ளைநிற பெயிண்டால் சிறுப்புள்ளி வைக்கவும். சிவப்புநிற ஸ்பாஞ்சை ஷீட்டை மிகச்சிறிய அளவில் "v" வடிவில் நறுக்கி மூக்குப்பகுதியாக ஒட்டவும்.
அதே நிறத்துணியில் சிறியதாக இறக்கை வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதனை படத்தில் உள்ளது போல் செய்து வைத்துள்ள பொம்மையின் பின்பக்கத்தில் வைத்து ஒட்டவும்.
மற்றொரு பொம்மை தயாரிக்க மேலே சொன்ன அளவு படி விரும்பிய நிறத்தில் நறுக்கி வைக்கவும். அதன் ஓரத்தை மஞ்சள்நிற நூலால் பெவிக்கால் தடவி ஒட்டி வைக்கவும். அதன் மேல் வளைவுகளில் கருப்பு பெயிண்டால் தலைமுடிப்போல் வரைந்து விடவும். கண்களுக்கு கருப்பு பெயிண்டால் ஓவல் வடிவில் புள்ளிகள் வைக்கவும். அந்த பெயிண்டின் கீழ் வெள்ளைநிற பெயிண்டால் சிறு புள்ளிகள் வைத்து விடவும். சிவப்புநிற பெயிண்டால் வாய்ப்போல் வரைந்து விடவும். சிறியதாக இரண்டு காதுகள் செய்து அதனை பின்பக்கத்தில் ஒட்டி விடவும்.
இப்போது சிக் மற்றும் லேடி டாங்கி தயார். குழந்தைகள் இதுப்போன்று எளிமையான முறையில் பொம்மைகள் செய்து விரல்களில் மாட்டிக் கொண்டு விளையாடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ம்... சிக்கும் ஜெனியும் ரொம்..ப க்யூட்டா இருக்காங்க. :-)

எனக்கு ஒரு டவுட்டு. செண்பகா என் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பீங்களாம். ;)))
ஃபிங்கர் பப்பட், கழுத்து வரைதானே இருக்கு! ஒரு வேளை... ஜெனி வேணாம் ஜாக் பப்பட்தான் வேணும் என்று நவீனா கேட்டுட்டாங்கன்னா எப்படி வித்தியாசம் காட்டுவீங்க!!!!

!!! !!! !! ;((( யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறேன்... ம்ஹும்! என் சின்ன மூளைக்கு எட்டவே இல்லை. ;(( ஹெல்ப் ப்ளீஸ். ;))))

நியூஸி வரைக்கும் கை நீட்டி என்னை யாரும் குட்ட முடியாது என்கிற தைரியத்தில்...

- இமா ;))

‍- இமா க்றிஸ்