ஸ்டஃப்டு வெண்டைக்காய்

தேதி: May 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

வெண்டைக்காய் - 250 கிராம்
கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - சிறிது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
பூண்டு - 2 பல்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
தனியாத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெண்டைக்காயின் காம்பை நறுக்கி விட்டு கீறி வைத்துக் கொள்ளவும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.
பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாக கலந்து வைக்கவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.
வெண்டைக்காயினுள் இக்கலவையை வைத்து பிளந்துவிடாதப்படி மூடி வைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்து விடலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.
சுவையான ஸ்டஃப்டு வெண்டைக்காய் தயார். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கறிவேப்பிலையுடன் வதக்கி சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் சமையல் பதிவிற்கு வாழ்த்துக்கள். ரொம்ப‌ நல்லா இருக்கு உங்க‌ ஸ்டஃப்டு வெண்டைக்காய். இது மூடி போட்டு வேக‌ வைக்கணுமா இல்ல‌ திறந்த‌ படியே அப்படியே வதக்கணுமா?

எல்லாம் சில‌ காலம்.....

என்னுடைய‌ முதல் சமையல் குறிப்பை வெளியிட்டமைக்கு நன்றி:))

திறந்தபடியே வதக்கலாம்.
எண்ணெய் கொஞ்சம் அதிகமா விடணும். சூடா சாப்பிட‌ சுவையா இருக்கும். கட்டாயம் இளசான‌ காயைப் பார்த்து வாங்கணும்
வாழ்த்துக்கு நன்றி பாலா.