மட்டன் ரோகன் ஜோஷ்

தேதி: May 29, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

மட்டன் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி ப்யூரி - அரை கப்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள், சீரகத் தூள் - தலா ஒரு தேக்கரண்டி
தாளிக்க
பட்டை, பிரிஞ்சியிலை, ஏலக்காய், லவங்கம் - தலா 2
எண்ணெய் - 75 மில்லி


 

குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
மட்டன் சேர்த்து வதக்கி விட்டு வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 7 முதல் 8 விசில் வரும் வரை வேக விடவும்.
மட்டன் வெந்ததும் திறந்து அதில் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அதனுடன் தக்காளி ப்யூரியை சேர்த்து கொதிக்க விடவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்து வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான மட்டன் ரோகன் ஜோஷ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யாரு நம்ம‌ ரேவ்ஸா?? என்னம்மா இப்படி கலக்கறீங்களேம்மா. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப சிம்பிளா ரோகன் ஜோஷ் பண்ணியிருக்கீங்க ரேவதி. நல்லாயிருக்கு. :))

இவ்வளவு சீக்கிரம் எடிட் செய்து குறிப்பை வெளிட்ட அட்மின் அண்ணா & அறுசுவை டீம் நன்றி

Be simple be sample

தான்க்யூ வனி. ரொம்ப நாள்க்கு அப்பறம் வந்துருக்கீங்க.

தான்க்யூ வாணி. ஈசி மட்டும் தான் எப்பவும் செய்யறது அதான் :)

Be simple be sample

சூப்பரா இருக்கு ரேவ்'ஸ். எண்ணை மிதக்குது. எண்ணைல‌ பூந்து விளையாடினீங்களோ? ஆமாம் அந்த‌ ரோகன் யாரு? ஜோஷ் யாரு?

எல்லாம் சில‌ காலம்.....