அட்மின் அண்ணா அவர்களுக்கு

என் கணவர் தொழில் ஆரம்பித்து உள்ளார் அதை பற்றி நான் சொல்லி ஆபிஸ் விலாசம் தந்து போன் நம்பர் தந்து விளம்பர படுத்தலாமா. கடன் வாங்கி தருவது மற்றும் Land, house purchase and sales செய்கிறார். Tie up along with nationalized banks private banks

தொழில், வேலை வாய்ப்பு என்றெல்லாம் பகுதிகள் ஒதுக்கிவிட்டு, அங்கே தொழில்கள் பற்றிக் குறிப்பிடக்கூடாது என்று கூறுவது எங்களுக்கே கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் இருக்கின்றது. இருப்பினும் எங்களது நிலையை எடுத்துரைக்கின்றேன்.

இலவச விளம்பரங்களை அனுமதிப்பது என்பது எங்களை நேரடியாக பாதிக்கும் ஒரு செயல். கட்டண விளம்பரங்களுக்காக நாங்கள் தீவிரமாக முயற்சிக்கும் வேளையில் இது போன்ற இலவச விளம்பரங்களை அனுமதித்தால் எங்களது முயற்சி வீணாகும். எல்லோரும் இலவசமாகவே விளம்பரங்களைக் கொடுத்து சென்றுவிடுவார்கள். அறுசுவையை தொடர்ந்து நடத்த இயலாது போகும்.

அடுத்த முக்கிய பிரச்சனை, நீங்கள் கேட்பது போன்ற விளம்பரங்களை கொடுக்க அனுமதி உண்டு என்று தெரிவித்தால், நூறு அல்ல, ஆயிரக்கணக்கில் இங்கே பதிவுகள் விழும். இது போன்ற தளங்களில் இலவசமாக விளம்பரப்படுத்தலாம் என்று வரும்போது எல்லோருமே அதை பயன்படுத்த நினைப்பார்கள். அது மன்றத்தின் நோக்கத்தையே குலைத்துவிடும். இங்கே வரும் பதிவுகள் அனைத்துமே விளம்பரப் பதிவுகளாய் மாறும் ஆபத்துள்ளது. ஒருவரை அனுமதித்தால் எல்லோருக்கும் அதுதான் விதியாக இருக்க வேண்டும். இதனால்தான் அதற்கு அனுமதி இல்லை என்பதை விதியாக வைத்து இருக்கின்றோம்.

பின்னர் இந்த வேலைவாய்ப்பு, தொழில் பகுதிகள் எதற்கு மன்றத்தில் உள்ளது என்ற கேள்வி வரலாம். அதற்கு பதிலாக இதனுடைய வரலாற்றை நான் இங்கே தெரிவிக்க வேண்டும்.

நீண்டகாலத்திற்கு மன்றத்தில் இது போன்ற பகுதி இல்லை. ஒரு நேரத்தில் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்ததால் மன்றத்தில் இரண்டு இழைகள் மட்டும் தொடங்கினோம். அதில் என்ன தொழில் செய்யலாம், எப்படி செய்யலாம், என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி தெரிவிப்பதற்காக ஒரு இழை தொடங்கப்பட்டது. இது ஒரு தனிநபர் பயன்பெறும் வகையில் இல்லாமல், எல்லா உறுப்பினர்களுக்குமான இழையாக இருந்தது. இதைத்தான் பின்னர் ஒரு தனிப்பகுதியாக "தொழில்" என்று கொண்டுவந்தோம். எல்லோரையும் சென்றடையும் தொழில் வாய்ப்புகளை மட்டுமே அனுமதிப்பது என்பது எங்களது நோக்கமாக இருந்தது. எனவே, "தொழில் செய்ய வேண்டுமா? என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்" என்பது போன்ற பதிவுகளை எல்லாம் இங்கே அனுமதிப்பதில்லை. எளிதில் சம்பாதிக்கலாம், இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம் என்று எந்த தகவலும் இல்லாமல் மின்னஞ்சல் முகவரி கொடுத்து வரும் பதிவுகளையும் அனுமதிப்பதில்லை. மல்டிலெவல் மார்க்கெட்டிங்க், இணையத்தில் கிளிக் செய்யும் வேலைகள் போன்ற ஏமாற்று வேலைகளையும் இங்கே அனுமதிப்பதில்லை.

நீங்கள் எந்த தொழில் குறித்து குறிப்பிட்டாலும் அதைப் பற்றின முழுவிபரத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். ரகசிய தொழில்களுக்கு எல்லாம் இங்கே இடமில்லை. என்ன தொழில், எப்படி செய்ய வேண்டும், என்ன லாபம் கிடைக்கும் என்ற அனைத்து தகவல்களும் இங்கே இடம்பெற வேண்டும். இதுதான் இந்தப் பகுதியின் நோக்கம். தனிப்பட்ட ஒருவரின் பயனுக்காக மட்டும் பதிவுகள் இருக்கக்கூடாது என்பது முக்கிய விதி.

ஆனால் பல நேரங்களில் இந்த விதிகளுக்கு உட்படாத பல பதிவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலனவற்றை நீக்கி இருக்கின்றோம். ஒரு சில பதிவுகளை அதன் பயன்பாட்டை கருத்தில் கொண்டு அனுமதித்து இருக்கின்றோம். மொத்தத்தில் எல்லோருக்கும் பயனுள்ளது என்று நாங்கள் முடிவு செய்யும் பதிவுகளை மட்டும் இங்கே அனுமதிக்கின்றோம்.

இறுதியாகக் குறிப்பிட விரும்புவது இதைத்தான். இந்தத் தொழில் பிரிவு தனிநபர் செய்யும் தொழில் பற்றி விளம்பரப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல. எல்லோரும் செய்வதற்கான உண்மையான, நியாயமான தொழிகள் பற்றின விபரங்கள், தகவல்கள் தெரிவிப்பதற்காகத் தொடங்கப்பட்ட பகுதி.

தங்களின் தொழில் குறித்த விளம்பரங்களை வெளியிட விரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது. இதைக் கருத்தில் கொண்டு இதற்கு உதவிடும் வகையில் சில முயற்சிகள் எடுத்து வருகின்றோம். சிறிது காலம் பொறுத்திருங்கள். உங்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் நல்லத் தகவலை இங்கே தெரிவிக்கின்றேன். :-)

நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா.அதனால்தான் உங்களிடம் அனுமதி கேட்டேன் ok admin anna thank u for ur reply.

En peyar bhavani. Nangal love marriage panikitu parents support illaml vazhkail munera kashta padugirom , yengalukendru yentha semipum illai, en kanavar monthly 8000 sambarikindar ithu yengal kudumba vazhkaiku pothumanathaga illai. Avar ITI(fitter), DME padithular computer course ASNT LEVEL-II, AUTOCAD-2D&3D mudithular, Nan DECE padichiruken vitil irunthu computer il job pandrathu pola yethavathu therinthal solunga pls, avarkum vitil irunthu part time aga padra mathiriyana desing project work therinthal solunga pls... yengaluku kai kuduthu udhavungal..,

மேலும் சில பதிவுகள்