பேப்பர் ப்ளவர்

தேதி: June 3, 2015

4
Average: 3.5 (4 votes)

 

ஆர்கமி பேப்பர்
கத்தரிக்கோல்
பென்சில்
டபுல் சைடட் டேப்

 

தேவையான நிறங்களில் பேப்பரை எடுத்துக் கொள்ளவும். எல்லா துண்டுகளும் சதுரமாக இருக்கும்படி நறுக்கி வைத்துக் கொள்ளவும். சதுரமான பேப்பரில் பூ செய்ய எளிதாக இருக்கும்.
முதலில் பேப்பரின் இருமுனைகளையும் படத்தில் இருப்பது போல் இணைத்து மடிக்கவும். இப்போது பார்க்க முக்கோணம் போல் இருக்கும்.
முக்கோண வடிவில் இருக்கும் பேப்பரின் எதிரெதிர் திசையில் இருக்கும் இரண்டு முனைகளையும் இணைத்து மடிக்கவும். மேலும் சிறிய முக்கோணமாக மாறும்.
சிறிய முக்கோணத்தை படத்தில் இருப்பது போல் இடது வலது ஓரத்தை இணைத்து மேலே கூர்மையாக இருக்கும்படி மடிக்கவும்.
மடித்த ஆரஞ்சு நிற பேப்பரில் ஸ்கேலை வைத்து மடக்கிய அந்த முனையுடன் நேராக படத்தில் இருப்பது போல் கோடு வரைந்துக் கொள்ளவும்.
இதேப் போல் ஆரஞ்சு நிற பேப்பரில் மேலும் 2 துண்டுகள் செய்து இரண்டாவது துண்டில் முதலில் போட்ட கோட்டை விட அரை செ.மீ மேலே தூக்கி ஒரு கோடு வரையவும் மூன்றாவது துண்டில் இரண்டாவதாக வரைந்த கோட்டை அரை செ.மீ மேலே வரைந்துக் கொள்ளவும்.
ஆரஞ்சு நிற பேப்பரை போல நீல நிற பேப்பரில் 3 துண்டுகள் செய்து கோடுகள் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
எல்லா பேப்பரிலும் வரைந்த கோட்டோடு பேப்பரை வெட்டி விடவும்.
பேப்பரை இரண்டாக விரித்து வைத்து மேல் முனையில் ஒரு விரல் இடைவெளி விட்டு புள்ளி வைத்துக் கொள்ளவும்.
அந்த புள்ளியிலிருந்து படத்தில் இருப்பது போல் வளைவாக இரண்டு முனைக்கும் ஒரு ஆர்க் போல் வரையவும்.
இதைப் போல எல்லா துண்டுகளிலும் வரைந்துக் கொள்ளவும்.
வரைந்த அந்த கோட்டோடு வெட்டி எடுத்து விடவும்.
அதை விரித்தால் அழகிய பூ கிடைக்கும். அதன் ஒவ்வொரு இதழையும் உள்பக்கமாக மடக்கி விடவும்.
அதேப் போல் ஒவ்வொரு இதழையும் படத்தில் இருப்பது போல் இரண்டாக மடிக்கவும்.
எல்லா துண்டுகளிலும் செய்து வைத்துக் கொண்டு பெரிய அளவில் இருக்கும் இரண்டு இதழ்களை எடுத்து ஒரு இதழின் நடுவில் டபுள் சைட் டேப்பை ஒட்டவும். அதன் மேல் முதல் பூவின் இடைவெளியில் இரண்டாவது பூ இருப்பது போல் வைத்து ஒட்டி விடவும்.
இதைப் போல் மற்றவைகளையும் இரண்டிரண்டாக சேர்த்து வைத்துக் கொள்ளவும். முதலில் பெரிய இதழ்களை வைக்கவும். அதன் பிறகு அதனை விட சிறிய அளவில் இருக்கும் பூவை வைத்து ஒட்டவும்.
கடைசியாக சிறிய இதழ்கள்களை வைத்து ஒட்டவும். ஒவ்வொன்றையும் ஒட்டும் போதும் முதலில் இருக்கும் இதழ்களின் இடைவெளியில் இருப்பது போல ஒட்டவும். அழகிய அடுக்கு இதழ்களை கொண்ட பூ ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

kakitha poo 2 thuntaka varuthu nan ena thavaru panerrupan?

கடதாசியை மடிக்கும் போது தவறு நேர்ந்திருக்கிறது. முதல் இரண்டு மடிப்புகளையும் நிச்சயம் சரியாக‌ மடித்திருப்பீர்கள். அதன் பின் கவனம் தேவை.

எத்தனை தடவை மடித்தாலும், கூரான‌ முனை மாறாமல் அதே இடத்தில் வர‌ வேண்டும்.

இந்தப் பதிலைக் கண்டால் இன்னொரு தடவை செய்து பாருங்கள். நிறக் கடதாசியை வீணாக்காமல் முதலில் நியூஸ்பேப்பர் ஒன்றில் வெட்டிப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

பொழுது போகவில்லை. டீவீ பார்த்துக்கொண்டே வெட்டி ஒட்டினேன். அழகாக‌ இருக்கிறது. படம் _ ஃபான்ஸ் க்ரூப்பில் பகிர்ந்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்