வாக்கிங்க்..

டெய்லி வாக்கிங் போறேன். நிறைய‌ தண்ணீர் குடிக்கிறேன். முடிந்தளவு ஜூஸ் குடிக்கிறேன். எங்க‌ வீட்ல‌ நானும் அவரும் மட்டும் தான். சாப்பாடு என்னால‌ ப்ராப்பரா செஞ்சு சாப்பிட‌ முடியவில்லை. ஏதோ ஒன்னு செய்றேன் சாப்பிடுறேன். அடிக்கடி உடம்பு டயர்டா இருக்கு. வேலை செய்ய‌ முடியலை. இதைத்தவிர‌ வேற‌ ஏதாச்சும் இருந்தால் சொல்லுங்கள்.

சாரி சாரி தெரியாம‌ இரண்டு த்ரெட் ஓபன் ஆகிடுச்சு. தயவு செய்து மன்னிக்கவும். அட்மின், எல்லார்க்கும் சாரி.

தோழி சரண்யா நீங்க 5 வாரத்தில் 18 திரெட் ஓப்பன் பண்ணியிருக்கீங்க. தயவுசெய்து http://www.arusuvai.com/tamil/node/27207 இங்கே குறிப்பிட்டுள்ள மன்ற விதிகளை ஒருமுறை படித்துப் பாருங்கள். கர்ப்பிணிகள் பகுதியில் நீங்கள் கேட்க்கப் படும் கேள்விகள் ஏற்கனவே மன்றத்தில் இடம் பெற்றுள்ளன. மேலே உள்ள Search கட்டத்திற்க்குள் சந்தேகங்களை தேடிப் பார்த்து பயனடையுங்கள். இத்தளத்தின் நோக்கம் ஏற்கனவே விவாதிக்கப் பட்ட கேள்விகளை மறுபடியும் கேட்ப்பதற்க்காக அல்ல, ஏற்கனவே இங்குள்ள நமக்கு தேவையான தகவல்களைப் படித்துப் பயன் பெறவும் தான்
இத்தளத்தை உபயோகிப்பவர்கள் அனைவருமே அறுசுவை தளத்தின் உறுப்பினர்கள் தான். (அட்மின் தவிர)
ஏதாவது ஒரு வகையில் இத்தளம் அநேகம் பேருக்குப் பயனுள்லதாக அமைந்துகொண்டிருக்கிறது. இத்தளத்தின் விதிகளை கடை பிடிப்பதுதான் இத்தளத்தை தொடர்ந்து சிறந்த முறையில் நடத்திச் செல்ல வழி வகுக்கும். அது தான் உறுப்பினர்களின் கடமையும் கூட.

தெரியும் சிஸ்டர். நான் தெரியாம‌ ஓபன் பண்ணிட்டேன். சாரி சிஸ்டர்.

மேலும் சில பதிவுகள்