கோதுமை அல்வா

தேதி: June 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திரு. அசோக் அவர்கள் வழங்கியுள்ள கோதுமை அல்வா குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அசோக் அவர்களுக்கு நன்றிகள்.

 

சம்பா கோதுமை - ஒரு கப்
சீனி - 3/4 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - அரை கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
மில்க் மெய்ட் (விருப்பப்பட்டால்)‍ - 5 தேக்கரண்டி


 

கோதுமையை முன்தினம் இரவே அல்லது 8 மணி நேரம் ஊற வைக்கவும். ( குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் )
மறுநாள் காலை மூன்று முறை அரைத்து பிழிந்து பால் எடுத்து தனியே வைத்து விடவும். கோதுமை பாலும், தண்ணீரும் சேர்ந்து அரை லிட்டர் இருக்குமாறு எடுக்கவும். இதை 4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
4 மணி நேரத்திற்கு பின் கோதுமை பாலுடன் சீனி, கலர்பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தயார் செய்து வைத்து இருக்கும் கோதுமை பாலை ஊற்றி அடிப்பிடிக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
கலவை கொதித்து கெட்டியானதும் ஒட்டும்பொழுது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் நெய் பிரிய ஆரம்பிக்கும். அப்போது சிறிது ஏலப்பொடி கலந்து, விருப்ப‌ப்பட்டால் மில்க்மெயிட் சேர்த்து நன்கு கிளறவும்.
நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும்.
வறுத்த‌ முந்திரியை அல்வாவுடன் சேர்த்து கிண்டவும். நெய் பிரிந்த பிறகு சுமார் அரை மணி நேரம் வரை கிண்டி இறக்கவும். பிரிந்து வந்த நெய்யை தனியாக வடித்து வைத்து விடவும்.
சுவையான கோதுமை அல்வா தயார். முந்திரி பிஸ்தா தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்டு மீண்டும் கிட்சன் குயின் பட்டம் கொடுத்தமைக்கு மிக்க‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

ஹாய் பால உங்க குறிப்பு எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
கோதுமை அல்வா சூப்பர்

அல்வா அல்லுதே... சூப்பருங்க‌ :) அப்படியே பார்சல் பண்ணிடுங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நஸ்ரின். டேஸ்டும் சூப்பர் ட்ரை பண்ணி பாருங்க‌. நான் கூட‌ கஷ்டமோனு நினைச்சேன். ஆனா ரொம்ப‌ ஈஸியா இருந்துச்சி.

எல்லாம் சில‌ காலம்.....

உங்களுக்கு இல்லாமலா? உடனே பண்ணிடறேன். தம்பி வனி அக்காவுக்கு ஒரு அல்வா பார்சல். டேஸ்ட் ரொம்ப‌ நல்லா இருந்துச்சி. ஈஸ்யாவும் இருந்துச்சி. செய்து பாருங்க‌ அக்கா.

எல்லாம் சில‌ காலம்.....

super ......

நன்றி சுல்தானியா.

எல்லாம் சில‌ காலம்.....

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை இது போன்று நானும் சமையல் வகைகளை அளிக்க உள்ளேன். keep support me

https://play.google.com/store/apps/dev?id=4702890658323381984

முதலில் அறுசுவைக்கு நல்வரவு சகோதரி.

//keep support me// நீங்களும் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும். உங்களுக்காக‌ ஒரு பதிவு தேடிக் கொடுக்கிறேன். http://www.arusuvai.com/tamil/policy என்னும் பக்கத்தில் தமிழில் உள்ள‌ கட்டுரையின் ஆறாவது பந்தியை தவறாமல் படித்துப் பாருங்கள். பிறகு நீங்கள் பதிவிட்ட இடுகைகளை எடிட் செய்து விடுங்கள். குறைந்தது 6 இடுகைகளாவது எடிட் செய்ய‌ வேண்டியது இருக்கும். சிரமத்திற்கு மன்னிக்க‌ வேண்டும்.

அன்புடன்...

‍- இமா க்றிஸ்