வெல்ல போளி

தேதி: June 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

கோதுமை மாவு (அ) மைதா மாவு - ஒரு கப்
கடலைப் பருப்பு - ஒரு கப்
மண்டை வெல்லம் - கால் கிலோ
தேங்காய் - ஒன்று
ஏலக்காய் - 4
நெய் - சிறிது
நல்லெண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி


 

கோதுமை மாவு அல்லது மைதாவுடன் மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல சற்று தளர்ச்சியாக பிசைந்து வைக்கவும்.
பிசைந்தபின் மேலே சிறிது நல்லெண்ணெயை ஊற்றி 3 மணி நேரத்திற்கு அப்படியே வைத்திருக்கவும்.
கடலைப்பருப்பை முக்கால் வேக்காடாக வேக வைத்து எடுக்கவும்.
இதனுடன் நுணுக்கிய மண்டை வெல்லம் சேர்த்து தண்ணீர் தெளிக்காமல் மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக‌ அரைத்து எடுக்கவும். அதில் உப்பு சேர்த்து கலக்கவும்.
தேங்காயை துருவி நெய்யில் வதக்கி அரைத்து வைத்துள்ள பருப்பு, வெல்லக் கலவையுடன் சேர்த்து சிறிது நுணுக்கிய ஏலக்காயையும் சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாய் உருட்டி வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் பிசைந்து வைத்த மாவை எண்ணெய் தடவிய பூரிப் பலகையின் மேல் சிறிது சிறிதாக உருட்டி எடுத்து கையால் விரித்து விடவும். அதன் நடுவில் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய்ப்பூ உருண்டையை வைத்து மூடவும்.
மீண்டும் அதை கையால் தட்டி அல்லது கட்டையால் உருட்டி சப்பாத்தி அளவிற்கு விரித்து விடவும்.
இதனை தோசை கல்லில் போட்டு, நெய் ஊற்றி இருபுறமும் சிவந்து வெந்ததும் எடுக்கவும்.
சுவையான போளி தயார்.

கேசரி கலர் மற்றும் மற்ற‌ கலர் பவுடர்கள் உடலுக்கு நல்லதல்ல ஆகவே எதிலும் கலர் பவுடர்கள் உபயோகிக்க வேண்டாம். ஆகவே நான் மஞ்சள்தூள் உபயோகித்துள்ளேன்.

மைதாவும் உடலுக்கு கெடுதல் தர கூடியது அதனால் மைதாவையும் உணவில் தவிர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்டு மீண்டும் கிட்சன் குயின் பட்டம் கொடுத்தமைக்கு மிக்க‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

கோதுமை மாவில் போளி செய்து காட்டியிருக்கீங்க பாலா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :) நான் அவசியம் செய்துப் பார்க்கிறேன்.

நான் வீட்டில் எப்போதுமே மைதா உபயோகிப்பதில்லை. மைதாவிற்கு பதில் கோதுமை மாவு மட்டுமே உபயோகிப்பேன். மைதா உடலுக்கு நல்லதல்ல‌. கருத்துக்கு நன்றி வாணி.

எல்லாம் சில‌ காலம்.....