தோசைக்கல் கேக்

தேதி: June 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட செல்வி. விஜி அவர்களின் தோசைக்கல் கேக் குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய விஜி அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதா (அ) கோதுமை மாவு- கால் கிலோ
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 200 கிராம்
முட்டை - 5
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
காய்ந்த திராட்சை - 50 கிராம்
எண்ணெய் - 200 மி.லி.


 

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்துக் கொள்ளவும்.
முட்டையை நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும். அதனுடன் மைதா, நெய், பொடித்த சர்க்கரை சேர்த்து ஒரு மத்தினைக் கொண்டு நன்றாக கடையவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி செவ்வக வடிவில் (அ) வட்ட‌ வடிவில் தேய்க்கவும்.
வெந்ததும் திருப்பிப் போட்டு மீண்டும் அதன்மேல் அதே வடிவில் மாவினை ஊற்றவும்.
மாவின் மேல் நறுக்கிய முந்திரி, திராட்சையை சிறிது தூவவும்.
மாவினை மேலும் மேலும் இருபுறமும் ஊற்றி, திருப்பிப் போட்டு வேக வைத்து இரண்டு அல்லது மூன்று அங்குல உயரம் வந்ததும் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக்கவும். விருப்பப்பட்டால் கேக்கின் மேல் மில்க்மெய்ட்டை தடவி விடலாம்.
ஈஸியான‌ சுவையான‌ தோசைகல் கேக் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எல்லா குறிப்புகளுமே அருமை,
தோசைகல் கேக் ஈஸியாவும் வித்தியாசமாவும் இருக்கு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குறிப்பை அழகாக‌ வெளியிட்டு மீண்டும் கிட்சன் குயின் பட்டம் கொடுத்தமைக்கு மிக்க‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி சுபி. இதில் தேங்காய் துருவி சேர்த்தாலும் நன்றாக‌ இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....