நெத்திலி மீன் குழம்பு

தேதி: June 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெத்திலி மீன் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - அரை கப்
புளிக்கரைசல் - ஒரு கப்
தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
தாளிக்க :
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

மீனை சுத்தம் செய்து உப்பு தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் உரித்து விட்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டிய பூண்டு, வெந்தயம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் தயிர் சேர்த்து பிரட்டவும்.
அதன் பிறகு புளிக்கரைசல், மல்லித் தழை தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். 4 நிமிடம் குழம்பை கொதிக்க விடவும்.
அதனுடன் மீனைச் சேர்த்து மீண்டும் 4 நிமிடம் சிறு தீயில் வைத்து குழம்பை கொதிக்க விடவும்.
கொதித்த குழம்புடன் தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும். குழம்பு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார். சூடாக பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல‌ குறிப்புங்க‌... பார்க்கும் போதெல்லாம் மாலே நெத்திலி நினைவு வருது. இங்கே அப்படி குட்டி நெத்திலி கிடைப்பதே இல்லை :) கிடைச்சா அவசியம் செய்துட்டு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் § டீமிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,கிடைக்கும் போது செய்து பாருங்க‌.உங்க‌ நெத்திலி வறுவல் குறிப்பு செய்து பார்த்தேன்,அருமை.ரவா சேர்த்து செய்வது சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.