வலைப்பூவில் பூத்தப் பூ

'''அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ''' என்பது பழமொழி. ''அகத்தின் கருத்து முக‌ நூலில் தெரியும்'''என்பது புது மொழி. இன்றைய‌ நவீன‌ அறிவியல் முன்னேற்ற‌ உலகில் முக‌ நூலும் ஒரு நூலாக‌ உள்ளது. இதில் உறுப்பினராக‌ இருப்பது பெருமையும், புகழுமாக‌ மாறிவிட்டது. இதுவும் அறிவியல் அறிவு வளர்ச்சியின் பரிணாமமே.

முக‌ நூலில் வரும் கருத்துக்களும், கணிப்புக்களும், எண்ணங்களின் வடிவங்களும் சுவாரஸசியமானது. ரசனைக்குரியது. நல்ல‌ சிந்தனைக்கும் உரியது. இதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எனக்கும் வலைப் பூவில் வரும் பூக்கள் அது தாங்க‌ அவர்களது கருத்துக்கள் மிகவும் பிடிக்கும். நான் படித்த‌, ரசித்த‌, சிரித்த‌, சிந்தித்த‌ வலைப்பூ கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். நீங்களும் படியுங்கள், ரசியுங்கள், சிரியுங்கள், சிந்தியுங்கள்.

1. இன்று நாம் தலை குனிந்து படிப்பது எல்லாம், நாளை நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே.

2. தாயின் மடியில் உள்ள‌ மடிகணினியை பார்த்தது குழந்தை ஏக்கத்துடன்.

3. புணல் ஓடிய‌ ஆறில், இன்று மணல் லோடு வாகனங்கள் ஓடுகிறது.

4. அன்பின் கருவூலமாக‌, ஆதரவின் குருகுலமாக‌ இருப்பவள் தாய் மட்டுமே.

5. மேக்ஸ் நோட்லே பேணாவில் ஹோம் வொர்க் பண்றவந்தான் உலகத்திலேயே தைரியசாலி.

6. ஷாஜகான் காலத்தில் எதிர் கட்சி இல்லை, இருந்திருந்தால் அவருக்குப் பிறகு தாஜ்மகால் மருத்துவமனையா மாறியிருக்கும்.

7. உலக‌ கோப்பையை இந்தியா பறிகொடுத்து இருந்தாலும், ''மக்களின் சாம்பியன் இந்தியா''என்று செய்தியில் வாசிக்கப்படும்.

8. விவசாயம் செய்பவனை கேவலமாகவும், கணினியில் வேலை செய்பவனை கவுரமாகவும் நினைப்பவர்களுக்கு தெரிவதில்லை ''அரிசியை டவுன்லோட் செய்ய‌ முடியாது'' என்று.

9. அந்தந்த‌ சீசனில் கிடைக்கும் பொருளை வருஷம் பூரா கிடைக்கிற‌ மாதிரி எப்ப‌ மனுஷன் மாத்த ஆரம்பிச்சானோ, அப்பவே உலகம் அழிய‌ ஆரம்பித்துவிட்டது.

10. பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய‌ நினைக்கும் பெற்றோர்கள், அவர்களின் ஜாதகத்தை ஆராய்வதற்கு முன்னர் அவர்களின் செல்போனை ஆராய்ந்து பார்த்தாலே பாதி வேலை மிச்சமாகும்.

4
Average: 4 (1 vote)

Comments

பத்தாவது... சூப்பர். :)))

‍- இமா க்றிஸ்

1,2,8,10 அருமையோ அருமை மா!!!
உங்கள் எழுத்துக்களை தொடருங்கள்!!! வாழ்த்துக்கள்!!!

"Patience is the most beautiful prayer !!!"

எல்லாமே சூப்பர்,
சில போஸ்ட் சிரிப்பா இருந்தாலும் நம்மள சிந்திக்கவும் வைக்கும் ரஜினி ம்மா.

இதோ என் பங்குக்கு கொஞ்சம்,

1. படிச்சவன் பாடம் நடத்துறான், படிக்காதவன் பள்ளி கூடத்தையும்,
கல்லூரியையும் நடத்துறான்.

2. சாப்பிட்டதும் வெத்தலை டப்பாவை திறந்தது அந்த காலம், மருந்து
டப்பாவை திறக்கிறது இந்த காலம்.

3. இதுவும் கடந்து போகும்னு தெரியும் ஆனா அது ஏன் இவ்ளோ மெதுவா
நடந்து போகுதுனு தான் தெரில.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

டியர் ரஜினி
முதல்,கடைசி கருத்தும் அருமை,உண்மையும்கூட‌.எனக்கு தெரிந்த‌ தோழியின்
பெண்ணை அப்படி பார்த்து,பார்த்து வளர்த்தார்கள்.பெற்றோர்கள் சொல் கேட்டு
நல்லபெண்ணாகத்தான் இருந்தது.செல்போனும்,கம்யூடரும் பார்க்க‌ ஆரம்பித்த‌
திலிருந்து நிறைய பொய் சொல்ல‌ ஆரம்பித்தாள்.ஏதோ கிரகம் சரியில்லை என்றுஜாதகம், பரிகாரம் என்று பார்த்துக்கொண்டிருக்க‌,அப்பெண் பாதி படிப்பில் காலேஜ் போகிறேனென்று கூறிவிட்டு ஒரு பையனோடுஓடிவிட்டாள்.பாவம் பெற்றவர்கள்காவல் நிலயத்திற்க்கு செல்ல‌,அங்கு அப்பையனோடு வந்த‌ பெண் அவனோடுதான்செல்வேன் எனகூறிவிட்டது.அவர்கள் இன்னமும் கலங்கிபோய் அழுதவண்ணம்உள்ளனர்.அத்தனை வருடம் பெற்று வளர்த்த‌ தாய் தந்தையை
எப்படி மறக்க‌ முடிகிறதோ? நன்றி கெட்டவர்கள்.
தங்களின் கருத்துக்கள் மிகமிக‌ அருமை.வாழ்த்துக்கள்!!

வலைப்பூவில் சிலது மத்தாபூவாக இருக்கும், சிலது தன்னம்பிக்கையை மலரச்செய்வதாக இருக்கும். சிலவை சிந்திக்க வைப்பவையாகவும். சிலது ஒரு சொட்டு கண்ணீர்பூ பூக்கவைப்பதாகவும் இருக்கும்.

இப்ப மேஹிதான் சிக்கிட்டு சின்னாபின்னமாகிட்டு இருக்கு. குறளாகவும் குறுந்தகவலாகவும் வந்துட்டே இருக்கு. (ச்ச்ச்சே என்ன அழகா எழுதறோம்))).

சிந்திக்க வெச்சது
"வெறுப்பது யாராக இருந்தாலும்..
நேசிப்பது நீங்களாக இருங்கள்"

()()()()()()()()()()()()

"யானைகள் வாழும் பூமியில்தான் எறும்புகளும் வாழ்கின்றன
பூனைகள் வாழும் வீடுகளில்தான் எலிகளும் வாழ்கின்றன
பாம்புகள் வாழும் வயலில்தான் தவளைகளும் வாழ்கின்றன
வாழ்க்கை என்பது ஏய்த்துப் பிழைப்பதல்ல போராடி ஜெயிப்பது.."

சிரிக்க வெச்சது:
"திகில் படம் தராத பயத்தை மனைவியின்
ஐந்து மிஸ்டு கால் தந்துவிடுகிறது"

இதனை எப்படி வேணாலும் எடுத்துக்கலாம். வீட்டில் தனியாக இருக்கும் மனைவி என்ன அவசரத்திற்காக அழைத்திருப்பாரோ..அநாவசியமாக அழைக்க மாட்டாரே ஏதேனும் ஆபத்தாக இருக்குமோ என்றும்... இல்ல அவியவியளுக்கு எப்பிடி தோணுதோ அப்பிடி...ஸோ இதனை சிரிப்பூ..சிந்திப்பூனு 2 விசயத்துக்கு வெச்சுக்கலாம்.

அழவைத்தது வேண்டாங்க... சிரிப்பூபோடய முடிச்சுப்போம்..
நல்லா இருக்குங்க ரஜினி மேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய்,
''பத்தாவது சூப்பர்'''வாழ்த்துக்கு நன்றி இமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

'''அருமையோ அருமை\''உங்கள் எழுத்துக்களை தொடருங்கள்\வாழ்த்துக்கள்/''நன்றி சங்கமி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

அருமை ரஜினி அக்கா. உங்களின் கருத்துக்கள் தொடர வாழ்த்துக்கள் அக்கா

ஹாய்,

என் பதிவை பாராட்டியதற்கு நன்றிம‌. நீங்க‌ கொடுத்த‌ கருத்துக்களும் சூப்பர்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹலோ,

''முதல், கடைசி கருத்தும் அருமை. உண்மையும் கூட‌''பாராட்டுக்கு நன்றிங்க‌. பெற்றோர்ப் பற்றிய‌ உங்க‌ ஆதங்கம் நமக்கு புரிகிறது. அவர்களுக்கு புரியவில்லையே. காதலன் வாங்கிக் கொடுத்த‌ ஐந்து ரூபாய் ஐஸ் கிரீம் லே அவள் வாழ்க்கை கரைந்து விடப்போகுது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள‌ வேண்டும் என்பதே நமது ஆதங்கம்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

''திகில் படம் தராத‌ பயத்தை மனைவியின்
ஐந்து மிஸ்டு கால் தந்து விடுகிறது'' எப்படி எல்லாம் யோசிக்கிறிங்கப்பா.
''நல்லா இருக்குங்க‌''பாராட்டுக்கு சந்தோஷம்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
உங்கள் வாழ்த்துக்கு நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

Ithu naan padithu rasithathu
I am not the owner of that msg;))))))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

YELLAME SUPER...

எல்லாப் பூவுமே அழகு:))
நல்ல‌ தொகுப்பு ரஜினி

குட் ஒன்... எல்லாமே நல்லா இருக்கு :) எங்க‌ தான் எல்லாரும் இப்படி எல்லாம் பிடிக்கறீங்களோ ;) என் மன்டையில் ஒரு சரக்கும் இல்லை. ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாமே சூப்பர். படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்தேன். அழகான‌ வாக்கியங்கள். ஆழமான‌ கருத்துக்கள். நான் மிகவும் ரசித்தது,

//அந்தந்த‌ சீசனில் கிடைக்கும் பொருளை வருஷம் பூரா கிடைக்கிற‌ மாதிரி எப்ப‌ மனுஷன் மாத்த ஆரம்பிச்சானோ, அப்பவே உலகம் அழிய‌ ஆரம்பித்துவிட்டது.//

வாயாலே (நாக்காலே) மனிதன் கெட்டு போகிறான். அன்று பேச்சு. இன்று சுவைக்காக‌ இப்படி சாப்பிட்டு (செய்ற்கை தயாரிப்பு, உரம் போட்டு தயாரிப்பு பொருட்களை). எல்லாமே அருமை ரஜினி...

எல்லாம் சில‌ காலம்.....

எல்லா கருத்துக்களும் ரொம்ப நல்லா இருக்குங்க.
சிரிப்புடன் சிந்திக்க வைத்தது. நன்றிங்

நட்புடன்
குணா