குப்பையான விஷயம் அல்ல

’க்ளீன் இந்தியா’ என்ற முழக்கம் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

குப்பையை தரம் பிரித்துப் போடுங்கள் என்று சென்னை மாநகராட்சி சில வருடங்களூக்கு முன்னால் கேட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்.

வண்ண வண்ண குப்பைத் தொட்டிகளும் வீட்டுக்கு வீடு கொடுத்தார்கள் என்று சொல்லப்பட்டது.

அரசாங்கம் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நாமே குப்பைகளை தரம் பிரித்துக் கொட்டினால், வீட்டுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

எப்படி என்று பார்ப்போம்.

குப்பைகளைக் கீழ்க்கண்ட பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்;

1) மறு சுழற்சி செய்யக் கூடிய ஈரமான குப்பை(வெட் ரீசைக்ளபிள்)

2) மறு சுழற்சி செய்யக் கூடிய உலர்ந்த குப்பை(ட்ரை ரீசைக்ளபிள்)

3) மறு சுழற்சி செய்ய இயலாத பயோ மெடிகல் குப்பை

4) எலெக்ட்ரானிக் குப்பை எனப்படும் ஈவேஸ்ட்

5) இது தவிர காயம் ஏற்படுத்தக் கூடிய உடைந்த பொருட்கள்

ஒவ்வொரு பிரிவிலும் பொதுவாக வரக் கூடியவை என்னென்ன என்று பார்க்கலாம்:

1. வெட் ரீசைக்ளபிள்

அடுக்களைக் குப்பை மற்றும் தோட்டத்துக் குப்பை என்று சொல்லப்படும் கிச்சன் வேஸ்ட் மற்றும் கார்டன் வேஸ்ட்
காய்கறிக் கழிவு, மட்டன், சிக்கன், சாதம், டீத்தூள், காப்பித்தூள், முட்டை ஓடு, எலும்புத்துண்டு, பழங்கள், பேப்பர்கள், மரத்தூள், தீக்குச்சி போன்றவை இந்தப் பிரிவில் வரும்.

இவைகளை மக்க வைத்து, உரமாக்க முடியும்.

2. ட்ரை ரீசைக்ளபிள் வேஸ்ட்:

ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், கேரி பேக், ப்ளாஸ்டிக் பொம்மைகள், எண்ணெய்க் குப்பிகள், பேஸ்ட் , சீப்பு, பென்சில், ஃபைல், பேனா, முட்டை டப்பா, அட்டை டப்பாக்கள், அட்டை மற்றும் ப்ளாஸ்டிக் கப்கள், தட்டுகள், அலுமினிய ஃபாயில்கள், பிஸ்கட் ரேப்பர்கள், பாத்திரங்கள், ஹேங்கர்கள், தேங்காய் சிரட்டை போன்றவை இந்தப் பிரிவில் வரும்.

இவற்றை மறு சுழற்சி செய்ய முடியும்.

3. நான் ரீசைக்ளபிள் பயோ மெடிகல் வேஸ்ட்:

உபயோகப்படுத்தப்பட்ட சிரிஞ்சு, கத்தரிக்கோல், கத்தி, பிளேட், ரேஸர், சேஃப்டி பின், குண்டூசி, ஜாடி, நகம், தலைமுடி, பூட் பாலிஷ், டயாபர்கள், நாப்கின், க்ளவுஸ், பூச்சி மருந்து பாட்டில், லிப்ஸ்டிக், காலாவதியான மருந்து, மாத்திரைகள், காது பட்ஸ், பஞ்சு போன்றவை இந்தப் பட்டியலில் வரும்.

இவற்றை நன்றாக பேக் செய்து, டிஸ்போஸ் செய்து விட வேண்டும்.

4. ஈ வேஸ்ட்:

மொபைல் ஃபோன், சார்ஜர், சி.டி.க்கள், டிவிடி, மைக்ரோ அவன், ரிமோட், கார் பேட்டரி போன்றவை இந்தப் பிரிவில் வரும்.

இது தவிர – குப்பையை எடுப்பவர்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு, உடைந்த கண்ணாடி, பீங்கான் தட்டு மற்றும் கிண்ணங்கள் போன்றவற்றை, தனியாக, கவனமாக டிஸ்போஸ் செய்ய வேண்டும்.

இப்படி ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால், சுற்றுப்புற சூழலும் நாமும் நலமுடன் இருக்கலாம்.

செய்யலாம்தானே!!!

5
Average: 5 (2 votes)

Comments

அன்புத் தோழிகளுக்கு,

ரொம்ப‌ ரொம்ம்ம்ப‌ நாளாச்சு, வலைப் பதிவிட்டு!

கொஞ்ச‌ நாளைக்கு லீவு எடுக்கலாம்னு ஒரு ஐடியா, (ஹும், இப்ப‌ மட்டும் ரெகுலரா அட்டென்டென்ஸ் குடுக்கற‌ மாதிரி ‍ அப்படின்னு கோவிக்கக் கூடாது), அதனால‌ ஒரு பதிவு போட்டு வச்சா யாரும் மறக்காம‌ இருப்பீங்கதானே.

டைம் கிடைக்கிறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும், அதுக்கப்புறம் வந்து பாக்கறேன்.

இப்போதைக்கு பை ஃபார் நவ்!!!!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதா
ரொம்ப‌ நல்ல‌ விஷயம்.
அரசாங்கமே எல்லாம் செய்து தரணும்னு எதிர்பார்க்காமல் நாமும் ஒத்துழைக்க‌ வேணும்.
அப்போ தான் க்ளீன் இந்தியா ஆக‌ முடியும்.
சில‌ வெளினாடுகளைப் பார்க்கும் போது நம் நாடும் இப்படி சுத்தமா இருக்கணும்னு ஆதங்கமா இருக்கும்.
அரசு போடும் சட்டதிட்டங்களை நாம் மதிக்கணும். நல்லதுன்னா ஏத்துக்கணும் இல்லியா?
1. இதை எங்க‌ வீட்டு தோட்டத்தில் மரத்தின் அடியில் உரமாக‌ பயன்படுத்தறேன்.

2, 3, 4. இவற்றை பேக் செய்து டிஸ்போஸ் செய்கிறேன்.
உடைந்த‌ கண்ணாடியை எடுத்துச் சொல்லி தனியாக‌ போடுவது உண்டு.

அனைவரும் பொறுப்பாக‌ ஒத்துழைத்தால் சுத்தமான‌ பாரதம் கிடைக்கும்.:)))

யாருடா குப்பையை பற்றி பேசியதுன்னு நினைச்சேன் ;) அம்மனி தானா?? லீவ் போட்டுட்டு போறதுக்கு இப்படி ஒரு ஐடியா இருக்கா? நாமலும் இனி ஃபாளோ பண்ணுவோம். எதுக்காக‌ போட்டிருந்தாலும் நல்ல‌ பயனுள்ள‌ தகவல் சீதா. எப்பவும் போல‌ விளக்கமான‌ பதிவு. :) ஹேப்பி ஹாலிடேஸ் சீதா ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது நமக்கு மட்டும் அல்ல நாட்டுக்கே பயனுள்ள‌ குறிப்பு.

ஒரு படத்தில் வரும் "அவன‌ நிறுத்த‌ சொல்லு நான் நிறுத்தறேன்னு." இது மாறி தான் மத்தவங்க‌ மாறட்டும் மத்தவங்க‌ மாறட்டும்னு எல்லோரும் மத்தவங்கள குறை சொல்லிட்டு திரியறோம். மத்தவங்க‌ மத்தவங்கனு சொன்னா எதிரில் இருப்பவங்களுக்கு நாம‌ தான் மத்தவங்க‌. ஆக‌ முதலில் தனி ஒரு மனிதனும் தானாக‌ மாற‌ வேண்டும்னு அழகா சொல்லி இருக்கீங்க‌. அருமையான‌ பதிவு அம்மா.

ஆனா நாம‌ என்ன‌ தான் தனி தனியா பிரிச்சி வெச்சாலும் குப்ப‌ வண்டி காரங்க‌ வந்து எல்லாத்தயும் சேர்த்து ஒன்னா தான் எடுத்துட்டு போறாங்க‌. என்ன‌ பண்ண‌? அவங்களுக்கு ஒரு வண்டி தான‌ இருக்கு. அதிலே பாகங்களாக‌ பிரித்து இல்லையே. அதனால் நாங்க என்ன‌ பண்றோம்னா காய்கறி கழிவுகளை (வெட் ரீசைக்கிளபில்) செடிகளுக்கு உரமாக‌ போடுகிறோம். பேப்பரை பேப்பர் காரனிடமும் பிளாஸ்டிக்கை பிளாஸ்டிக் காரனிடமும் போடுகிறோம்.

எல்லாம் சில‌ காலம்.....

சீதாமேடம் நல்ல பதிவு.
நானும் மக்கும் குப்பையை உரமாக்கி செடிகளுக்கு போட்டுடுவேன். நிறைய மாற்றங்கள் வரணும்னா மக்களாகிய நம் ஒத்துழைப்பும் மிக அவசியம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

போஸ்ட்டைச் சொன்னேன் சீதா. :-)
படிச்சுட்டேன். கமண்ட் போடாம, இங்க வரும் கமண்ட் எல்லாம் படிக்கப் போறேன். :-)

‍- இமா க்றிஸ்