இந்தியன் நூடுல்ஸ்

'இடியாப்பத்தின் வாழ்வுதனை நூடுல்ஸ் கவ்வும்
மீண்டும் இடியாப்பமே வெல்லும்'
.
மேகி நூடுல்ஸை தடை செய்தாலும் செய்தாங்க‌, வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் புது குறள் கற்பிக்க‌ ஆரம்பிச்சுட்டாங்க‌.

மேகி நூடுல்ஸ் தயாரிப்பின் போது சேர்க்கப்படும் மசாலாவை கொளுத்திக் காட்டி அது பட்டாசாக‌ சுடர் விட்டு பொரி பொரியாக‌ எரிவது வீடியோவில் வலம் வருது.

தொடர்ந்து பாஸ்தா, மக்ரோனியும் இந்த‌ லிஸ்டில் சேரலாம்.

இதெல்லாம் மைதா மாவின் வெவ்வேறு அவதாரங்கள் என்றே நினைக்கிறேன்.

எப்பவுமே பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவை வாங்கும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.

இதிலே என்னவெல்லாம் சேர்த்துருக்காங்க‌...
இது எப்படி கெட்டுப் போகாமல் இருக்கு...
என்னென்ன‌ கெமிகல்ஸ் கலந்திருக்கு...

இப்படில்லாம் கேள்வி எழுப்பிப் பாருங்க‌.

நம் குழந்தைகளுக்கு நாம் சிறு வயது முதலே ஆரோக்கியமான‌ உணவைப் பரிமாறி பழக்கப்படுத்த‌ வேண்டும்.

இப்போது சிந்தியுங்கள்....

இடியாப்பம் இருக்க‌ நூடுல்ஸ் எதுக்கு?

பச்சரிசியை ஊறவிட்டு ஈரம் போக்கி மிஷினில் நைசாக‌ அரைத்து மாவை நன்கு வறுத்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டால் நினைத்த‌ போது இந்தியன் நூடுல்ஸ் ரெடி.

சிலர் இடியாப்பம் பிழிவதை சிக்கலான‌ விஷயமாக‌ சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

அவர்களுக்காக‌ சில‌ டிப்ஸ்:

தண்ணீரை கொதிக்க‌ வைக்க‌ வேண்டாம். கொதி நிலைக்கு சற்று முன்பே உள்ள‌ சூடு போதும். அதாவது, 100 டிகிரி என்பது கொதி நிலை என்றால் 70 டிகிரி சூடு போதுமானது.
கொதிக்கும் நீரை விட்டு மாவைக் கிளறினால், மாவு கொதி நீரில் வெந்து பிசிபிசுப்பாக‌ ஒட்டிக் கொள்ளும். சரியாக‌ வராது.

உப்பு கலந்த‌ மாவில் சுடு நீரை விட்டு கரண்டிக் காம்பால் கிளறினால் மாவு கைகளில் ஒட்டாமல் பக்குவமாக‌ உருண்டையாக‌ வரும்.
இதை அச்சில் போட்டுப் பிழிந்து ஆவியில் வேகவைத்தால் இடியாப்பம் ரெடி.

இதுதான் எனக்குத் தெரியுமேன்னு சொல்ல‌ வறீங்களா?
அப்போ ஏன் பாக்கெட் நூடுல்ஸ் வாங்கறீங்க‌?

சரி இடியாப்பம் ரெடி. அப்புறமென்ன‌ உங்க‌ கைவரிசையை காட்டுங்க‌. இங்கே தான் நிறைய‌ கிச்ச‌ன் குயின்ஸ் இருக்கிறீங்களே. நம்ம‌ தளத்திலேயே நிறைய‌ இடியாப்ப‌ ரெசிபியும் இருக்கே.

வெல்லம் கலந்த‌ தேங்காய்ப்பால் மற்றும் சொதி இவை இரண்டும் இடியாப்பதிற்கு பொருத்தமான‌ சைடிஷ் ஆகும்.

சாதம் வைத்து செய்யும் அனைத்து ரெசிப்பியும் இடியாப்பத்திலும் செய்யலாம்.
தக்காளி இடியாப்பம்
லெமன் இடியாப்பம்
வெஜிடபிள் இடியாப்பம்
இடியாப்ப‌ பிரியாணி
இப்படி உங்க‌ வீட்டு செல்லங்களை அசத்துங்க‌.

அரிசிமாவில் மட்டுமில்லாமல் வரகு அல்லது கேழ்வரகு மாவை ஆவியில் வேகவைத்து ஆறவைத்து வைத்துக் கொண்டு நினைத்த‌ போது சிறுதான்ய‌ இடியாப்பம் செய்யலாம்.

இனி பாக்கெட் நூடுல்ஸ் பக்கம் தலை வைத்தும் படுக்காதீங்க‌.
நம் குட்டீசின் ஆரோக்கியம் நம் கையில்;))

5
Average: 4.9 (8 votes)

Comments

லைக் போடும் வசதி இல்லாததால்... 5* :-) முதலாவது படம் அழகா இருக்கு நிகிலா.

அதென்ன இந்தியன் நூடுல்ஸ்! இலங்கைலயும் இருக்கு. :-) //சாதம் வைத்து செய்யும் அனைத்து ரெசிப்பியும் இடியாப்பத்திலும் செய்யலாம்.// அதற்கு மேலும் செய்யலாம். இடியப்ப கொத்து, லவேரியா, ஃப்ரைட் ரைஸ் போல ஃப்ரைட் இடியப்பம் எல்லாம் இருக்கே! என் சின்னவர்களுக்கு லவேரியா மாதிரி நடுவில் மிக்ஸ்ட் வெஜ் வைத்து அவித்துக் கொடுத்திருக்கிறேன்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில்... இடியப்பம் காய்ச்சல்காரருக்குக் கொடுக்கும் உணவு. :-)

‍- இமா க்றிஸ்

அன்பு இமா
பதிவிடும் போதே நானும் நினைத்தேன்.
இண்டிலங்கை நூடுல்ஸ்னு ரெண்டு நாட்டையும் சேர்த்து போடலாமான்னு..
ஏனோ தெரியலை அறுசுவைக்கு வந்த‌ பின் மொழி நம் நாட்டை இணைச்சிட்டாப்பல‌ தோணும்.

இங்கேயும் காய்ச்சல் வந்தால் ஆவியில் வேக‌ வைத்து செய்வதாலும், புளிப்பு இல்லாத மாவு என்பதாலும் இதைக் கொடுக்க‌ சொல்லுவாங்க‌.

பதிவுக்கும் பாராட்டுக்கும் 5 ஸ்டாருக்கும் ரொம்பவும் நன்றி இமா:))

நல்ல பதிவு நிகிலா. எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடிச்சது இடியாப்பம்தான். நான் இதுக்கு சொதி, சம்பல், தால் செய்வேன். அசைவம்னா முட்டை குழம்பு இல்லன்னா டின் ஃபிஷ் கறி. இங்க இடியப்பமாவு பாக்கெட் கடைல இருக்கு நான் வாங்குறது இல்ல. நானும் வீட்லேயே மாவு அரைச்சுதான் செய்வேன். சிவப்பரிசிதான் யூஸ் பண்ணுவேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

காலத்திற்க்கேற்ற பதிவு :-)

\\இந்தியன் நூடுல்ஸ்!// மலேசியர்களின் உணவிலும் இடியாப்பத்திற்க்கு தனி இடம் உண்டு நிகிலா :))
காலங்காத்தாலே இடியாப்பத்துடன் அசைவ குழம்புகள் அல்லது மலேசியன் சம்பல் கூட்டி உண்பது அவர்களின் வழக்கம்.

இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தான் இடியாப்பம் உண்ணப் படுகிறது. இடியாப்பத்திற்க்கு கேரளாவில் நூல் புட்டு, நூலப்பம் என்ற பெயர்கள் உண்டு.

எங்கள் வீட்டிலும் இடியாப்பம் அடிக்கடி இடம் பெறும். இங்கு நம்மவர்கள் சொல்வது இடியாப்பம் செய்யவே நேரம் கிடைப்பதில்லை என்று. அதனால் பார்ட்டிகள், பாட் லாக் என்றாலும் இடியாப்பம் தவறாமல் செய்து விடுவேன். நானும் புட்டு, இடியாப்பத்திற்க்கு மாவு வீட்டிலே தயாரித்து விடுவேன். எப்போதுமே மாவு ஸ்டாக் இருந்தால் திடீர் விருந்தினர்களுக்கும் லஞ்ச், டின்னர் என்று பாராமல் எளிதில் செய்திட முடிகிறது. என் மகளுக்குப் பிடித்தது வெஜ் ஸ்டஃப்ட் இடியாப்பம் தான், அவங்களுக்கு இது ஒயிட் நூடுல்ஸ்.
நாங்க மேகி உபயோகிப்பதில்லை, அதற்க்குப் பதிலாக கோதுமையில் தயாரித்த எக் நூடுல் மற்றும் கோதுமை பாஸ்தா தான் வாங்குவோம்.

மதுரையில் கிழக்கு வாசலில் ஒரு மருத்துவமனையின் வாசல் கேட்டுக்கு இருபுறமும் பிளாட்பாஃமில் இடியாப்ப கடை போட்டு விடிய விடிய வியாபாரம் நடக்கும். அவ்வழியே வருகையிலே இடியாப்ப வாசனை பசியை தூண்டும். அந்த ரோட்டில் பயணிப்பவர்கள் யாரும் நின்று வாங்காமல் செல்வதில்லை. அத்தனை பிரபலம் :))

\\தொடர்ந்து பாஸ்தா, மக்ரோனியும் இந்த‌ லிஸ்டில் சேரலாம்.
இதெல்லாம் மைதா மாவின் வெவ்வேறு அவதாரங்கள் என்றே நினைக்கிறேன்.//

ம்ம்.. பரோட்டாவும் அதே அவதாரம் தான்.

நல்ல‌ பதிவு. அரிசி நூடில்ஸ் என்று பேர் வைக்கலாமா?? ;) ஹஹ்ஹா. உண்மை தான்... பாஸ்தா அது இதுன்னு இனி எல்லாம் தடை செய்துடுவாங்கன்னு நம்புவோம். ஆரோக்கியமான‌ வீட்டு உணவு போல‌ வராதே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இடியாப்பம் சூப்பர். நல்ல பதிவு. அருமையான‌ குறிப்பும் கூட‌. ஆனா ஏன் இதுக்கு இடியாப்பம்னு பேர் வந்துச்சி? தெரிந்தால் சொல்லவும். மேகி மசாலா மாறி குர்குரே லேஸ் எரித்தால் கூட‌ ப்ளாஸ்டிக் போல‌ ஊற்றும். இது அனைத்துமே உடலுக்கு கெடுதியானது.

எல்லாம் சில‌ காலம்.....

ஹாய் உமா எப்டி இருக்கீங்க‌? ரொம்ப‌ நாளா ஆளையே காணோமே.

எல்லாம் சில‌ காலம்.....

ரொம்ப நல்லாருக்கேன். நீங்க எப்டி இருகீங்க? லாப்டாப் ரிப்பேருக்கு போய் 2 நாளைக்கு முன்னாலதான் வந்துச்சு. அதான் வரமுடியல.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நூடுல்ஸ் வாங்கினா தண்ணிய கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸ்ஐ போட்டு நன்கு அலசிவிட்டுத்தான் சமைப்பேன். ஸடிக்கியா வர்துக்கு மெழுகு சேர்ப்பாஙகளாமே. எல்லாம் சொல்லிக் கேட்டதுதான்.
அதுக்குள்ள இருக்கும் பொட்டலத்த போடமாட்டேன்.
பதிலா நம்ம சொந்த பல சரக்குதான் போடுவேன்.
ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்காதான் அந்த சமையல். அதுனால இனி அவங்க சேவை இல்லேனு வருத்தமே இல்ல. சில குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாகவும் இதனை எடுத்து வருவதை கேட்டு வருந்தியிருக்கிறேன்.
அருமையான பதிவு நிகி. மொபைல் டைப்பிங் கொஞ்சம் தடுமாறுது...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்களோட‌ எளிமையான‌ சமையல் குறிப்புகள் எனக்கு பிடிக்கும்;)
ஆவியில் வேக‌ வைப்பதால் எனக்கும் இடியாப்பம் பிடிக்கும்.
நான் சொதியும் கூடவே தேங்காய்ப் பாலும் வைப்பேன்.
தால் வைத்ததில்லை.
முட்டை குழம்பும் பொருத்தமா இருக்கும்.
சிவப்பரிசி வெள்ளை அரிசியை விட‌ சத்து நிறைந்ததுன்னு படிச்சிருக்கேன்.
அப்போ உங்க‌ வீட்டு இடியாப்பம் சிவப்பா இருக்கும்னு சொல்லுங்க‌:))

//காலங்காத்தாலே இடியாப்பத்துடன் அசைவ குழம்புகள் அல்லது மலேசியன் சம்பல் கூட்டி உண்பது அவர்களின் வழக்கம்//
அசைவ‌ குழம்பு ரொம்பவும் பொருத்தம் வாணி. ஆனால், எங்கள் வீட்டில் சைவம் தான் அதிகமா சமைப்போம். எப்பவாச்சும் தான் அசைவம்.

//மலேசியன் சம்பல்// ம்ஹூம் இது எனக்கு தெரியாது வாணி.
//நூல் புட்டு // பேரு ரொம்பவே பொருத்தம்:))

//எப்போதுமே மாவு ஸ்டாக் இருந்தால் திடீர் விருந்தினர்களுக்கும் லஞ்ச், டின்னர் என்று பாராமல் எளிதில் செய்திட முடிகிறது.//
உண்மை தான் வாணி. நான் எப்பவும் மாவு ஸ்டாக் வச்சிருப்பேன்.

//இடியாப்பம் அவங்களுக்கு இது ஒயிட் நூடுல்ஸ்.//
ஹா...ஹா... இனி குட்டீஸ் நூடுல்ஸ் கேட்டால் ஒயிட் நூடுல்ஸ் கொடுத்துடலாம்னு சொல்லுங்க‌:)))

//நல்ல‌ பதிவு. அரிசி நூடில்ஸ் என்று பேர் வைக்கலாமா?? ;) ஹஹ்ஹா. உண்மை தான்... பாஸ்தா அது இதுன்னு இனி எல்லாம் தடை செய்துடுவாங்கன்னு நம்புவோம். ஆரோக்கியமான‌ வீட்டு உணவு போல‌ வராதே.//

வாணி வீட்டில் ஒயிட் நூடுல்ஸ்னு பேரு சூட்டியிருக்காங்க‌,
வனி வீட்டில் அரிசி நூடுல்ஸ் ஆ? சூப்பர்.....
எப்படியும் நூடுல்ஸ் ங்கற‌ பேரை விட‌ மாட்டோம் ல‌...:))

பாஸ்தாவும், மக்ரோனியும் லிஸ்டில் இருக்குன்னு படிச்சேன். ஆனா, தடை வருமா? அல்லது வந்த‌ தடையும் விலகுமா ந்னு தெரியலை. சிங்கப்பூரில் தடை நீக்கம்னு இன்னிக்கு நியூஸ் வனி.

எப்பவும், என்னிக்கும் வீட்டு உண‌வே பெஸ்ட்.:))

//ஆனா ஏன் இதுக்கு இடியாப்பம்னு பேர் வந்துச்சி? தெரிந்தால் சொல்லவும். மேகி மசாலா மாறி குர்குரே லேஸ் எரித்தால் கூட‌ ப்ளாஸ்டிக் போல‌ ஊற்றும். இது அனைத்துமே உடலுக்கு கெடுதியானது.//

இடியாப்பம் பேரு ஏன் வந்திச்சு? நல்ல‌ கேள்வி பாலா. ஆனால், பதில் தான் என்னிடம் இல்லை.
தோசை மாவை கல்லில் விடும் போது 'தோ' அப்ப‌டீன்னும் புரட்டும் போது 'சை' அப்படீன்னும் ஓசை வருவதால் தோசை என்று பெயர்னு படிச்சிருக்கேன்.
இடியாப்பத்துக்கு நூல் புட்டு என்ற‌ கேரளப் பெயர் பொருத்தமா இருக்கும் பாலா:))

குர்குரே, லேஸ் எல்லா பாக்கெட் உண‌வையும் தவிக்கலாம் பாலா....

//நூடுல்ஸ் வாங்கினா தண்ணிய கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸ்ஐ போட்டு நன்கு அலசிவிட்டுத்தான் சமைப்பேன். ஸடிக்கியா வர்துக்கு மெழுகு சேர்ப்பாஙகளாமே.
அதுக்குள்ள இருக்கும் பொட்டலத்த போடமாட்டேன்.
பதிலா நம்ம சொந்த பல சரக்குதான் போடுவேன்//
அருள், நீங்க‌ முன் ஜாக்கிரதையா இருக்கீங்க‌. ஆனா, குட்டீஸ்லாம் அந்த‌ பொட்டலத்துப் பொடியை தான் விரும்பி கேட்டு நச்சரிப்பாங்க‌.

//இனி அவங்க சேவை இல்லேனு வருத்தமே இல்ல//
ஹா...ஹா.... சேவையின் தேவை இனி இல்லை நு சொல்றீங்க‌:))
இடியாப்பதிற்கு சேவை என்றும் பெயர் உண்டுன்னு ஞாபகமா சொல்றீங்க‌:))

காமெடி பண்ணாதீங்க‌ நிகி. தோசையை கல்லில் ஊற்றும் போது "சை" னு தான் சத்தம் வரும். "தோ"னு சத்தம் வராது. அதை திருப்பி போடும் போது ஒரு முறை "சை" னு சத்தம் வரும். இருமுறை சைனு சத்தம் வரதால‌ தோ (ஏக் - ஒன்று தோ - இரண்டு ஹிந்தியில்) தோ சை னு பேர் வந்துச்சி. இதன் தமிழ் பெயர் ஈரோசை (இரண்டு முறை ஓசை வருவதால்).

இடியாப்பம் அவிப்பதால் புட்டு. நூல் மாறி இருக்கறதால‌ நூல்புட்டு அருமையான‌ பெயர். இதையே நாம‌ ஃபாலோ பண்ணலாம். ஆனா மத்தவங்களுக்கு தான் புரியாது. எதுக்கு வம்பு இடியாப்பமே இருந்துட்டு போகட்டும். விட்டுடலாம்.

எனக்கு என்ன‌ தோணுதுனா ஆப்பம் வெறும் அரிசி மாவுல‌ தான் செய்வாங்க‌. அதே மாறி இதையும் அரிசி மாவு இடிச்சி செய்றதால‌ (அந்த‌ காலத்துல‌ உரல்ல‌ இடிச்சி செஞ்சாங்க‌ இல்ல‌) இடியாப்பம்னு (இடி ஆப்பம்) பேர் வந்து இருக்கும்னு தோணுது. நீங்க‌ என்ன‌ சொல்றீங்க‌? வேற‌ யாரும் கலாய்காதீங்க‌ பா. பாலா பாவம்.

எல்லாம் சில‌ காலம்.....

Nammaalungaluku peyar aangilathula irundhaa dhaan pidikkum.. so 'rice noodles' ;)

Bala... bala... bala... hahhaa.. idhai dhaan naanum ninaichen.. kalaaipaanganu dhaan sollaama ponen ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டைமிங்க்ல போட்ட அருமையான பதிவு,
நானும் நூடுல்ஸ் ரொம்ப நாள் முன்னாடி சாப்பிட்டு இருக்கேன், சில வருசத்துக்கு முன்னாடியே இதை பத்தி கெடுதல் நான் படிச்சேன், அதனால சாப்பிடறத விட்டுட்டேன்,

லேஸ், குர்குரே கண்டிப்பா கெடுதல் தான், சாப்பிடவே கூடாது,
அதே போல கூல்டிரிங்க்ஸ் ம்கூம் குடிக்கவே கூடாது, எங்க எல்லாரும் கூல்டிரிங்க்ஸ் பாட்டிலும் கையுமா தான் இருக்காங்க..... என்ன பண்றது?

//இந்தியன் நூடுல்ஸ்// ஏற்கனவே பெயர் சொல்லீட்டாங்க, இருந்தாலும் நானும் சொல்றேன் ஹெல்தி நூடுல்ஸ் னு வச்சி இருக்கலாம், பிராக்கட்ல (பக்க விளைவுகள் இல்லாதது) னு போட்டு இருக்கலாம், எப்படி என் ஐடியா?

இடியாப்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஸ்வீட் காரம் எதுனாலும் எனக்கு டபுள் ஓகே, ராகி இடியாப்பமும் பிடிக்கும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அருமை நிகி அக்கா. நானும் 5 ஸ்டார் கொடுக்கிறேன்.

//இருமுறை சைனு சத்தம் வரதால‌ தோ (ஏக் - ஒன்று தோ - இரண்டு ஹிந்தியில்) தோ சை னு பேர் வந்துச்சி. இதன் தமிழ் பெயர் ஈரோசை (இரண்டு முறை ஓசை வருவதால்).// ஒத்துக்கறேன்...ஒத்துக்கறேன் பாலா... மறந்துட்டேன்...நீங்க‌ கலாய்ய்க்க‌ வருவீங்க என்பதை.....

பாலா டவுட்டு!!!!
ஆப்பம் ஒரு முறை தான் ஓசை வரும்...அதுக்கு ஓரோசைன்னு பேரு சூட்டலாமா?
நானும் கொஞ்சம் கலாய்ச்சிப் பார்த்தேன்:))))

//அரிசி மாவு இடிச்சி செய்றதால‌ (அந்த‌ காலத்துல‌ உரல்ல‌ இடிச்சி செஞ்சாங்க‌ இல்ல‌) இடியாப்பம்னு (இடி ஆப்பம்) பேர் வந்து இருக்கும்னு தோணுது.//
நானும் யோசித்தேன். ஆனால், ஆப்பத்துக்கும் அந்தக் காலத்தில‌ மாவு உரல்ல‌ இடிச்சி தான் செய்வாங்க‌....... (அதனால‌ இருந்துட்டுப் போகட்டும்னு சொல்லாம‌ விட்டுட்டேன்).)))

//Nammaalungaluku peyar aangilathula irundhaa dhaan pidikkum.. so 'rice noodles' ;)

Bala... bala... bala... hahhaa.. idhai dhaan naanum ninaichen.. kalaaipaanganu dhaan sollaama ponen ;)//

ஆங்கிலப் பேரு தான் பிடிக்குமா?
ஓ!!! அதனால் தான் அரிசி நூடுல்ஸ் ரைஸ் நூடுல்ஸ் ஆகிடுச்சா?

மொத்தத்தில‌ எல்லோரும் சேர்ந்து என்னைக் கலாய்க்கறீங்க‌.......:)))

//அதே போல கூல்டிரிங்க்ஸ் ம்கூம் குடிக்கவே கூடாது, எங்க எல்லாரும் கூல்டிரிங்க்ஸ் பாட்டிலும் கையுமா தான் இருக்காங்க‌... //
எங்க‌ வீட்ல‌ கெஸ்ட் வந்தால் மட்டுமே கூல் டிரிங்க்ஸ். நாங்க‌ யாரும் எடுக்க‌ மாட்டோம் சுபி.

//ஹெல்த்தி நூடுல்ஸ் // பேரு ஹெல்தியா இருக்கு.சுபி...ஆனா, சிக்கல் இல்லாம‌ வாயில் நுழையறாப்பல‌ நல்லதொரு தமிழ்ப் பேரு சூட்டுங்களேன்:)))
ராகி இடியாப்பமும் சூப்பரா இருக்கும்...சுபி

பாராட்டுக்கும், 5 ஸ்டாருக்கும் நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி...(5 தரம் சொல்லியாச்சே):)))

உங்க முறையில் தான் நானும் இடியாப்பம் செய்வேன்.:). எங்க வீட்டுல இடியாப்பத்துக்கு சிக்கன் குழம்பு, இல்ல பால் இதுதான் கேட்பாங்க.

Be simple be sample

இடியாப்பத்துக்கு நான்வெஜ் என்றால் சிக்கனும், வெஜ் என்றால் சொதியும் பொருத்தமா இருக்கும்.
இனிப்பு வேண்டுமென்றால் தேங்காய்ப் பால் வெரி டேஸ்டி. அதில் ஏலக்காயும் சேர்க்கலாம். மணக்க‌ மணக்க‌ சாப்பிடலாம்:))

இடியப்பத்துக்கு சம்பலும் சீனிச்சம்பலும் கூட நல்லா இருக்கும். :-) // நான்வெஜ் என்றால் சிக்கனும்// இறால் குழம்பும் நல்ல பொருத்தம்தான்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா
நன்றி.
சம்பல் ம் அறுசுவையில் குறிப்பு இருக்கும் தானே. தேடிப் பார்க்கிறேன். அது சைவமா அசைவமா?

நிகிலாவுக்காக நர்மதாவின் இந்தக் குறிப்பை மேலே கொண்டுவருகிறேன். :-)
இதையும் பாருங்க நிகிலா.
http://www.arusuvai.com/tamil/node/8546
http://www.arusuvai.com/tamil/node/4432
http://www.arusuvai.com/tamil/node/9110#comment-351084

Nikila குறளும் அருமை...கருத்தும் அருமை...
கடுகு, உளுத்த பருப்பும், பச்சை மிளகாய் ,கருவேப்பிலை , மோர் மிளகாய் தாளித்து... இடியாபத்துடன் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

அன்பு தேவசகி
நல்ல‌ எளிமையான‌ குறிப்பு. உடனே செய்து விடலாம்.
அவசியம் செய்து பார்க்கிறேன்.
பதிவுக்கு நன்றி:)))