முதல் மூன்று மாதம் சந்தேகங்கள் !!!

அன்பு தோழிகளுக்கு வணக்கம்,

திருமணம் ஆகி நான்கு வருடம் கழித்து தாய்மை அடையபோகும் சந்தோஷத்தில் இருக்கிறேன், எனக்கு இது 12 வது வாரம் , நான் என் காவருடன் USA california வில் இருக்கிறேன் , எனக்கு மிகவும் மயக்கம் குமட்டல் , வாந்தி (அவப்போது) இருக்கிறது, இந்திய வில் இல்லையே என்ற ஏக்கம் மிகவும் வருகிறது, ரொம்ப சோர்ந்து போகிறேன் சாப்பிட அவளவாக பிடிக்க வில்லை , பசி நேரத்தில் சாப்பிடுகிறேன்..

குழந்தை நல்லபடியாக வளர்கிறது என்று மருத்துவர் கூறி இருக்கிறார், நெஞ்சு எருச்சல் ஏற்படுகிறது சிலசமயம் , மற்றும் குமட்டலுக்கும் ஏதேனும் வீட்டு மருத்துவம் கூறவும் அன்பர்களே !!!

இங்கு நிறைய சந்தேகங்கள் மருதுவரிடம்கேட்க முடிய வில்லை, அதனால் சாப்பிட கூடாத உணவு வகைகள் சிலவற்றை கூறுங்கள்...

நன்றி
ரேவதி

முதலில் வாழ்த்துக்கள். :-) //பசி நேரத்தில் சாப்பிடுகிறேன்..// இப்போதைக்கு அது போதும்.

//குழந்தை நல்லபடியாக வளர்கிறது என்று மருத்துவர் கூறி இருக்கிறார்,// நல்ல செய்தி இல்லையா! சந்தோஷமாக இருங்க.

//இங்கு நிறைய சந்தேகங்கள் மருதுவரிடம்கேட்க முடிய வில்லை,// ஏன்? உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் அவங்க பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் ரேவதி. எதுவாக இருந்தாலும் கேளுங்க. //அதனால் // அதனால், இதனால் எல்லாம் வேண்டாம். ஒழுங்கா அங்கேயே கேட்டுக்கங்க.

//சாப்பிட கூடாத உணவு வகைகள் சிலவற்றை கூறுங்கள்...// அப்படி எதுவும் இல்லை. எல்லாமே சாப்பிடக் கூடிய உணவுகள்தான். எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சினையே இராது. தினமும் ஒரே மாதிரி உணவாகச் சாப்பிடாமல் மாற்றி மாற்றிச் சாப்பிடுங்க. எல்லா வகையான சத்துக்களும் சமமாகக் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

hai friends enaku last period date april 16 th now 8 weeks varanum but 6 weeks thaan iruku buut heartbeat innum varala doctor growth kammiya irukunu soldranga then beta hsg test eduka sonnanga tday thaan result varum epo heartbeat varum pls help me

வாழ்த்துக்கள் :) நான் சொல்ல‌ நினைச்ச‌ பாதியை இமா சொல்லிட்டாங்க‌... மிச்சம் ஒன்னே ஒன்னு... நெஞ்சு எறிச்சல் என்றால் எண்ணை பொருள், காரம் அதிகம் எடுக்காதீங்க‌. சாப்பிட்டதும் படுக்காதீங்க‌. நீரை வெது வெதுன்னு குடிங்க‌. :) உடம்பை பார்த்துக்கங்க‌, பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

pls vanitha mam reply for my Question

Bayapadaadhinga... last period date vechu solradhaivida sila neram 1 or 2 weeks munna pinna irukkalaam. Relaxeda unga kuzandhai nalama irukkunnu nambunga... nalamaga irukkum. Dr solra test edunga... thappillai. Bayam padhattam kudadhu. Ungalukku en piraathanaigal.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u madam but today doctr next Saturday scan panna sollirukaanga apo enaku 7 weeks but heartbeat varuma illa 8 th week edukalama

Dr adutha vaaram paarka sonnaa paarthudalaam... adhanaal onnumillaiye. Manasula nambikkaiyoda iraivanai vendikittu amaidhiyaa irunga. Nalladhe nadakkum.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு Imma, Vani அவர்களுக்கு,

மிகவும் நன்றி , நீங்கள் சொல்வது போல் செய்கிறேன். இங்கு உணவு பழக்கம் வேறு என்பதாலும் பொதுவாக மருத்துவர் ஆலோசனை கூறுவார்...

எனக்கு என்னும் ஒரு ஆலோசனை கூறுங்கள் " சிலசமயம் வயறு உப்பசம் ஆகா உள்ளது gas அதிகம் உள்ளது போல் இருக்கிறது அதற்க்கு ஏதேனும் வழிகள் ?"

நன்றி
ரேவதி

Love is God!!!

மேலும் சில பதிவுகள்