குல்பி ஐஸ்

தேதி: June 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

பால் - கால் லிட்டர்
கன்டண்ஸ்டு மில்க் - கால் டின்
சீனி - 5 மேசைக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் - 2 மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 1/2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ - சிறிது
ஏலத்தூள் - கால் தேகரண்டி
பாதாம், பிஸ்தா - சிறிது (விரும்பினால்)
உப்பு - சிட்டிகை


 

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சுண்ட காய்ச்சவும்.
கார்ன் ஃப்ளாரை சிறிது பாலில் கரைத்து காய்ச்சிய பாலில் ஊற்றி குங்குமப்பூ மற்றும் உப்பு சேர்க்கவும்.
அதனுடன் சீனி மற்றும் ஏலத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
பால் ஆறிய பின்பு, கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.
பின்னர் அதில் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து விடவும்.
விருப்பப்பட்டால் பாதாம், பிஸ்தாவை நுணுக்கி போட்டு மோல்டில் ஊற்றவும்.
ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்திருந்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சம‌ சூப்பருங்க‌... படத்தை பார்க்கவே ஆசையா இருக்கு. ரேவதி குறிப்புன்னே நினைச்சுட்டேன் ;) பிள்ளை தான் ஐஸ்க்ரீமா போட்டு கடுப்பேத்தும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பினை வெளியிட்ட‌ அறுசுவை டீமிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கும்,பாராட்டிர்க்கு மிக்க‌ நன்றி.ஆமாம் வனி,ரேவதி ஐஸ்கிரீம் ஸ்பெசலிஸ்ட்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சுப்பரா இருக்கு முசி. எனக்கு இப்பவே வேணும். எனக்கு மோல்ட்ல இருந்து ஐஸ்கீரிம் எடுக்க வரலயே. அப்பறம் வெளிய எடுத்து வச்சதும் சீக்கிரம் மெல்ட் ஆகிடுது எதனாலப்பா. டவுட் கிளியர் பண்ணுங்கப்பா. சீக்கிரம் டிரை பண்ணறேன்.

Be simple be sample

குல்ஃபி சூப்பர் முசி. ட்ரை பண்ணி பாக்குறேன். ரேவ்ஸ் ட்வுட்தான் எனக்கும். இமா அக்காவோட வெனிலா ஐஸ்க்றீம் செஞ்சப்போ சீக்கிரம் மெல்ட் ஆச்சு. ஏன்? ரெண்டு பேருக்கும் சேர்த்து பதில் சொல்லிடுங்க. :)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,மோல்ட்ல இருந்து ஐஸ்கீரிமை எடுக்க‌ வெதுவெதுப்பான‌ நீரில் சிறிது நேரம் மோல்டை வைத்து விட்டு,ஐஸ்கீரிமை உருவினால் அழகாக‌ வரும்.எனக்கு சீக்கிரம் மெல்ட் ஆகவில்லை,கடைசிவரை கீழே சிந்தவும் இல்லை.ஒருவேளை இந்தியாவில் அதீக‌ ஹீட்டினால் இருக்குமோ என்னவோ?!!

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கு சீக்கிரம் மெல்ட் ஆகவில்லை,அதீக‌ ஹீட்டினால் சீக்கிரம் கரையுதோ என்னவோ?!!செய்து பார்த்து பதிவிடுங்கள்.இந்த‌ முறையில் செய்தால் மெல்ட் ஆகாது.நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி ஐஸ்கிரீம் சூப்பரா இருக்கு. சிம்பிளா நல்லா பண்ணி இருக்கீங்க‌. நானும் முதலில் பேரை பார்க்காமல் ரேவதினே நினைத்தேன். அவங்க‌ தான் இது மாறி ஈஸியா நல்லா பண்ணுவாங்க‌. அப்டி தான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போ தான் தெரியுது. அல்வா மாறியே கொஞ்சம் சொதப்பி இருக்காங்கனு. அவங்களே வழிய‌ வந்து மாட்டிகிட்டாங்க‌. அடிம‌ சிக்கிடுச்சிடா மக்கா.

எல்லாம் சில‌ காலம்.....

ரேவ்'ஸ் வழிய‌ வந்து மாட்றியே மா. உன்ன‌ எல்லோரும் ஐஸ்கிரீம் ஸ்பெஷலிஸ்ட்னு நினச்சி இருந்தாங்க‌. இப்டி போட்டு உடச்சிட்டியே. சீக்கிரம் உருகுதுனா அது ஒன்னும் இல்ல‌. கடைல‌ வெச்சி இருக்க‌ ஃப்ரீசர் ஹை கூலிங்ல‌ இருக்கும். அது சீக்கிரம் கட்டி ஆக்கிடும். ஆனா நம்ம‌ வீட்ல‌ இருக்க‌ ஃப்ரிட்ஜ்ல அவ்ளோ கூலிங் ஆகாது. நம்ம‌ ஃப்ரிஜ்ல‌யே கூலிங் ஜாஸ்தி (ஹை ல‌) வெச்சி ட்ரை பண்ணி பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

Naan aval illai. Athu p.revathy :). May be neega sollrathu Sariyathaan irukum

Be simple be sample

Naan aval illai. Athu p.revathy :). May be neega sollrathu Sariyathaan irukum

Be simple be sample

மிக்க‌ நன்றி பாலா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குல்ஃபி சூப்பரா இருக்கு முசி, ஃப்ரசன்டேஷன் கலக்கல் :-))

மிக்க‌ நன்றி வாண்,இப்ப‌ தான் பார்த்தேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.