வர‌ வர‌ சீனி(சர்க்கரை) கசக்குதையா....

காலையில் எழுந்ததும் காஃபி குடிக்கலேன்னா எனக்கு தலைவலி வந்துடும். வேலையே ஓடாது என்று சொல்பவர்கள் நிறைய‌ பேரை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அந்த‌ இன்ஸ்டண்ட் காஃபித் தூள் தான் உங்களுக்கு தலைவலி வருவதற்கே முழுமுதற் காரணம் தெரியுமா?

முதல்ல‌ அதை நிறுத்திப் பாருங்க‌. இதுக்கு நம்ம‌ வனியே சாட்சி.

முன்னதாக‌, நாம் காஃபிக்கு தாராளமாக‌ அள்ளிப் போடும் சர்க்கரை. இது ஒரு வெள்ளை நச்சு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

கரும்புச் சாற்றை கொதிக்க‌ வைத்து பாகு காய்ச்சி அப்படியே உருண்டையாகவோ அல்லது அச்சில் வார்த்தாலோ அது வெல்லம். இது ஆரோக்கியமானது.

ஆனால், முதலில் ஆலைகளில் கரும்புச் சாற்றை வெண்மையாக்க‌ நாம் பாத்ரூமை க்ளீன் செய்ய‌ பயன்படுத்தும் ப்ளீச்சிங் பௌடரை கலக்கிறாங்க‌. இது உள்ளுறுப்பை அரிக்கும் தன்மை உடைய‌ பொருள்.

சாறு கொதித்த‌ பின் ஒரு லிட்டருக்கு 200 மில்லி என்ற‌ அளவில் பாஸ்போரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இது உரம் தயாரிக்க‌ பயன்படும் பொருளாகும்.

தொடர்ந்து அழுக்கை நீக்க‌ சுண்ணாம்பு, சல்பர் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. இந்த‌ சல்பர் டை ஆக்சைடு ஒருவித‌ நச்சுத் தன்மை வாய்ந்தது.

மீண்டும் சுத்தப்படுத்த‌ பாலி எலக்ட்ரோலைட், காஸ்டிக் சோடா சேர்த்து படிக‌ நிலையை அடைய‌ சோடியம் ஹைட்ரோ சல்பேட் சேர்க்கப்படுகின்றது.

இத்தனை கெமிக்கல்ஸ் சேர்க்கப்பட்டு ஆரோக்கியமான‌ வெல்லத்தை படிக நிலையில் வெள்ளைச் சர்க்கரையாக‌, இல்லையில்லை சக்கையாகத் தருகிறார்கள்.

இந்தச் சர்க்கரையை சீரணிக்க‌ நம் உடலில் ஏற்கனவே உள்ள‌ கால்சியம் உறிஞ்ச‌ப்படுகின்றது.

இனிய‌ தோழிகளே,
வெல்லம் ஒரு கிலோ ரூ.70
அதை க்ரிஸ்டல் ஆக்கி வெண்மையாக்கி பலப்பல‌ பிராஸஸ் செய்து பெறப்படும் சர்க்கரை கிலோ ரூ. 35
எப்படி இது சாத்தியம்?
அப்படியானால், நாம் வாங்கும் ஒரு கிலோ சர்க்கரையில் அரைக் கிலோவுக்கும் அதிகமாகவே கெமிக்கல் கலந்திருப்பதாக‌ அர்த்தம் அல்லவா.
சிந்தியுங்கள். செயல்படுங்கள்.

வெல்லம் கூட‌ பழுப்பு நிறம் மாறி அதி வெண்மையாக‌ கிடைத்தால் சோடியம் ஹைட்ரோ சல்பேட் சேர்க்கப்பட்டு இருப்பதாக‌ அர்த்தம். (இவ்வாறு வெல்லப்பாகில் டின்டின்னாக‌ கொட்டுவதை நான் உறவினரின் வயலில் சிறுவயதிலே பார்த்திருக்கேன்)

ஆனால், பனைவெல்லம் அப்படியல்ல‌. இதில் பூச்சிக்கொல்லியோ, ரசாயன‌ உரமோ கிடையாது. ஆரோக்கியமானது. ஆனால், பதனீரை பாகு காய்ச்சி கருப்பட்டியாக‌ மாற்றும் போது சர்க்கரையை கலக்கும் அநியாயமும் இப்போது புதிதாக‌ ஆரம்பித்துள்ளது.

ஒரு கிலோ பனை வெல்லம் ரூ. 180.
சர்க்கரை விலை உங்களுக்குத் தெரியும். இதனால் தான் இந்தக் கலப்படம் ஆரம்பித்துள்ளது. கவனமாகப் பார்த்து வாங்குங்க‌.

சரி இப்போது மீண்டும் ஆரம்ப‌த்துக்கு வருவோம். சர்க்கரை காஃபிக்குப் பதிலா என்ன‌ எடுத்துக் கொள்ளலாம்?
சில‌ டிரிங்க்ஸ்.....

1. சுக்கு ‍‍_ 25 கிராம்
தனியா __ 2 டம்ளர்
மிளகு _ 2 ஸ்பூன்
இவற்றை வெயிலில் உலர்த்தி மிக்சியில் போட்டு பரபர‌ என‌ திரித்துக் கொள்ளவும்.
நான்கு டம்ளர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் பொடி, ஒரு ஸ்பூன் இஞ்சி துருவல், தேவையான‌ கருப்பட்டி சேர்த்து கொதிக்க‌ வைத்து வடிகட்டினால் சுக்குக் காஃபி ரெடி.
இதை தினமும் அருந்தி வர‌ தலைவலி வரவே வராது. நான் கேரண்டி.

2. கேழ்வரகு __ அரை கிலோ
பாதாம்பருப்பு __ 25 கிராம்
ஜவ்வரிசி __ 25 கிராம்
முந்திரிபருப்பு _ 25 கிராம்
சுக்கு __ 2 துண்டு
ஏலம் __ 10
மிசினில் கொடுத்து நைசாக‌ அரைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் பொடி, கருப்பட்டி, ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க‌ விட்டு இறக்கி வைத்து சிறிது பால் சேர்த்து பருகவும்.

3. கிரீன் டீ தேவையானால் சிறிது தேன் கலந்து பருகலாம்.

4. நான்கு ஸ்பூன் ஓமத்தை வறுத்து நான்கு டம்ளர் நீர் விட்டு கொதித்து கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து வெதுவெதுப்பாக‌ பருகினால் ஓம காஃபி ரெடி. சுவையாகவே இருக்கும். வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் ஓடியே போயிடும். வாரம் ஒரு நாள் கட்டாயம் பருகவேண்டிய‌ பானம் இது.

5. இஞ்சி, தனியா, உலர்ந்த‌ கறுப்பு திராக்ஷை தலா ஒரு ஸ்பூன், இவற்றை மிக்சியில் பரபர‌ என‌ அரைத்து தேவையான‌ வெல்லம் போட்டு கொதிக்க‌ வைத்தால் இஞ்சிக் காஃபி. இதைப் பருக‌ தலைசுற்று சுற்றியே போயிடும்.

6. சுக்கு, தேங்காய்ப் பால், பனங்கற்கண்டு சேர்த்துப் சூடாகப் பருக‌ சுவையான‌ டிரிங்க் கிடைக்கும். உடல் அசதி ஓடியே போகும்.

7. பாலில், பனங்கற்கண்டு, மிளகுப் பொடி, சிறிது மஞ்சட்பொடி சேர்த்துப் பருகலாம்.

மாலை நேரத்திலோ காஃபிக்குப் பதில் இளநீர் அல்லது ஃப்ரஷ் ஜூஸ் தயாரித்து குழந்தைகட்கு தரலாம். ( எங்க‌ வீட்ல‌ இப்படித்தான்)

நல்ல‌ வெயில் நேரத்தில் மதியம் மோர் பருகலாம். மழை நேரத்தில் சூப் பருகலாம்.

ஆரோக்கிய‌ பானங்கள் இத்தனை இருக்க‌ காஃபியின் மீது ஏனிந்த‌ மோகம்??

தோழிகளே, நீங்களும் உங்களுக்குத் தெரிந்த‌ ஆரோக்கியமான‌ பானங்கள் பற்றிக் கூறினால் அனைவரும் தெரிந்து கொள்ளலாமே.
எங்கே...ஆளுக்கு ஒண்ணு சொல்லுங்க‌ பார்க்கலாம்..;))

5
Average: 4.8 (6 votes)

Comments

Nalla padhivu...:) naan ippa adikkadi sukku kaapi dhaan. Instant coffee eppavum enakku viruppamaanadhu illai. Only filter coffee. Naan vittadhu sarkarai paal seertha tea. Black tea ku maarinadhum thalaivali poyiruchu.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஆளுக்கு ஒண்ணு சொல்லுங்க‌ பார்க்கலாம்..;))// ம்... சுக்குக் காஃபி, இஞ்சி தேநீர் பிடிக்கும். மல்லித் தண்ணீர் பிடிக்கும். ரோஸ்மெரி டீ பிடிக்கும்.
ரோஸ்மெரி டீ... http://www.arusuvai.com/tamil/node/30595 & http://www.arusuvai.com/tamil/node/25750 இரண்டும் ஒரே குறிப்பு தான். இலைகள் இரண்டாவதில் கொஞ்சம் தெளிவாகத் தெரிகிறது.

‍- இமா க்றிஸ்

நான் பனங்கற்கண்டு தான் வாங்குவேன். இப்ப‌ அதுலையும் கலபடம் பன்றாங்க‌.
பாத்து வாங்கனும். இரவு பாலில் மஞ்சட்பொடி கலந்து குடுச்சா தூக்கமின்மை சரி ஆகிடும்.சோர்வு நீங்கிடும்

நல்ல‌ தலைப்பு, நான் காபி,டி,எதும் குடிக்க‌ மாட்டேன். பாலில் கரும்பு சர்க்கரை கலந்து குடிப்பேன் ,

நம்ம நெரய‌ பேர்துக்கு ஆவாறம்பூ தெரிஉம் ,அதுல‌ டீ போட்டு குடிகா மேனி பல‌ பலப்பு கிடைகும், சர்க்கரை நோஇ கட்டுபட்டில் இருக்கும்,உடல் சுரு சுரு பாக இருக்கும்.

கைல‌ வென்னய‌ வெட்சுட்டு எதுக்குபா அலையனும்

ஆவாறம்பூ டீ குடுச்சா சுகர் சரி ஆகிடுமாம். கருப்பை பிரட்சனையும் வராதுனு பாட்டி சொல்லிருகாங்க‌

உண்மைதான் தோழி

வாட்டர் புரிஃபிகேசன் இயந்திர‌ முரையை விட‌ சிரந்தது செம்பு பாத்திரதில் ஊற்றீ வைப்பது,அது தண்ண்ரில் உள்ள‌ கெட்ட‌ பாக்டரியா வை கொல்கிரது.

மனிதனுக்கு தேவையான‌ எதிர்ப்பு சக்தியை தருகிறது.நமது முன்ணோர்கள்
இந்த‌ முரைதான் பின்பற்றீ நார்கள்

முன்னோர் வழி நடப்பொம் ஆறோக்கியமாக‌ வாழ்வோம்

ஆமாம் நானும் கேல்வி பட்டு உல்லேன் , எங்கள் ஹொமெல் க்குட இப்படி தான் உபயொகிபார்கள்

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

Thank u so much , yesterday i was in a doubt how to prepare a coffee by using this vellam or karuppatti

Now i got know how to ,,,, thank u once again

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

செம்பு பாத்திரம் இல்லாவிட்டாலும், குடத்தில் செம்பு தகடு போட்டும் வைக்கலாம்.வாரமொருமுறை சுத்தபடுத்தி உபயோகிக்கலாம்

அஸ்காச்சக்கரை வந்ததிலிருந்து நாட்டுச்சக்கரை வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியை மறந்தே போனோம்.
இதில் கூட நிறம் பார்க்க ஆரம்பிச்சிட்டதால வந்த விளைவுனு கூட சொல்லலாம்.
நாட்டுச்சக்கரைலயும் கலருக்காக கெமிக்கல் போடுவதை நானும் நேர்ல பாத்திருக்கேன்.

மிக அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு...தொடர்ந்து இது போன்ற பதிவுகள் படிக்க ஆர்வமாக உள்ளவர்கள் வரிசையில் நானும்....நன்றி நிகி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு வனி
பாராட்டுக்கு நன்றி.:)
சுக்குக் காப்பியின் மகிமையே மகிமை.
அதிலே சேரும் சுக்கு, மல்லி, இஞ்சி எல்லாமே மருத்துவ‌ குணம் நிறைந்தது.
வருமுன் காக்கும் சக்தி நிறைந்தது.
தினமும் இதையே ஃபாலோ செய்யுங்க‌.:)

அன்பு இமா
சுக்கு காப்பி, இஞ்சி தேநீர், மல்லித் தண்ணீர் தெரியும்.
ரோஸ்மெரி சுவை புதிது; காட்சியும் புதிது; மணமும் புதிது. இங்கே கிடைக்குதான்னு தேடிப் பார்க்கிறேன்.
ரோஸ்மெரிக்கு மிகவும் நன்றி இமா:))

அன்பு திவ்யா
ஆம். எல்லாவற்றிலும் கலப்படம் நிறைந்துள்ளது. கவனமாகப் பார்த்து வாங்கணும்.
பாலில் மஞ்சட்பொடி கலந்து குடித்தால் தூக்கம் வருமா.... தகவலுக்கு நன்றி திவ்யா:)

அன்பு கிருத்திகா
பாலில் வெல்லம் இஞ்சி போட்டு குடிக்க‌ சுவையாக‌ இருக்கும்.
ஆவாரம்பூ டீ உடலுக்கு மிகவும் நல்லதெனெ நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கையிலே (ஆவாரம்பூ) வெண்ணெய் இருக்குன்னு சொல்றீங்க‌:))
நன்றி பா.

//கருப்பை பிரட்சனையும் வராதுனு பாட்டி சொல்லிருகாங்க‌//
புதிய‌ விஷயம். நன்றி தோழி:)

அன்பு கிருத்திகா
ஆர். ஓ. முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும் போது அதிலுள்ள‌ சத்துக்களும் போயிடும்னு சொல்றாங்க‌.
செம்புப் பாத்திரம் கெட்ட‌ பாக்டீரியாவை கொல்லும் சக்தி படைத்தது.
நம் முன்னோர்களின் அறிவுபூர்வமான‌ செயல்கள் நம் ஆரோக்கியத்துக்கு வழிவகுப்பவை.
பிளாஷ்டிக் பாத்திரத்தில் வைக்கும் தண்ணீரில் பாக்டீரியா பல்கிப் பெருகும்னு படிச்சிருக்கேன்
பதிவுக்கு நன்றி தோழி:) .

அன்பு பிருந்தா
உங்களது சந்தேகமே உடனடியாக‌ இந்தப் பதிவை போடக் காரணம்.
இப்போ கருப்பட்டியின் உபயோகம் பற்றி தெரிந்திருக்கும்.
காப்பி ரெடியா?
பதிவுக்கு நன்றி பிருந்தா:)

அன்பு திவ்யா
செம்புக் குடம் இல்லாதவங்க‌ செம்பு டம்ளரை அதிலே போடலாம். நீங்க‌ சொன்னபடி தகடும் போடலாம்.
உபயோகமான‌ எளிய‌ முறை அப்படித்தானே...

அன்பு அருள்
//இதில் கூட நிறம் பார்க்க ஆரம்பிச்சிட்டதால வந்த விளைவுனு கூட சொல்லலாம்.
நாட்டுச்சக்கரைலயும் கலருக்காக கெமிக்கல் போடுவதை நானும் நேர்ல பாத்திருக்கேன்.//
உண்மை தான் அருள்.
நாம் நிறத்தை பார்ப்பதால் தான் வெண்மையாக்க‌ இத்தனை கெமிக்கல் சேர்க்கிறாங்க‌.
நாம் ஒரிஜினல் நிறம் என்னன்னு புரிந்து அதையே வாங்க‌ பழகணும்.
//மிக அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு...தொடர்ந்து இது போன்ற பதிவுகள் படிக்க ஆர்வமாக உள்ளவர்கள் வரிசையில் நானும்....நன்றி நிகி//

மிக்க‌ நன்றி அருள்:)))

thank u so much!!!!!!!!!

neengal sollum "" anbu anbu anbu "" ketkavum & padikavum migavum arumaiii

& ethai padikum pothu vijay tv mahabharatam serial than mindla blink aguthu.

Really super "Anbu Nikila" !!!!!

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

அன்பு பிருந்தா

எதையும் வெறுப்பில்லாம அன்பா பார்க்க‌ கத்துக்கிட்டா நமக்குக் கிடைப்பது மகிழ்ச்சியே.
பிறர் மீது வெறுப்பு பாராட்டினால் முதலில் நமது மனம் தான் சந்தோசத்தை இழக்கிறது. (இதை நன்கு அனுபவித்திருக்கிறேன்).
இதை முடிந்தவரை கடைப்பிடிப்போம்.:))

மகாபாரதம் சீரியல் நான் பார்க்கவில்லையே பிருந்தா.
என்ன‌ சொல்லியிருக்காங்கன்னு யூ ட்யூப் ல‌ பார்க்கிறேன்.

உங்களோட‌ பதிவுக்கும் அன்புக்கும் மிக்க‌ நன்றி.. அன்பு பிருந்தா:)

Anbu nikila!!!

mikka nandri ungal anbirgu !!!

and thanks for this coffee recipe too :) :)...

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

அருமையான‌ பதிவு. எனக்கு காபி டீ பால் பழக்கமே இல்லை. அதனால் கவலை இல்லை. அதிலும் இந்த‌ சர்க்கரை விஷயம் முன்னமே தெரிந்ததால் இனிப்புகளை கூட‌ முடிந்த‌ வரை தவிர்த்துவிட்டேன். வீட்டிலும் முடிந்த‌ வரை சர்க்கரைக்கு பதில் வெல்லமே. அதிலும் இங்கு இயற்கை வெல்லம் என்று கிடைக்கிறது. அதை தான் உபயோகிக்கிறோம். நான் எவ்வளவு சொல்லியும் பெரியவர்களால் சர்க்கரையை கட்டுபடுத்த‌ முடியவில்லை. வீட்டில் பெரியவர்களுக்கு டீ க்கு மட்டும் சர்க்கரை உபயோகிக்கிறோம். அதற்கே மாதம் 1 கிலோ சர்க்கரை ஆகிறது. மாத‌ மளிகையில் சர்க்கரை ஒரு கிலோ மட்டுமே.

எல்லாம் சில‌ காலம்.....

உங்களோடு பேசியது ரொம்பவும் மகிழ்ச்சியாக‌ உள்ளது.:))

அன்பு பாலா
எங்கள் வீட்டிலும் காஃபி, டீ பழக்கம் இல்லை.
இனிப்புகளும் கூடுமானவரை வெல்லம் தான்.
ஜூஸ் செய்யும் போது தேன் சேர்க்கும் வழக்கமும் உண்டு.
வீட்டிற்கு விருந்தினர் வந்தால் மட்டுமே சர்க்கரை காஃபி.
நீங்களும் நல்ல‌ ஆரோக்கியமான‌ உணவா எடுத்துக்கறீங்க.
பாராட்டுக்கள். நன்றி பாலா:))

புதிதாக் வாங்கிய செம்பு குடத்தை சுத்தம் செய்வது எப்படி? தண்ணீர் குடிக்க‌ அதில் நேரடியாக‌ தண்ணீர் ஊற்றி வைக்க‌ வேண்டுமா? அல்லது அதனுள் ஈயம் பூசித்தான் பயன்படுத்த‌ வேண்டுமா? தொடர்ந்து அதை பயன்படுத்தும்போது அதை எப்படி சுத்தம் செய்து பராமரிக்க‌ வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்.

அன்புடன்
ஜெயா

அன்பு ஜெயா
எங்க‌ அம்மா புளி வச்சி தேய்ப்பாங்க‌ ஜெயா.
குடத்தில் நேரடியாக‌ தண்ணீர் ஊற்றி பயன்படுத்த‌ வேண்டும்.
ஈயம் பூசக்கூடாது. ஈயம் பூசினால் செம்பின் பயன் கிடைக்காது அல்லவா.:))
(உங்களுக்காக‌ எங்க‌ அம்மாவிடம் கேட்டு பதிவிடுகின்றேன்)
உபயோகித்து பார்த்து சொல்லுங்க‌:))

அன்புள்ள‌ நிகிலா,

அம்மாவிடம் கேட்டு சொன்னதுக்கு மிகவும் நன்றி. எலுமிச்சையும், உப்பும் பயன்படுத்தி தேய்க்கலாம் என்று அறிந்தேன். தண்ணீர் இரவில் ஊற்றி வைத்து பயன்படுத்தினேன். செம்பின் வாசனை வருவதால் குடிக்க‌ கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இனி புளி பயன்படுத்தி தேய்த்து பார்க்கிறேன். நன்றி.

அன்புடன்
ஜெயா