மேத்தி சப்பாத்தி

தேதி: June 15, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

கோதுமை மாவு - ஒரு கப்
வெந்தயக் கீரை - அரை கப்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஓமம் - கால் தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

கோதுமை மாவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான‌ அளவு உப்பு, ஓமம், தயிர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
இதனுடன் சுத்தம் செய்து ஆய்ந்த‌ வெந்தய‌ கீரையை சேர்த்து பிசையவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
இந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லில் இருபுறமும் திருப்பி போட்டு வேக‌ வைத்து எடுக்கவும்.
சுவையான‌ மேத்தி சப்பாத்தி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Super dish !!!

i will try it today and tell u :)

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி பிருந்தா. கண்டிப்பா செய்து பாருங்க‌. சத்தானதும் கூட‌.

எல்லாம் சில‌ காலம்.....

பாலா மேத்தி சப்பாத்தி அப்படியே எனக்குதான் எனக்கு சப்பாத்தின்னா 3 வேளையும் கூட சாப்பிடுவேன் அவ்ளோ பிடிக்கும் அதிலும் இது போலன்னா கேட்கவே வேனாம் :p :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

nan indru en kanavaruku neenha seida chappathi pani kuduthen. romba nalla irukunu sonaaha.

உங்களுக்கு இல்லாமலா? எல்லாத்தையும் எடுத்துக்குங்க‌. ஆனா இங்க‌ இருந்து செய்து கொரியர் அனுப்பி அங்க‌ வர்றதுக்குள்ள‌ சப்பாத்தி கெட்டுடும். அதுக்கு நீங்க‌ வீட்லயே ஈஸியா செய்து சாப்டலாம்.

எல்லாம் சில‌ காலம்.....

செய்து பார்த்து கருத்து வெளியிட்டமைக்குமிக்க‌ நன்றி மர்ஷிகா... உங்க‌ பெய‌ரின் அர்த்தம் என்ன‌?

எல்லாம் சில‌ காலம்.....