Hi imma amma, Urgent help pls...

Can you please suggest some good gynecologist in auckland? Its very urgent, pls help me.. And can we see doctor without appointment?

//suggest some good gynecologist in auckland?// இப்படி எல்லோரும் பார்க்குமிடத்தில் எப்படி!
//Its very urgent,// நீங்கள் என்ன விதமான பிரச்சினை என்பதைச் சொல்லவில்லை. சொல்ல இயலாததாக இருக்கலாம்.

//can we see doctor without appointment?// GP-யைப் பார்க்க என்றால் சில இடங்கள் இருக்கின்றன. White Cross போகலாம். இரண்டிற்கும் போய் form நிரப்புகிற வேலைகள் கொஞ்சம் இருக்கும். பெண்மருத்துவரைப் பார்ப்பதென்றால் அப்படிப் போக இயலாது.

மிக அவசரம் என்றால் 111 அடித்து ambulance வர வைக்கலாம். உங்களால் பயணம் செய்ய முடிந்தால் Auckland city hospital போய் emergency section போங்க. பொறுத்துக் கொள்ளக் கூடிய பிரச்சினை என்றால் உங்கள் GP யிடம் பேசலாம். அவர்கள் பார்த்துவிட்டு தேவையானால் ஸ்பெஷலிஸ்ட்டுக்கு ரெஃபர் செய்வார்கள்.

//good gynecologist// எல்லோருமே good தான் மீனு. தயங்காமல் உங்கள் பிரச்சினைகளைச் சொல்லலாம்; சந்தேகங்களைக் கேட்கலாம். பயம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

Thanks ma... Tmrw we r planning to go nearby medical center ..

எனக்கு வெள்ள படுது 6 வருடமா, எனக்கு மாப்ள‌ பார்கறாக‌ ,என்கூட‌ வேல‌ பார்கற அக்கா பயப்படுத்தறாக‌ எதாவது பிரச்சனை வருமா உத‌வுஙள்.நா டாக்டர் கிட்ட‌ போன‌ மருந்து கொடுத்தாக‌ நிக்கல‌,இப்ப பயமா இருக்கு

//என்கூட‌ வேல‌ பார்கற அக்கா பயப்படுத்தறாக‌// கூட இருப்பவங்க உதவ முடியாவிட்டாலும் தொந்தரவு கொடுக்காமலாவது இருக்க வேண்டும். ஏதோ உங்களுக்கு நல்லது செய்யுறதா நினைச்சு சொல்லி இருக்காங்க. உங்களுக்காக பயம் வரவில்லை. அப்போ விடுங்க.

//எதாவது பிரச்சனை வருமா// பிரச்சினை வரதா இருந்தா அது உங்கள் உடல்நிலையால் வருவதாக இராது; உங்கள் மனது, நீங்கள் இரண்டுமாகச் சேர்ந்து தேவையில்லாமல் சேர்த்துப் போட்டுக் கொண்டால்தான் உண்டு. உங்களுக்கு வலி, அது இது என்று எந்த அசௌகரியங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்கள் தோழிதான் முதல் பிரச்சினை, இரண்டாவது நீங்கள்.

//டாக்டர் கிட்ட‌ போன‌ மருந்து கொடுத்தாக‌ நிக்கல‌// மருந்து கொடுத்தவங்க இது பிரச்சினையான விஷயம் என்று சொல்லலயே! பிறகு ஏன் //இப்ப பயமா இருக்கு//

மாப்பிளை பார்க்கும் போது யாரும் இதையெல்லாம் விசாரிக்க மாட்டாங்க. கலியாணம் ஆனதன் பின்னாலும் நீங்கள் சொன்னால் தவிர கணவராக வருபவருக்கு எதுவும் தெரியப் போவது இல்லை. நீங்க இந்த அளவு யோசிக்கிறதுக்கு, இது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல. பலருக்கு இருப்பதுதான். தேவையில்லாம இதைப் பெருசா பேசிக் கொள்ள வேண்டாம். உங்கள் குடும்ப மருத்துவரிடம் பேசுவது மட்டும் போதும். அதற்கு மேல் ஸ்பெஷலிஸ்ட்டிடம், கைனகாலஜிஸ்ட்டிடம் என்று போக இப்போதைக்கு நினைக்காதீங்க. உற்றார், உறவினர், அயலவர் என்று எல்லோரிடமும் பேசி வைக்கவும் வேண்டாம். ஒன்றுமில்லாததை எல்லோருமா பெருசாக்கி விட்டுருவாங்க.

முதலில் கலியாணம் ஆகட்டும். மீதி எல்லாம் பிறகு பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்