ம௧ளுக்கு நேற்று இரவில் இருந்து காய்ச்சல் அதி௧மா௧ உள்ளது
மருத்துவரிடம் காண்பித்தேன் மருந்தும் கொடுத்துகொண்டு தான் இருக்கிறன்
காய்ச்சல் குறையவே இல்லை
அரைமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீரீல் டவலை நனைத்து தொடைத்து விடுகிறேன்
சிலசமயம் அழுகிறாள்
என்ன செய்வது தோழி௧ளே காய்ச்சல் குறையவே மாட்டேன்குது ரொம்ப ௧ஷ்டபடுறா
இட்லியும்,,,, ௧ஞ்சியும் தான் கொடுக்கிறேன்
காய்ச்சலின் போது என்ன உணவு கொடுக்௧லாம் உதவுங்௧ள் தோழி
33\4 வயது ஆகிறது
கல்யாணி
இப்ப எப்படி இருக்கா உங்க பாப்பா? காய்ச்சல் விட்டிருக்கா?? ஈர துணியில் துடைக்க சொல்லி தான் எல்லா மருத்துவரும் சொல்றாங்க. ஆனா சூடான உடம்பில் சில்லுன்னு துடைச்சா பிள்ளைகள் அழத்தான் செய்யும்... :( என்ன பண்ண... வேற வழி இல்லையே. உங்க குழந்தைக்கு காய்ச்சல் சரியாக என் பிராத்தனைகள். எப்படியாவது கொஞ்சம் உணவு கொடுத்துகிட்டே இருங்க. மருந்தை சரியா கொடுங்க. இட்லி, கஞ்சி, இடியாப்பம், ரசம் சாதம் எல்லாம் தரலாம். எதுன்னாலும் கொஞ்சம் வெது வெதுன்னு சூடிருக்கும்படி கொடுங்க. ரொம்ப ஆறிப்போன உணவு பிள்ளைகளூக்கு சாப்பிட சிரமமா இருக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கல்யாணி
நிறைய நீர் உள்ளே போக வேண்டும். கஞ்சி கொடுக்கும் போது நீர்க்கக் கொடுக்கலாம். வெறும் நீர், ஜூஸ் எதுவானாலும் பரவாயில்லை, கொடுங்க. உணவு... செமிக்கக் கூடிய எதுவாக இருந்தாலும் கொடுக்கலாம். மருந்தையும் நீர் தொட்டுத் துடைப்பதையும் தொடருங்க. அறை காற்றோட்டமாக இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்க. காய்ச்சல் இருக்கும் போது குளிரும் என்று நிறையத் துணி அணிவித்து விட வேண்டாம். உடல் வெப்பம் அப்படியே அடைபட்டு இருக்க இன்னும் அதிகமாகக் காட்டும், குழந்தைக்குச் சிரமமாக இருக்கும்.
- இமா க்றிஸ்
காய்ச்சல் குணமா௧வில்லை
தாமதமா௧ பதில் அளித்தமைக்கு மன்னிக்௧வும்
வனி அக்கா,,,இமா அம்மா
ML
kalyani
Tuesday la irundhu temp irukilla?? 4 days aagudhe kalyani.. marupadi dr paarthingalaa?? Illanna mudhalla paarunga. Blood test panniduradhu nalladhu. Saapiduraangalaa?? Thanni niraiya kodukaringalaa?? Marupadi kaatunga kalyani. Kuzandhaiyai paarunga reply pannalanna naanga yaarum kovikka maatom.. mannipulaam ketukitirukadhinga. Engal piraathanaigal.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கல்யாணி அவர்களுக்கு
உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை இருந்தால் ஒரு தேக்கரண்டி நல்ல மிளகு, பால் சாம்பிராணி இரண்டையும்
சட்டியில் இட்டு நன்கு புகைய புகைய வறுத்து அதில் ஒன்றரை கப் நீரை ஊற்றி
துளசி இலைகள், தூதுவளை இலைகள்(இந்த இரண்டும் கிடைத்தாலும் நல்லதே,இல்லாவிட்டாலும் எது இருந்தாலும் சரி) இரண்டும் கால் கப் அளவு
சேர்த்துக் கொதித்துப் பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடித்து அதனோடுபனைவெல்லம் அல்லது தேன் கலந்து இரண்டு நாள்களுக்குப் பகிர்ந்து
நாளுக்கு மூன்று வேளையாக கொடுங்கள், மருந்து சற்று காரமான மருந்து
நாட்டு மருந்துகடையில் பால்சாம்பிராணி கிடைக்கும்(உள்ளுக்குச் சாப்பிடுவது)
தூதுவளை பிடிபடாத சுரங்களையும் விச சுரங்களையும் தீர்க்கவல்லது.
நொச்சி இலை கிடைத்தால் வென்னீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த
தண்ணீரை குழந்தைக்கு எல்லாவற்றிக்கும் பயன்படுத்தவும். மிளகு வெடிக்கும்
சாம்பிராணி புகையும்பிறகு உருகும் கொதித்துவெந்ததை மத்தால் கடைந்து
வடிகட்டவும்.
புழுங்கல் அரிசி நொய் கஞ்சி, இட்லி, இடியாப்பம், குறைந்த அளவு மிளகு
சீரகம் நிறைய சேர்த்த மிளகாய் தாளிக்காத இரசம் கஞ்சிக்கு நாரத்தங்காய்
ஊறுகாய் உப்பிட்டது தொட்டுக் கொள்ளவும், நாரத்தை வாந்தியைத் தடுக்கும்.
சாத்துக்குடி சூஸ் கொடுத்தால் மலஜலம் நன்றாகக் கழியும், அப்போது தான்
சுரம் குறையும்,( இந்த கசாயத்தில் அரிசி திப்பிலி (4) ஒரு அங்குல நீளத்தில்
கம்பு கதிர் போல் இருக்கும் மிகுந்த காரமானது, கண்ட திப்பிலி குச்சியாக
இருக்கும்(4 குச்சிகள்) இரண்டும் எந்த சுரத்தையும் நீக்கும் வல்லவை, இவற்றையும் மிளகோடு சேர்த்து வறுத்து கசாயத்தில் சேர்க்கலாம். தங்கள்
மகள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.