இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருக்கும் போது முதல் குழந்தைக்கு முதல் மொட்டை

இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருக்கும் போது முதல் குழந்தைக்கு முதல் மொட்டை போடலாமா? போடக் கூடாது எனில் காரணம் சொல்லுங்கள்

போடக் கூடாது, காரணம் தெரியல. என் ஓரகத்தி கர்ப்பமாக இருக்கும் போது கூட எங்க பாப்பாக்கு மொட்டை போட கூடாது னு சொல்லிட்டாங்க. அவளுக்கு குழந்தை பிறந்து ஒ௫ வாரம் ஆகுது இனி 30 நாள் கழித்து தான் மொட்டை போடணும். பெரியவங்க சொல்லுவாங்க அதுக்கு ஏதாவது காரணம் இ௫க்கும். தப்பா நினைக்க வேண்டாம் எங்க வீட்ல எனக்கு சொன்னது.

ரம்யா ஜெயராமன்

:-) நல்ல கேள்வி கேட்டிருக்கீங்க பூரணி.

'போடலாம்' எனில் காரணம் சொல்லப்படாதா? :-)

இது மாதிரி விஷயங்களைத்தான், 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறது,' என்று சொல்றாங்களோ!

//இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருக்கும் போது// கர்ப்பமாக இருப்பது நீங்கள். நீங்கள் உங்களுக்கு மொட்டை போட்டால் கூட உள்ளே இருக்கும் இரண்டாவது குழந்தைக்கு எதுவும் ஆகப் போவது இல்லை.

//முதல் குழந்தை// அது இப்போது தனி ஆள். 'தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு,' என்பார்கள். அப்படி... உங்களிலிருந்து பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டது. உண்மையில் அதன் தலையிலிருந்து முடி இறங்குவது அதற்கே பாதிப்பு இல்லை; நன்மைதான் என்னும் போது உங்களுக்கும் இரண்டாவது குழந்தைக்கும் மட்டும் எப்படிப் பாதிப்பாகும்!

‍- இமா க்றிஸ்

எனக்குச் சரியாகத் தெரியாத விஷயங்களை, சினிமாவில் கதைகளில் படித்ததை வைத்து ஊகித்துச் சொல்லுகிறேன்.

மொட்டை போட குடும்பமாக குலதெய்வம் கோவில் போறது, பொங்கல் இப்படி வழக்கம் இருக்கும். முன்னால எல்லாம் வண்டி கட்டி குடும்பமாக, எல்லாப் பொருட்களையும் கட்டி எடுத்துப் போறதா இருந்திருக்கலாம். பாதைகள் சீராக இல்லாத காலம்; இடையில் தங்கும் வசதிகள், அவசரத்திற்கு மருத்துவ வசதிகள் இல்லாத காலம் இந்த மாதிரி சொல்லி வைச்சிருந்திருப்பாங்க. நியாயம்தானே! கர்ப்பிணிக்குச் சிரமமாக இருக்கும் என்பதால் வந்த வழக்கமாக இருக்கலாம். அதைச் சொல்லாமல் (சொன்னாலும் புரிந்திராது - சின்னப் பெண்களாக மணம் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள் முன்பெல்லாம்.) பொதுவாக, 'நல்லதில்லை', 'ஆகாது,' என்று சொல்லிவைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

எனக்கு தையல் தெரியம் உள்பாவாடை தைக்க ஆடர் ஏங்கே கிடைக்கும்

தலைப்பைப் பார்த்துக் கேள்வியைத் தட்டியிருக்கலாம் சகோதரி. இங்கு கேட்பது இழையைக் குழப்புவது போல இருக்கும் அதே வேளை உங்களுக்குப் பதில் கிடைக்கும் சாத்தியங்களையும் குறைக்கிறது.

‍- இமா க்றிஸ்

எனக்கு 2 வயதில் ஒரு பையன் இருக்கிறான்.... நான் 1 1\2 வயதில் அவனுக்கு பால் தருவதை நிறுத்தி விட்டேன்... ஆனால் எனக்கு இப்போது பால் கட்டுகிறது என்ன செய்வது

இது போன்ற ஒரு கேள்விக்கு முன்பு ஒரு இழையில் பதில் சொல்லியிருக்கிறேன். :-)
http://www.arusuvai.com/tamil/node/25891

‍- இமா க்றிஸ்

கண்ணை மூடிட்டு வரிசையா கேள்வி கேட்டுட்டே போறீங்க. :-) இங்கே மொட்டை போடுவதைப் பற்றி மட்டும் பேசுங்க. மீதி எல்லாம்.. அதற்கு அதற்கு என்று உள்ள இழைகளில் பாருங்க. பதில் இருக்கும்.
~~~~
//நான் 1 1\2 வயதில் அவனுக்கு பால் தருவதை நிறுத்தி விட்டேன்... ஆனால் எனக்கு இப்போது பால் கட்டுகிறது// 6 மாதம் கழித்தா! இருக்க முடியாது. எப்போ நிறுத்தினீங்களோ அப்போ பால் கட்டியிருக்கணும். இல்லாமல் இவ்வளவு காலம் நன்றாக இருந்துவிட்டு இப்போ!! வேறு ஏதாவது பிரச்சினையா! விளக்கமில்லாமல் இப்படிச் சொல்லுகிறீர்களா?

‍- இமா க்றிஸ்

sorry sister

enakku eppadi thalaipil poi kelvi kettapathu endru theriyavillai..

மேலும் சில பதிவுகள்