பீட்ஸ் ரிங்

தேதி: June 22, 2015

4
Average: 3.7 (3 votes)

 

ஃபோம் ஷீட்
பெரிய மணி - விரும்பிய நிறங்களில்
சிறிய மணி (பொடி மணி)
நரம்பு
கத்தரிக்கோல்
கம்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நரம்பை தேவையான அளவு எடுத்துக் கொண்டு அதில் முதலில் பெரிய மணியை கோர்க்கவும்.
அதன் பின்னர் ஒரு சிறிய மணியை கோர்க்கவும். அதைப் போல் ஒரு பெரிய மணி ஒரு சிறிய மணி என்று கோர்த்துக் கொண்டே வரவும். 5 பெரிய மணிகளும் 5 சிறிய மணிகளும் கோர்த்து முடித்து விடவும்.
இரண்டு பக்கங்களையும் இணைத்து முடிச்சு போடவும். மீதமுள்ள நரம்பை நறுக்கி விடவும். இணைத்ததும் பார்க்க வட்டமாக இருக்கும்.
நடுவில் ஒரு மணியை வைத்து ஒட்டி விடவும். மோதிரத்திற்கான மேல் பகுதி ரெடி.
மோதிரத்திற்கான கீழ்பாகம் செய்ய ஃபோம் ஷீட்டை நம் விரல் அளவிற்கு அளந்து எடுத்துக் கொண்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதை வட்டமாக சுற்றி ஒன்றொடு ஒன்று இணைத்து ஒட்டி விடவும்.
மடக்கி ஒட்டிய இடத்தில் செய்து வைத்திருக்கும் மோதிரத்தின் மேல் பாகத்தை வைத்து ஒட்டவும்.
அழகிய பீட்ஸ் ரிங் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பரா இருக்கு. அடுத்த கைவினை வகுப்பில் இதைத்தான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன். ஃபோம் வளையத்தை மட்டும் கில்ட் கம்பி வளைத்துச் செய்யப் போகிறேன். செய்து முடித்ததும் மோதிரங்கள் டீம் பார்வைக்கு வரும்.

‍- இமா க்றிஸ்

செய்தாச்சு. அழகா வந்திருக்கு. :-) ஃபேஸ்புக்ல பகிர்ந்திருக்கிறேன்.

ஒரு சஜஷன் - மேலே, 'தேவையானவை' லிஸ்ட்ல 'கம்'மை, 'ஹாட் க்ளூ' என்று மாற்றலாமோ!

‍- இமா க்றிஸ்