பாத வலி

காலையில் எழுந்தவுடன் பாததில் வலி இருக்கிறது ஏதனால்.... பாதத்தை கீழே மிதிக்க முடியவில்லை... பாதம் கனமாக இருப்பது போன்று இருக்கிறது

ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான‌ தண்ணீரில் உப்பு போட்டு பாதத்தை வைத்து பாருங்கள் வலி குறையும்

Presure and suger check pani parunga ethukkum ,

மேலே சகோதரிகள் இருவரும் சொல்லியிருப்பது நல்ல யோசனைகள். முயற்சி செய்து பாருங்க.

எனக்கும் முன்னால் இந்த மாதிரி (குதியில்) வலி அதிகாலை இருந்திருக்கிறது. இடைக்கிடை கொஞ்ச காலம் வரும். என்ன செய்தேன் என்பது பெரிதாக நினைவுக்கு வரவில்லை. ஒரு டாக்டரிடம் வேலை செய்த காலத்திலும் இந்த வலி இருந்திருக்கிறது. மருந்து எதுவும் அவர் கொடுத்ததாக, நான் எடுத்ததாக நினைவு இல்லை. காலையில் வருத்தும் ;( என்பது மட்டும் நினைவு இருக்கிறது. காலையில் மட்டும் இருக்கும். பிறகு எவ்வளவு நேரம் என்று கணக்கு வைத்ததில்லை - காணாமல் போயிருக்கும். முழு நாளும் இராது இல்லையா! ம்.. இப்போ வலி வருவது இல்லை என்பதால்... நான் குதியுயர் காலணிகள் (அதிக உயரமானது) அணிந்தது காரணமாக இருந்திருக்கலாம் அல்லது என் வேலைகள் முழு நாளும் நிற்பது போல அமைந்திருந்ததால் அப்படி இருந்திருக்கலாம், என்று நானே முடிவு செய்திருக்கிறேன். :-)

ஒரே காலணி அணியாமல் மாற்றி மாற்றி அணிந்து பாருங்கள். அதிக நேரம் நிற்கிறீர்களா? அப்படியானால் அதைக் கொஞ்சம் குறைக்கப் பாருங்கள். அடுத்த காலை முதலில் ஊன்றுங்கள். படுக்கையிலிருந்து எழுந்து, முதல்முதலில் பாதத்தை நிலத்தில் வைக்கும் போது சட்டென்று எடை இறங்க வைக்காமல், அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக வையுங்கள். இவைதான் நான் செய்தவை.

இந்த வலிக்கும் ஆத்ரைட்டிஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை. இருக்கக்கூடும். பொறுக்க முடியாவிட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

‍- இமா க்றிஸ்

கருத்து தெரிவித்த தோழிகளுக்கு நன்றி.. நிங்கள் சொன்னவாறு செய்து பார்க்கிறேன்....

எனது வேலை அதிக நேரம் நிற்க வேண்டியதில்லை.... உயரமான காலணிகளை நான் அணிவதில்லை..

Iravil adhigamaga neer kudikkum pazakkam unda?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இல்லை

:-) தலைப்பு சும்மா.

எனக்கு யார் பெயரையும் தப்பாக உச்சரிப்பது பிடிக்காது. உண்மையில் உங்கள் பெயர் என்ன? எப்படி எழுதினாலும் ஏற்றுக்கொள்கிறீர்கள். :-) சரியான பெயர்... க்ராமலக்ஷ்மியா, கிரமலக்ஷ்மியா அல்லது K. ராமலக்ஷ்மியா?

‍- இமா க்றிஸ்

எனக்கும் இது போல‌ இருந்திருக்கு... குதிங்கால் வலி வந்தப்போ கெட்ட‌ நீர் சேருதுன்னு சொன்னாங்க‌. முக்கியமா இரவில் நிறைய‌ நீர் குடிக்கும் பழக்கம் எனக்கு அப்போது இருந்தது. அது தான் காரணம் என்றார்கள். அதை விட்டதும் சரியாகிடுச்சு. முன் பாதத்தில் வலி இருந்தது, அது இரண்டு விரலுக்கு நடுவில் எலும்பு வளர்ச்சி இருக்கு என்றார்கள். அதுக்கு ஏதோ எண்ணெய் கொடுத்தாங்க‌, அதன் பின் வரலங்க‌. பெட்டர் நீங்க‌ ஒருமுறை மருத்துவரை பாருங்க‌. என்ன‌ காரணம்னு தெரியாம‌ வலியோட‌ ஏன் கஷ்டப்படணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் husband கும் இந்த பிரச்சனை இருக்கு.docter water bottle ல water freeze panni ,bottle மேல கால் வச்சு உருட்டி உருட்டி exercise panna sonanga.apro வலி அவ்ளோ இல்ல. Try panni parunga.

மேலும் சில பதிவுகள்