கொஞ்சம் ரிலாக்ஸ் பிளீஸ்

கோடை வெயில் தீ மண்டை தீஞ்சு, நாக்கு உலர்ந்து, ஒவ்வொரு நாளும் நாம் பட்ட‌ பாடு, அந்த‌ சூரிய‌ பகவானுக்கே வெளிச்சம். இப்பத்தான் கொஞ்சம் க்ளைமட் மாறுது.மனசும் கொஞ்சம் ஜில்லுனு இருக்கு. இப்பவாவது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம், சிரிக்கலாம் வாங்க‌. ஏன்னா அப்ப‌ நாம‌ சிரித்து இருந்தால், நம்மளை எங்க‌ சேர்க்க‌ வேண்டுமோ அங்கே சேர்த்து விட்டு இருப்பார்கள். அதுதான் இப்ப‌ ரிலாக்ஸ்சா சிரிக்கலாம் வாங்க‌.

இலக்கியத்தில், இராமாயணத்தில் ஒரு காட்சி வருமே, '''அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்'''ராமனும் சீதா தேவியும் ஒருவரோடு ஒருவர் கண்ணோடு கண் நோக்கியதையே எடுத்துக் கொள்வோம். அந்த‌ வார்த்தைகளை அப்படியே உபயோகித்தால் , அது காபிரைட் பிரச்சனைனு அட்மின் சார் கோபித்துக் கொள்வார். எனவே நாம், நம்ம‌ வசதிக்காக‌ ''அவனும் பார்த்தான், அவளும் பார்த்தாள்''என்று மாற்றிக்கொள்வோம். இந்தக் காட்சி, இந்த‌ வசனத்தை கேட்டு யார் யார் எப்படி எப்படி கலாய்ப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்போம்.

சினிமா நடிகர் விஜயகாந்த்
''அவளும் பார்த்தாள், அவனும் பார்த்தான்''. அவங்க‌ பார்கிறதுக்கு ஒரு நிமிடம் நேரம் தா ஆகி இருக்கும் ஆனா அந்த‌ ஒரு நிமிடத்திலே உலகத்தில் எத்தனையோ நிகழ்ச்சி நடந்து இருக்குமே, அந்த‌ புள்ளி விவரத்தை மட்டுமே நான் சொல்லி விடுகிறேன். ஒரு நிமிடதில் 432 குழந்தை பிறந்து இருக்கும், 543 பேர் இறந்து இருப்பாங்க‌, 1657 விபத்து நடந்து இருக்கும், ஏங்க‌ ஒரு ஆட்சியே கவிழ்ந்து இருக்கும்,. நா விட‌ மாட்டங்க‌ இந்த‌ செய்தியை ஐ.நா. சபைக்கே கொண்டு போய் கவன‌ ஈர்ப்பு போராட்டம் நடத்தப் போறேங்க‌.ஆங்க்.

விசு சார்
''அவனும் பார்த்தான் அவளும் பார்த்தாள்'' அவன் பார்க்கும் போது அவள் பார்த்தாளா? அவள் பார்க்கும் போது அவன் பார்த்தானா? அவன் பார்க்காத‌ போது அவள் பார்த்தாளா இல்ல‌ அவள் பார்க்காத‌ போது அவன் பார்த்தானா? இல்ல‌ யார் யாரை பார்க்கும் போது யார் யாரை பார்த்தது?என்னப்பா எதுவா இருந்தாலும் விவரமா சொல்லுப்பா அப்பத்தா எனக்கும் புரியும்.

விஜய்

''அவனும் பார்த்தான் அவளும் பார்த்தாள்'''ம்ம்ம்ம், 'அவளும் பார்த்தாள் அவனும் பார்த்தான்''ம்ம்ம். சரிங்கண்ணே அவங்களை ஆலுக்காஸ் நகைகளை வாங்கி உறவுகளை பலப்படுத்திக்கச் சொல்லுங்கண்ணே. சரிங்கண்ணே வணக்கண்ணே, வரேங்கண்ணே.

கவண்டமணி
''அவனும் பார்த்தான் அவுளும் பார்த்தாள்'''ம்ம் அட்ரா சக்கை அட்ரா சக்கை, ஐயோ நான் பார்த்த‌ இந்த‌ ரகசியத்தை யாருக்காவது சொல்லியே தீரனுமே யார் கிட்ட‌ சொல்றது ஐயோ யார் கிட்ட‌ சொல்றது? அந்த‌ கரடி தலைய‌ , பரோட்ட‌ தலைய‌ செந்தில் தான் இதுக்கு சரியான‌ ஆளு அவன் கிட்ட‌ சொன்னா இந்த‌ ஊருக்கே தெரிஞ்ச‌ மாதிரி. ஐயா ராசா செந்தில் கண்ணா எங்கடா வாடா எங்கடா இருக்கிறே ஐயோ எனக்கு தலையே வெடிச்சுடும் போல‌ இருக்கே.

சந்தானம்
''அவனும் பார்த்தான் அவளும் பார்த்தாள்''ப்ரோ, ஏ நான் பார்க்கக் கூடாதா நீங்க‌ மட்டுந்தா பார்க்கனுமா, ஏ ப்ரோ இந்த‌ ரவுசு பண்ற‌, இனிமே அவள் என்னை மட்டுமே பார்க்கனும் இதுக்கு மட்டும் எதனா ஐடியா குடுக்க‌ ப்ரோ.

போதுமடா சாமி. நம்மை பத்தியே நம்மால‌ யோசிக்க‌ முடியலே. இதலே மற்றவங்க‌ மூளைக்குள்ளே நாம‌ நுழைந்து , அவங்க‌ என்னா யோசிக்கிறாங்கனு நாம‌ யோசித்து வேண்டாமடா சாமி. முதலில் நாம‌ ரிலாக்ஸ் ஆகலாம்பா.

5
Average: 5 (2 votes)

Comments

ரஜினி ஒரே சிரிக்க வச்சிட்டிங்க போங்க. மெண்ட் ரிலாக்ஸ் ஆனது

Be simple be sample

சூப்பர். நல்ல ரசனை. மத்தவங்க‌ பேசனது ஓ.கே. நம்ம‌ தலைவர் ரஜினிய‌ விட்டுட்டீங்க‌. சரி நம்ம‌ ரஜினி எப்படி பேசுவீங்க‌? அதாங்க‌ நீங்க‌...

எல்லாம் சில‌ காலம்.....

செம‌ போங்க‌,ஹ‌ ஹ‌ ஹ‌ ஹ‌ ஹ‌,அடிகொருக்கா மைன்ட‌ ரிலேக்ஸ் பன்ன‌ வாங்க‌

அருமையான கற்பனை. ரசித்தேன் ரஜினி. விசு - :-)

‍- இமா க்றிஸ்

ஹாய்,
''மெண்ட் ரிலாக்ஸ் ஆனது''பாராட்டுக்கு நன்றி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

விசு & விஜயகாந்த் டயலாக்கை விட‌ கடைசியா சந்தானம்... சூப்பருங்க‌. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விஜய் பேசுவதில் ''அவனும் பார்த்தான் அவளும் பார்த்தாள்'''என்பதை கவண்டமணி பேசுவது போலவும் மீதியை செந்தில் பேசுவது போலவும் கற்பனை செய்யுங்கள்.

நிஷா