சீடை

தேதி: June 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

இட்லி அரிசி (புழுங்கல்) - ஒரு கிலோ
உளுத்தம் பருப்பு - 125 கிராம்
பயத்தம் பருப்பு - 125 கிராம்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - 2
நெய் அல்லது டால்டா - 4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு


 

அரிசியை கழுவி விட்டு 3 மணிநேரம் ஊற வைத்து கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து கெட்டியாகவும் நைசாகவும் அரைக்கவும்.
பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும்.
தேங்காயை சன்னமாக துருவி நன்கு ஈரப்பதம் போக வதக்கி வைத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்திருக்கும் பருப்பு வகையை மிக்ஸியில் போட்டு பொடித்து மா சல்லடையில் சலித்து எடுக்கவும். (கப்பி இல்லாமல் இருக்க வேண்டும் இல்லையெனில் சீடை வெடிக்கும்)
ஒரு பாத்திரத்தில அரைத்த மாவில் நெய் கலந்து அடுப்பில் வைத்து சிறிது வாட்டிக் கொள்ளவும் (இப்படி செய்வதால் ஈரத்தன்மை நீங்கிவிடும்)
வாட்டிய மாவோடு வதக்கிய தேங்காய் துருவல், பயத்தம்மாவு உளுத்தம்மாவு சேர்த்து நன்கு ஒன்று சேர பிசையவும்.
பிசைந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக உருட்டி ஒரு வெள்ளை துணியில் போட்டு உலர்த்தவும். உருண்டையை அழுத்தியோ அல்லது நன்கு உருண்டையாக வரணும் என்றோ உருட்டக்கூடாது லேசாக ஒரு உருட்டு அப்படி உருட்டணும் அழுத்தி வட்டமாக இருக்கணும் என்று உருட்டினால் சீடை வெடிக்கும்.
சீடை நன்கு உலர்ந்ததும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீடையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான சீடை தயார்.

சீடையை அழுந்த உருட்டக்கூடாது சும்மா லேசாக உருட்ட வேண்டும் இல்லையென்றால் வெடிக்கும் அப்புறம் ஹெல்மெட் போட்டுக்கிட்டுதான் வறுக்கணும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது வெள்ளையா இருக்கே! நான் பார்த்தது... நல்ல பொன்னிறமாக இருந்துதே!

‍- இமா க்றிஸ்

என் குறிப்பினை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இமாம்மா இதுவும் பொன்னிறமாக தான் இருக்கு மொபைல்ல எடுத்த போட்டோ என்பதால் கலர் டல் ஆய்டுச்சு :o மிக்க நன்றிம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனக்கு சீடை செய்யணும்ன்னாலே எனக்கு பயம். லாஸ்ட்டா ஹெல்மெட் வேற போட்டுக்க சொல்லறீங்க. நீங்க செய்த சீடையை எனக்கு அனுப்பிடுங்க.

Be simple be sample

அப்புறம் ஹெல்மெட் போட்டுக்கிட்டுதான் வறுக்கணும். // - hahaha... i like it.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க அதெல்லாம் ஒண்ணும் ஆகாது பயப்படாம களத்துல இறங்குங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி அப்போ சீடைய லைக்கல ஹ்ம்ம் ;) ஏற்கனவே யாரோ சீடை பத்தி இங்க பேசினப்போ இப்படி சொன்ன ஞாபகம் அதான் அலார்ட்டா இருக்கனுமேன்னு நானும் சொல்லி வச்சேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்னிக்கு அவசரத்துல ஒரு முக்கியமான விசயம் சொல்ல விட்டுட்டேன்ம்மா இந்த சீடை புழுங்கல் அரிசியில் செய்வதால் பொன்னிறத்துக்கு சற்று குறைவான நிறமாகத்தான் இருக்கும்.

நீங்க சொன்ன பொன்னிறமான சீடைக்கு பச்சரிசியை நன்கு ஊறவைத்து இடித்து அந்த மாவை நன்கு காற்றில் ஊதி விட்டால் பறக்கும் அளவு வறுக்கனும் அதில் தேங்காய் துருவலை வாட்டி சேர்த்து அத்தோடு பொட்டுக்கடலையை பொடித்து மாவாக்கி சலித்து உப்பு சேர்த்து செய்தால் சிவக்க இருக்கும் அந்த சீடை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.