தேதி: June 29, 2015
முட்டை ஓடு - 2
ஃபேப்ரிக் பெயிண்ட்
ப்ரஷ்
ஸ்ட்ரா
ஃபெவிக்கால்
கத்தரிக்கோல்
ஊசி
ரவா - சிறிதளவு
ஏதேனும் ஃப்ளவர் ஸ்டாண்ட்
ப்ளாஸ்டிக் இலைகள்
எக் ஷெல் ஃப்ளவர் செய்ய தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். முட்டை ஓட்டினைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

முட்டை ஓட்டினை அரை பாகம் வரும் அளவிற்கு கத்தரிக்கோலால் வெட்டிக் கொள்ளவும்.

இதே போல் மூன்று முட்டை ஓடுகளை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

வெட்டி எடுத்த முட்டை ஓட்டின் வெளிப்புறம் மட்டும் ஃபேப்ரிக் பெயிண்டை அடிக்கவும்.

படத்தில் உள்ளவாறு ஸ்ட்ராவின் ஏதேனும் ஒரு முனையில் 2 செ.மீ உயரத்திற்கு மெல்லிய ஒயர் அளவுக்கு கத்தரிக்கோலால் நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய பக்கத்தில் பாதியளவு ஃபெவிக்காலைத் தொட்டுக் கொண்டு ரவாவில் லேசாகப் பிரட்டவும்.

ரவா ஃபெவிக்காலுடன் நன்றாக ஒட்டிக் கொண்டதும் மஞ்சள் நிற ஃபேப்ரிக் பெயிண்டில் லேசாக ஒற்றி எடுத்துக் காயவிடவும்.

முட்டையின் நடுவில் ஸ்ட்ரா நுழையும் அளவிற்கு ஊசியால் மெதுவாக ஒட்டையிட்டுக் கொள்ளவும். முட்டையின் உட்புறம் வழியாக ஸ்ட்ராவை விட்டு, மேலே பாதியளவிற்கு மகரந்தம் தெரிவது போலச் சொருகிவிடவும்.

இதே போல் மீதமுள்ள முட்டை ஓட்டிலும் செய்து, அடிப்பகுதியில் ப்ளாஸ்டிக் இலைகளை ஒட்டிவிடவும்.

தயார் செய்த எக் ஷெல் ஃப்ளவரை பூச்சாடியில் வைத்து அலங்கரிக்கவும்.

Comments
முட்டை ஓடு
யோசனை அருமை. பூக்கள் வெகு அழகாக இருக்கின்றன. பாராட்டுகள் டீம்.
- இமா க்றிஸ்
egg flower
Egg flower its very nice craft
Superve
ML
எப்புடி இப்புடி
மக்களே... நீங்களும் அழகு, உங்க வேலையும் அழகு... எப்படி இப்படிலாம்?? உங்களால் மட்டுமே முடியும். கலக்கறீங்க... முட்டை மோட்சம் அடைஞ்சுடுச்சு. ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முட்டை ஓடுப் புக்கள்
அழகிய பூக்கள்!! அருமையான ஐடியா
நிஷா
முட்டை ஓடு மோட்சமடைஞ்சுடுச்சு!!! (வனிதா)
ஒரு நாள் ஒரு முட்டை ஓடு கடவுள்கிட்ட வந்து
“கடவுளே இந்த மக்கள் என்னிடமிருந்து வரும் முட்டை, கோழியை பயன்படுத்திக்கிறார்கள், ஆனால் என்னை(முட்டை ஓடு) மட்டும் குப்பையில் போட்டுவிடுகிறார்கள். நான் என்ன பாவம் பண்ணினேன்? என் பாவத்திற்கு விமோச்சனமே இல்லையா?” ன்னு கேட்டது.
அதற்கு கடவுள் “உன்னை எத்தனை பேர் பூச்செடிக்கு உரமா போடுறாங்க , நீ இப்படி சொல்லலாமா?” ன்னு கேட்டார்.
அதுக்கு முட்டை ஓடு “வீட்ல பூச்செடி இல்லாதவங்க குப்பையிலதானே போடுறாங்க . அவங்களுக்கு என் அருமையை புரியவைக்ககூடாதா?” அப்படின்னு கேட்டுச்சாம்.
அப்ப கடவுள் “நீ அறுசுவை டீம் கிட்ட போ. உன்னை அழகான ஒரு பூவா மாத்திடுவாங்க. இதனால் நீ பாவ விமோச்சனம் பெற்று மோட்ச்சமடைவாய்!!” என்றார்.
அப்படி வந்தது தான் இந்த முட்டை ஓடு பூக்கள்.
இதைத்தாங்க நம்ம வாணி முட்டை ஓடு மோட்சமடைஞ்சுடுச்சு ன்னு சொல்றாங்கன்னு நினைக்கின்றேன்.
வனியக்கா ஒரு சின்ன கற்பனை உங்கள் வரிகளை வைத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் , ரசித்திருந்தால் சந்தோசம்
நிஷா
முட்டை ஓடு
அழகா இருக்கு, நல்ல யோசனை :).
முட்டை ஓட்டில் கறுப்பு புள்ளிகள் வைத்து, நிறைய பூக்கும் ரோஜா செடிகளுக்கு கண்திருஷ்டி படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே ரோஜாகுச்சிகளில் மாட்டுவது எங்கள் ஊரில் வழக்கம். அதே போல் நிறைய காய்கள் இருக்கும் செடிகளுக்கு இடையில் குச்சிகளை நட்டி அதில் கறுப்பு புள்ளி வெச்ச முட்டை ஓட்டினை மாட்டிவைப்பதும் உண்டு.
வாழ்த்துக்கள் அறுசுவை டீம் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
முட்டை ஓடு
ரோஜா செடிகளில் முட்டை ஓடு - நானும் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன் அருள். பெத்தா புள்ளியெல்லாம் வைச்சு இருக்க மாட்டாங்க. அதனால நறுக்கின தண்டில் நீர் இறங்காமல் வைக்கிறாங்க என்று நினைச்சேன்.
//நிறைய காய்கள் இருக்கும் செடிகளுக்கு இடையில்// இது பறவைகளை விரட்டுவதற்காக இருக்கலாம்.
ஒரு க்ராஃப்ட் வந்ததும் சுவாரசியமா சில விஷயங்கள் தெரிய வந்து இருக்கு. புள்ளி வைச்ச முட்டை ஓடு செடிகளில் அழகாக இருக்கும். நானும் மாட்டப் போறேன். :-)
- இமா க்றிஸ்
முட்டை ஓடு
நிஷாவின் கற்பனை அருமை. :-) குட்டீஸுக்குச் சொல்லிக் கொடுக்க அழகா ஒரு கதை கிடைச்சிருக்கு. :-)
- இமா க்றிஸ்
இமா அவர்களுக்கு
நன்றி. என் கதையை நீங்கள் ரசித்ததற்கு, உங்கள் பதிவுகளை படித்திருக்கின்றேன் அவை என் பள்ளி தமிழ் ஆசிரியரை நினைவுப்படுத்தும்.அரவணைப்பு,கண்டிப்பு, பாராட்டு இவற்றை சரியான நேரத்தில் கொடுப்பது.
நிஷா
நிஷா
அவ்வ்!! :-) சந்தோஷம் நிஷா. மிக்க நன்றி.
இப்படி எதையாவது சொல்லி.... குழப்படியாக இருக்கிற இமாவை நல்லபிள்ளையாக்கப் பார்க்கிறீங்க!! :-)) ம்... 'அவர்கள்' எல்லாம் வேண்டாம், வெறும் இமா போதும். :-)
- இமா க்றிஸ்
nisha
வனியக்கா ஒரு சின்ன கற்பனை உங்கள் வரிகளை வைத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் - thappe illaingo... nalla karpanai :) padithen rasithen.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முட்டை ஓட்டில் பூக்கள்
செய்தாச்சு செண்பகா. இதைத் திறந்து வைத்துக் கொண்டு செய்திருக்க வேண்டும். செய்முறை மனதில் இருக்கும் என்று நினைத்தேன். மறந்து போனதால் சின்னச் சின்னத் தப்புகள் செய்தேன். :-) ஆனாலும்.... அழகாக வந்தது. ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறேன்.
- இமா க்றிஸ்