டூர் உணவு

2 நாள் இருக்கிற மாதிரி உணவு செய்ய வேண்டும்.அதற்கு எதாவது வழி கூருங்கள் தோழிகளே.ப்ளீஸ்ப்பா. கொஞ்சம் சொல்லுங்கள். அனுபவம் உள்ளவர்கள் சொல்லுங்கள்..........

டூர்க்கு நீங்க கலந்த சாதமா, கிரேவி வகைகளா, வறுவலா, சான்ட்விச்சா, ரோட்டி வகைகளா, தொக்கு வெரைட்டியா எதுவும் நீங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் எல்லாமே இந்த லிங்க் போய் பொறுமையா தேடி பார்த்து தேவையான ரெசிப்பியை நீங்க தேர்ந்தெடுக்கலாம். இதுல எல்லாமே பயண உணவுகள் தான்.

http://www.arusuvai.com/tamil/recipes/204

வாணி அக்கா, நீங்க சொன்ன லிங்கை நான் முதலிலையே பார்த்து விட்டேன். ஆனால் அவை எத்தனை நாள் இருக்கும் என்பதை குறிப்பிடவில்லை. எனக்கு சப்பாத்தி மற்றும் அதற்கான சைட் டிஷ் வேணும். ப்ளீஸ் அக்கா உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்

பயணத்திற்க்கு உணவு எடுத்து செல்கையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

* எண்ணெய் சேர்க்காமல் பிசைந்த சப்பாத்தி, ஃபுல்கா எடுத்து செல்லலாம்.

* தேங்காய், உருளை கிழங்கு, முட்டை மற்றும் பருப்புகள் சேர்க்காத உணவுகளாயிருப்பது நல்லது. அப்போது தான் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

* தேங்காய் சேர்க்க வேண்டியிருந்தால் தேங்காயை வறுத்து சேர்ப்பது, அல்லது வறுத்து அரைப்பது உகந்தது.

* அசைவ உணவுகள் கிரேவி அதிகமில்லாத டிரையாக இருப்பது நல்லது.
* கிரேவியாக வேண்டிய பட்சத்தில் புளி சேர்த்து சமைக்கலாம்.

* தொக்கு வகைகள் சிறந்தது.

* எண்ணெயும், புளியும் கொஞ்சம் கூடுதல் சேர்த்துக் கொண்டால் வெயில் காலத்திலும் 2 நாட்கள் தாக்குப் பிடிக்கும்.

* உணவுகள் நன்கு ஆறியதும் பாக்கிங்க் செய்யவும்.

http://www.arusuvai.com/tamil/node/30651 - தக்காளி ஊறுகாய்
http://www.arusuvai.com/tamil/node/24356 - மல்லிச் சட்னி
http://www.arusuvai.com/tamil/node/18746 - குடைமிளகாய் தொக்கு
http://www.arusuvai.com/tamil/node/9278 - மட்டன் சுக்கா வறுவல்
http://www.arusuvai.com/tamil/node/16025 - உடனடி உப்புகண்டம்
http://www.arusuvai.com/tamil/node/30018 - கோழி உப்புக்கறி
http://www.arusuvai.com/tamil/node/25531 - மல்லி மிளகு கோழி
http://www.arusuvai.com/tamil/node/14824 - சிக்கன் 65
http://www.arusuvai.com/tamil/node/31593 - கோழி வறுத்த கறி (புளி சேர்த்தது)
http://www.arusuvai.com/tamil/node/28770 - ஃபிஷ் ப்ரை

அறுசுவையில் இன்னும் ஏராளமான குறிப்புகள் இருக்கு, நேரம் கிடைத்தால் தேடிப் பாருங்கள் :)

மேலும் சில பதிவுகள்