ஓரம்போ ஓரம்போ....

"ஓரம்போ ஓரம்போ
ருக்குமணி வண்டி வருது"

என்னம்மா பாட்டு சத்தம் அதிகமா இருக்குன்னு பார்க்கறீங்களா. இந்த பாட்டில் வர ஹீரோ சைக்கிள் ஓட்ட பழகும்போது பாடுவார்.

சரி அது எங்களுக்கு தெரியாதா. நாங்க பார்த்தது இல்லயா இப்ப என்ன விஷயம்ன்னு கேட்கறீங்க. புரியுது புரியுது மேட்டர்க்கு வந்திடறேன்.

நான் சைக்கிள் ஓட்ட பழகிட்டேன். இப்பதான் ஒரு வாரமா பழகி ஓட்ட ஆரம்பிச்சேன். ;)

என்னம்மா இப்படி பண்றீயேம்மா. அங்கங்க ஏரோப்பிளான், மெட்ரோ ரயில்ந்னு ஓட்டறாங்க. ஒரு சைக்கிள் ஓட்டறதுக்கு இவ்வளவு பில்டப்ப்பா கேட்கறீங்களா.( ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்... :D)

அது என்னவோ இப்பதாங்க பழக முடிந்தது. முன்பு ஒரு முறை இமாம்மா ஃபேஸ்புக் ல ஒரு போட்டோ போட்டாங்க. வண்டலூர் zoo ல சைக்கிள்ல போற மாதிரி. அப்பதான் ரொம்ப வருத்தப்பட்டேன் சைக்கிள் பழகலயேன்னு, இப்ப கொஞ்சம் நாள் முன்னாடி நம்ம அருளும் சைக்கிள் வாங்கி தினமும் ஓட்டறேன்னு சொன்னாங்க. எப்படியாவது பழகிக்கணுன்னு பழகியாச்சு.

இன்னும் முழுசா பழகல. திருப்பம்லாம் சரியா வரல. யாராவது எதிர்க்க வந்திட்டா தடுமாறுது, பாவம் எதிரில் வரவங்க, நான் எந்த பக்கம் திரும்ப போறேன்னு தெரியாம (எனக்கும்தான்) அவங்க மேல மோதிடுவேன்னு பயந்துட்டே என்னை தாண்டி போற வரைக்கும் அவங்க உயிர் அவங்க கைல இல்ல. ஒரே பாவாமாத்தான் இருக்கு இருந்தாலும் என்ன பண்ண முடியும் சொல்லுங்க. அடிபடாம சைக்கிள் பழகிடுமா(யாருக்குன்னு கேட்காதிங்க) :p .வீட்டில் இருக்கிற குட்டிங்களாம் அறிவுரை வழங்கறாங்க எப்படி ஓட்டணுன்னு. பெரியவர் சொன்னாகூட பரவாயில்ல. சைக்கிள் ஓட்ட தெரியாத குசுமாங்களாம் சொல்லறாங்க.

நிறைய கிண்டல், கேலிகள் இவ்வளவு நாள் கழிச்சு சைக்கிள் பழகுறியேன்னு. கற்றுக்கொள்ள வயது காரணம் காட்டி நிறுத்திட்டா ஆசை எப்படி நிறைவேறும். கற்றுக்கொள்ள வயசு இருக்கா என்ன சொல்லுங்க. நெக்ஸ்ட் ஸ்கூட்டி ஓட்ட பழகணும். ;)

நீங்களாம் சின்ன வயசுலயே எப்படியும் பழகிருப்பிங்க உங்க அனுபவத்தை சொல்லுங்களேன்.

Average: 5 (2 votes)

Comments

//வண்டலூர் zoo ல சைக்கிள்// ;)))) என் படம் இப்பிடில்லாம் ஆட்களை தூண்டிவிடும்னு தெரிஞ்சிருந்தா.... வண்டலூர்ல குதிரை ஓட்டின படம், யானை ஓட்டின படம், பாம்பு மாலை மாட்டின படம், முதலை கூட விளையாடின படம்லாம் போட்டிருப்பேன். ஹ்ம்! தப்பிட்டீங்க. எல்லா ஃபோட்டோவும் டிலீட் ஆகிருச்சு. ;)))

//சைக்கிள் ஓட்ட தெரியாத குசுமாங்களாம் சொல்லறாங்க.// :-) எனக்கு புஷ்பைக் ஓட்டத் தெரியாத ஆண்கள் சிலரைத் தெரியும். பழகுறப்ப, உடம்புல அடிபட்டா காயம் ஆறிரும்; மனசுல பட்டா ஆறுறது சிரமம். அதுல இருந்து வெளிய வர ஒண்ணு - இதமான இன்னொரு மனசு உதவணும், அல்லது ஒரு பிடிவாதத்தோட களமிறங்கணும்.

இவங்க அட்வைஸ் - எடுத்துக்கலாம் நீங்க. அவங்க ஓட்டப் பயப்படுறதுக்கு ஏதாவது இடிபாடான அனுபவம் காரணமா இருந்திருக்கும்ல! அதை வைச்சு இப்படில்லாம் ஓடப்படாது, இப்படித்தான் ஓடணும் என்கிறதைச் சொல்றாங்க. பிரச்சினையே இல்லாம ஓட ஆரம்பிச்சவங்க கொடுக்கிற அட்வைஸ் அனேகம் - 'இதுல என்ன பிரச்சினை இருக்கு!', 'சிம்பிள் மாட்டர்!' என்பது போல இருக்கும். அதைக் கேட்டா... 'நம்மால முடியலயே! நாம மக்கோ!' என்று கூடத் தோணும். :-) ஓடத் தெரியாதவங்க சொல்ற அட்வைஸ்ல விஷயம் நிறைய இருக்கும். ஓடவே வேணாம்' என்று டிஸ்கரேஜ் பண்ணாதவரை... ஏத்துக்கலாம்.

// கிண்டல், கேலிகள் இவ்வளவு நாள் கழிச்சு சைக்கிள் பழகுறியேன்னு// ம்... இப்போ பெருமையா இருக்குல்ல! நமக்குப் பிடிச்சதை இன்னொருத்தர் தடுக்க அவங்களுக்கு உரிமை இல்லை. சீக்கிரமா ஸ்கூட்டி ஆரம்பியுங்க. சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா ஸ்கூட்டி சுலபமா வரும்.

//நீங்களாம் சின்ன வயசுலயே எப்படியும் பழகிருப்பிங்க உங்க அனுபவத்தை சொல்லுங்களேன்.// எங்கயோ முன்னாலயே சொல்லிட்டேன். ரொம்...ப சின்ன வயசுல பழகினது. அந்த வயசுக்கு சைக்கிள் ஓடுறது விளையாட்டாத்தான் இருந்துது.

~~~~
சில விஷயங்கள் என்ன காரணத்தாலோ மனசோடு ஒட்டிக் கொண்டுவிடுகின்றன. முதல் முதலாக 'ஓரம்போ' பாட்டைக் கேட்ட பொழுது எப்போதோ ஒரு தீபாவளி மலரில் பார்த்த கார்ட்டூன் நினைவுக்கு வந்தது.

‍- இமா க்றிஸ்

//வண்டலூர்ல குதிரை ஓட்டின படம், யானை ஓட்டின படம், பாம்பு மாலை மாட்டின படம், முதலை கூட விளையாடின படம்// இமா!! நிஜமாவேவா??!! :( அம்மாடியோ!! உங்களுக்கு ரொம்ப‌ தைரியம். நான் மாட்டேன் சாமி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சைக்கிள் ஓட்ட‌ 6வது படிக்கும் போது கத்துக்கிட்டேன். தனி ரோடுன்னா இப்பவும் ஓட்டுவேன்... ஆனாலும் ட்ராஃபிக்கில் ஓட்ட‌ ஸ்கூட்டர் போல‌ சைக்கிள் எனக்கு தோதுபடல‌. எப்ப பேலன்ஸ் போகும், விழுவேன்னு ஒரு பயம். அப்போ பள்ளி விடுமுறையில் அக்ரகாரத்து பிள்ளைகள் எல்லாம் ஒன்று கூடி கற்றுக்கொண்டோம். யாரும் பெரியவர்கள் எல்லாம் இல்லை சொல்லிக்கொடுக்க‌. சின்னதுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வீட்டில் பைசா வாங்கிக்கொண்டு கடையில் குட்டி சைக்கிள் வாடகைக்கு எடுத்து வந்து பழகினோம். ஒருவர் ஓட்ட‌ மற்றவர் எல்லாம் அந்த‌ சைக்கிளை பிடித்துக்கொண்டு கற்றுக்கொடுப்பார்கள். தனியே ஓட்ட‌ பழகிவிட்ட‌ நேரம், ஒரு நாள் தெருவில் வந்த‌ மாட்டு வண்டிக்கு ஓரம் ஒதுங்கி நின்று கொண்டிருந்த‌ என்னை தண்ணியை போட்டு ஓட்டின‌ மாட்டு வண்டிக்காரர் காலில் மாட்டு வண்டி சக்கரத்தை ஏற்றிவிட்டு போயிட்டார். என் கால் கட்டைவிரல் நகத்தை ஹாஸ்பிடல் போய் பிடிங்கிய‌ வலி இன்னைக்கும் அந்த‌ விரலையும் சைக்கிளையும் மாட்டு வண்டிகளையும் பார்க்கும் போது நினைவு வரும் :) கிராமத்துக்கு போனா அதன் பின்னும் பலமுறை சைக்கிள் கடன் வாங்கி ஓட்டியது உண்டு. வயது கூட‌ கூட‌ பலதும் விட்டுப்போச்சு. வாழ்த்துக்கள்.... அடுத்த‌ ஸ்டெப் எடுத்து வைங்க‌ சீக்கிரம் :) இதை பழகிட்டா அதெல்லாம் ஜுஜுபி மேட்டர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நிஜமாவேவா??!!// ;))) இங்க இமா என்ன ரீல் விட்டாலும் நம்புறதுக்கு ஆட்கள் இருக்காங்கன்னு தெரியும். ;))

ஒரேயொரு தடவை யானை மேல ஏறியிருக்கேன். சின்னதுல இருந்தே பாம்புக்குப் பயம் கிடையாது. ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது ஒரு புடையன் பாம்பை உயிரோட பிடிச்சு ஸ்கூலுக்கு கொண்டு போய்க் கொடுத்தேன். அது கைல இருந்த வரை யாரும் என் அருகே வரவில்லை. ;)) அதிபர் தூர நின்று பார்த்தார். பிறகு லாப் அஸிஸ்டண்ட்டைக் கொண்டு, அந்தப் போத்தல் மூடியில் ஓட்டை போட்டு, உள்ளே க்ளோரோஃபாம் விட்டு பாம்பு மயங்கும் வரை யாரும் லாப் பக்கமே போக மறுத்தார்கள். இப்போ நினைக்க சிரிப்பா இருக்கு.

இன்னொரு தடவை பாம்பை போத்தலில் போட்டு வீட்ல வைச்சிருந்தேன். அது அடிக்கடி, 'புஸ்..' என்கும். செபா அப்போ பாதம் முழுவதும் எக்ஸீமா போட்டு நடக்க முடியாமல் படுக்கையிலிருந்தார்கள். வந்த எல்லோரும், 'பாம்பு தப்பினால் செபாவால் ஓட முடியாது,' என்று என்னைத் திட்டாமல் திட்டியதில் பாட்டிலோடு புதைத்துவிட்டேன். :-)

குதிரை... சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சின்னவர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறேன். அடுத்த தடவை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஏறிப் பார்த்துருறது என்று இருக்கிறேன்.

அந்த வண்டலூர் ரைட்... அது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஜாலி ரைட். :-) நிச்சயம் எப்போதாவது அறுசுவையில் பகிர்ந்துகொள்ளுவேன்,

‍- இமா க்றிஸ்

எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது பா. சைக்கிள்ல‌ டபுள்ஸ் போக‌ பிடிக்கும். நான் வரட்டுமா?
//நிறைய கிண்டல், கேலிகள் இவ்வளவு நாள் கழிச்சு சைக்கிள் பழகுறியேன்னு. கற்றுக்கொள்ள வயது காரணம் காட்டி நிறுத்திட்டா ஆசை எப்படி நிறைவேறும். கற்றுக்கொள்ள வயசு இருக்கா என்ன சொல்லுங்க.//
கல்விக்கு வயதே கிடையாது.
நாம் கம்ப்யூட்டர்ல‌ டவுட் வந்தா சின்னவங்ககிட்ட‌ தான் கத்துக்கறோம்.
கற்றுகொள்ளவும், கற்றுக்கொடுப்பதற்கும் வயது தடையில்லை.
இன்னும் இன்னும் நிறைய‌ கத்துக்கோங்க‌:)

முதலில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட ரேவதிக்கு என் வாழ்த்துக்கள்!!!
நானும் என் அனுபவத்தை சொல்கிறேன் .நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன். என்னோடு சேர்ந்து என் அண்ணா, அக்காவும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டார்கள். எங்களில் ஒருத்தர் ஓட்ட மற்ற இருவர் பிடிச்சுப்போம்.இப்படித்தான் நாங்க கத்துக்கிட்டோம்.
சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டால் வீரத் தழும்புகள் வேண்டாமா? அதுவும் கிடைத்தது. எங்க அண்ணாச்சிக்கு முட்டிக்கால்ல சிராய்ப்பு, அக்காவுக்கு கெரண்டைக்கால்ல சிராய்ப்பு,எனக்கு அதுக்கும் கீழ பாதத்துலங்க.பாதத்துல எப்படி அடிப்பட்டுச்சுன்னு யோசிக்கிரீங்களா? சைக்கிளை ஓட்டிட்டுப்போயி ஒரு கருவ மரத்துல விட்டேன் நானும் பஞ்சர் என் சைக்கிளும் பஞ்சர்.

“என்னை தாண்டி போற வரைக்கும் அவங்க உயிர் அவங்க கைல இல்ல” – எதிரில் வரவங்கள மறக்காமல் ஹெல்மெட் போடச்சொல்லுங்க

நிஷா

எதிரில் வரவங்கள மறக்காமல் ஹெல்மெட் போடச்சொல்லுங்க - hahhahaaa ;) superappu

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பிள்ளைகள் சைக்கிள் ஓட்டப் படிக்கும் வயதில் நீங்க படிச்சிருக்கீங்க ரேவதி. முயற்சி திருவினையாக்கும் என்று நிருபித்திருக்கீங்க. வாழ்த்துக்கள்:))
இங்கு நாம வண்டி ஓட்டிட்டுப் போறப்ப சைக்கிள் காரங்க சைட்ல போனா ரொம்ப பொறுமையா தான் ஓவர் டேக் பண்ணணும். பல நேரங்களில் சைட்ல வண்டிய ஓவர் டேக் பண்ன முடியாமல் ஒற்றை ரோடுகளில் 20 நிமிடங்கல் வரையும் சைக்கிளை ஃபாலோ செய்தே வந்த அனுபவமும் உண்டு. அப்போ நினைப்பேன் சைக்கிள் ஓட்றவங்களுக்குத்தான் என்னா மருவாதின்னு :))