உல்லன் பூ

தேதி: July 6, 2015

5
Average: 4.2 (6 votes)

 

உல்லன் நூல் - ஆரஞ்சு, பச்சை
நூற்கண்டு
ஃபெவிகால்
க்ளாஸ் ஸ்ட்ரா - ஒன்று

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பூ எந்த அளவிற்கு பெரியதாக வேண்டுமோ அந்த அளவில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதில் ஆரஞ்சு நிற நூலை படத்தில் உள்ளது போல் சுற்றவும்.
தேவையான அளவிற்கு தடிமனானதும் நூலை நறுக்கி விட்டு அவிழ்த்து எடுத்து நடுவில் இறுக்கமாக முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
அதை இரண்டாக மடித்து படத்தில் உள்ளது போல் அடிப்பகுதியை நன்கு தடிமனாக வரும்படி உல்லன் நூலை சுற்றிக் கொள்ளவும். மேல் பகுதியை பூவைப் போல் விரித்து விடவும்.
இரண்டாக மடங்கி இருக்கும் நூலை நறுக்கி விட்டு சீப்பு அல்லது ஊசியை வைத்து அதை தனித்தனியாக பிரித்து விடவும்.
பூவின் அடிப்பகுதி செய்ய பச்சை நிற நூலை பூவின் சுற்றளவை மறைக்கும்படி தேவையான அளவு எடுத்துக் கொண்டு பூத்தொடுப்பது போல் கட்டிக் கொள்ளவும்.
அதன் மேல் பகுதியை பூவை போல் பிரித்து விடவும். அடிப்பகுதியை செய்ய வேண்டிய அவசியமில்லை. இதை ஆரஞ்சு பூவிற்கு அடியில் வைத்து காம்புடன் கட்டி விடவும்.
மீதமிருக்கும் நூலை நறுக்கி விட்டு காம்புடன் சேர்த்து ஒட்டி விடவும்.
காம்பின் அடியில் ஒரு க்ளாஸ் ஸ்ட்ராவை வைத்து சொருகி ஒட்டி விடவும். அதன் மேல் பச்சை நிற உல்லன் நூலை சுற்றி அடியில் ஒட்டி விடவும்.
அழகிய உல்லன் பூ ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பூ வெகு அழகு.

‍- இமா க்றிஸ்

ரொம்பவும் அழகு செண்பகா

நூலில் பண்ணது போலவே தெரியல‌ செண்பகா :) கலரும் பூவும் நிஜம் போல் தெரிகிறது. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா