எள் வெண்டை சப்ஜி

தேதி: July 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - அரை கிலோ
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
வெல்லம் - சிறு துண்டு
வறுக்க :
எள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் பெரிய‌ துண்டுகளாக சற்று சாய்வாக‌ நறுக்கிய‌ வெண்டைக்காயை சேர்த்து தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான‌ அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வைத்து வேக‌ விடவும்.
2 நிமிடம் கழித்து திறந்து தேங்காய் துருவல் மற்றும் சிறுத் துண்டு வெல்லம் சேர்த்து கிளறி மீண்டும் மூடி போட்டு மிதமான தீயில் வேக‌ விடவும்.
வெறும் வாணலியில் எள் மற்றும் சீரகத்தை வறுத்து அவற்றை வறுத்த‌ வேர்க்கடலையுடன் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த‌ எள், வேர்க்கடலை பொடியை வெண்டைக்காய் வெந்ததும் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான எள் வெண்டை சப்ஜி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையா இருக்குங்க. இப்பல்லாம் உங்க குறிப்புதான் அதிகமா வருது. அசத்துங்க பாலநாயகி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ஜெயந்தி. இது சத்தானதும் கூட‌. நானே ரேவ்ஸ் கூட‌ போட்டி போட்டுட்டு இருக்க‌. அவங்கள‌ மிஞ்ச‌ முடியாதுங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

சூப்பர் சூப்பர் ரெசிபியா செய்து அசத்துருங்க.

என் கூட போட்டியா ஒய் திஸ் கொலவெற பாலா. நீங்கதான் இப்ப ஃபுல் பார்ம்ல இருக்கீங்க. வாழ்த்துக்கள் பாலா

Be simple be sample

என்னம்மா இப்டி பண்றீங்களேமா? நீங்க‌ இப்டி கலக்கிட்டு என் மேல‌ பழி போடறீங்களே. இதான் தன்னடக்கமா?

எல்லாம் சில‌ காலம்.....