மசாலா பூரி

தேதி: July 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

கடலை மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
தயிர் - அரை கப்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
ஓமம் - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கரஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
இந்த மாவு கலவையுடன் தயிர் சேர்த்து கிளறவும்.
அதனுடன் சிறிது எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவாக பிசையவும்.
பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு உருண்டையளவு மாவை எடுத்து தேய்த்து பூரியாக திரட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பூரியை பொரித்து எடுக்கவும்.
சுவையான மசாலா பூரி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பூர்ர்ர்ர்ர்ரிரி மாஸ்ட்டர் வீட்ல ஒரே பூரியாப் போட்டு கலக்குரேள் !! :))