தேதி: July 10, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தேங்காய் - ஒன்று (துருவிக் கொள்ளவும்)
வடித்த சாதம் - ஒரு கப் (சிறிது உப்பு போட்டு வடித்து கொள்ளவும் )
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
கறிவேப்பிலை
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

அதில் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு அதில் வடித்த சாதத்தை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.

சுவையான தேங்காய் சாதம் தயார்.

Comments
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம் என்னோட ஃபேவரிட் நித்யா, நான் தாளிக்கையில் பொடிதாக நறுக்கிய இஞ்சி சேர்ப்பதுண்டு. சுலபமா செய்யக் கூடிய சுவையான ரெசிப்பி :)
நன்றி
குறிப்பு வெளியிட்ட டீமிற்கு நன்றி.