எனக்கு இரட்டை குழந்தைகள். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண். 2 வயது ஆக போகிறது. எனது பிரச்சினை என்ன என்றால், இருவரும் வேறு வேறு குணத்துடன் இருக்கிறார்கள். இருவரையும் சமாளிப்பதற்குள் எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் இருக்கிறது. பையன் சற்று அமைதி, பெண் சுட்டி. அவனுக்கு இனிப்புதான் வேண்டும். இவளுக்கு காரம்தான் விருப்பம். அவனுக்கு தூங்கும்போது நான் வேண்டும், பெண்ணுக்கு விழித்துருக்கும்போது வேண்டும். பையனுக்கு தூக்கி வைத்து ஊட்ட வேண்டும், அவளுக்கு அவளே எடுத்து சாப்பிட வேண்டும். பெண்ணுக்கு சாப்பிட தட்டு வைத்தால், பையன் போய் தட்டி விடுவான், இவனை சாப்பிட தூக்கி போனால், பெண் வந்து 'என்னையும் தூக்கு' என்று அழுவாள். சில சமயம் சேர்ந்து விளையாட்டு பல சமயம் சண்டை. (அடித்தல், கடித்தல், பொம்மையை பிடுங்குதல் எல்லாம்). நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம், பெரியவர்கள் யாரும் எங்களோடு இல்லை. குழந்தைகளை டே கேரில் விட்டு செல்கிறோம். காலையில் சமைத்து எங்களோடு அவர்களையும் கிளப்புவதற்குள் போதும்போதும் என்று ஆகிவிடுகிறது. வீடு பெருக்குவதற்கு மட்டும் ஆள் வைத்திருக்கிறேன். எனது கேள்வி என்னவென்றால், இது எப்போது குறையும்? சமாளிக்க எதாவது டிப்ஸ் கிடைக்குமா? இன்னொரு முக்கியமான கேள்வி. குளிக்கும் போது வசதிக்காக இருவரையும் ஒன்றாக குளிக்க வைக்கிறேன். இது சரியா? தவறா? (ஆணும் பெண்ணும் என்பதால்)?
unkal pathivai anupuva
unkal pathivai anupuva porvamaaga padithathaal thalai sutrukirathu . wait pannunka thozhikal pathil tharuvarkal thozhi ..
muthalil vaalthukkal.. oru
muthalil vaalthukkal..
oru kulanthaiyai valarpathukkullaye thinari vidugindranar..
irattai kulanthaigal
romba porumai thevai :D
anubavam illainalum periyavanga solli kettu iruken..
4-5 vayadhu varai sernthu kulippattuvathil ondrum thavarillainu!!
இரட்டையர்
//இது எப்போது குறையும்?// ஸ்கூல் போக ஆரம்பிக்கும் சமயம் குறையும் என்று நினைக்கிறேன். அப்போது சேரும் குழந்தைகளைப் பொறுத்து இவர்கள் ரசனைகளும் கொஞ்சம் மாறும். இப்போதும் இருவருக்கும் வேறு விதமான பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். //சமாளிக்க எதாவது டிப்ஸ் கிடைக்குமா?// மெதுவே மகனையும் தானாகவே சாப்பிட வைக்கப் பாருங்கள்.
//குளிக்கும் போது// சரியா? தவறா?// உங்கள் பிரச்சினை உங்களுக்கு. ஒரு குழந்தையைக் குளிக்க வைப்பது என்பதே, வேலைக்குப் போகும் தாய்க்குப் பெரிய வேலைதான். இருவர்! வசதியானதைச் செய்கிறீர்கள். இது தவறு எதுவும் இல்லை. //2 வயது ஆக போகிறது.// இனி தனித் தனியே குளிக்க, துணி மாற்ற வைப்பது நல்லது. அறிவு வளரும் காலம்; சந்தேகங்கள் வரும். கேட்டார்களானால் குழந்தைகளுக்குச் சரியானபடி நீங்கள் பதில் சொல்ல வேண்டும். குழந்தைகள் எப்போதாவது, தாம் தெரிந்துகொண்டவற்றை இன்னொருவர் முன்னிலையில் பேசி உங்களைச் சங்கடத்திற்குள்ளாக்கலாம். டே கேர், ப்ரீ ஸ்கூலிலும் எதையாவது சொல்லி வைக்கலாம். குழந்தைகள் பேசுவதில் தப்பு இல்லாவிட்டாலும், கேட்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து பெரியவர்கள், குழந்தையிடம் எதையாவது சொல்ல, சின்னவர்கள்தான் குழம்பிப் போவார்கள்.
~~~~
இங்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளவர்கள் சிலர் இருக்கிறார்கள். உங்களைப் போலவே எல்லோரும் பிஸி என்று நினைக்கிறேன். :-) தலைப்பு கண்ணில் பட்டால் கட்டாயம் வருவாங்க.
- இமா க்றிஸ்
twins
எனக்கும் இரட்டைக்குழந்தைகள்தான். இருவரும் ஆண் பிள்ளைகள். நீங்கள் சொல்வது போல் இருவரும் வெவ்வேறு குணாதிசயம். நீங்கள் அனைத்து பிரச்சனைகளும் எனக்கும் இருந்தது. 2 வது வரை கஷ்டம்தான். அப்பறம் நமக்கும் பழகிடும். ஒரு அளவுக்கு இருவரையும் ஒரே வேலை செய்யவே பழக்குவேன். 11/2 வயது முதலே எங்களூடன் அமர்ந்து சாப்பிடும் பழக்கம். ஒன்றாக விளையாட விடுவது, முதலில் ஒருவர் விட்டுக்கொடுத்தால் அடுத்தவர் மற்றொரு முறை விட்டுக்கொடுக்க வேண்டும். இப்படி சில விஷயங்கள். இப்போது முதல் வகுப்பு போய்ட்டாங்க. ஒரு அளவுக்கு அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்வார்கள். சில நாள் ரசியுங்கள் இருவேறான பிள்ளைகளின் சேட்டையை. உங்களை போலவே நானும் பிள்ளைகளை பெரியவர்கள் துணை இல்லாமல்தான் வளர்க்கிறேன். பொறுமை மட்டுமே தேவை.
Be simple be sample
இமா அம்மா
இமா அம்மா, தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
மகனை தானே சாப்பிட வைக்கதான் முயற்சிக்கிறேன்.
// அறிவு வளரும் காலம்; சந்தேகங்கள் வரும்//
இந்த விசயத்தில் எனக்கே இன்னும் சரியாக இவர்களை வளர்க்க முடியுமா என்று நம்பிக்கை வரவில்லை. நான் ஆண்களோடு வளரவில்லை.ஒரு தங்கை மட்டுமே. பணி நிமித்தம் நாங்கள், சொந்த காரர்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தோம். இப்பவும் என் மகன் உடலில் எதாவது சந்தேகம் என்றால் என் கணவரிடம்தான் கேக்கிறேன். இப்போதுதான் உடல் பாகங்களை சொல்லி குடுக்க ஆரம்பித்திருக்கிறோம், இனிமேல்தான் அதை மறைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். இன்னும் பேச்சு முழுதாக வரவில்லை.
இருபாலினரையும் சேர்த்து வளர்ப்பது பற்றி உங்களைப் போல் பெரியவர்கள் தனி பதிவு போட்டால் என்னைப்போல் புதியவர்களுக்கு வழி காட்டுவதாக இருக்கும்.
அன்பு ரேவதி
நீங்கள் சொல்வது மிகவும் சரியே. நாளாக நாளாக பழகிவிடுகிறது. அவர்கள் வேலை செய்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். மெதுவாக பழக்கமாக கொண்டு வர வேண்டும். குறும்புகளை பல நேரம் ரசிக்கவும் செய்கிறோம். என் பொறுமை இப்போது பல மடங்கு அதிகமாகிவிட்டது :)
அன்பு ஹாஜிரா & சாரா,தங்கள்
அன்பு ஹாஜிரா & சாரா,
தங்கள் பதிலுக்கு நன்றி. என் கணவர் எனக்கு இதில் எல்லா விதத்திலும் உதவுகிறார். உதவுகிறார் என்பதை விட, பாதி வேலையை அவர் பங்கிட்டு செய்கிறார். நாங்கள் காதலித்து மணந்தவர்கள். இருவரும் ஓரே அலுவலகம். அதனால் வேலை நேரமும் ஒன்றே. இந்த காரணங்களால் ஓரளவு சமாளிக்க முடிகிறது.
உமா
//எனக்கே இன்னும் சரியாக இவர்களை வளர்க்க முடியுமா என்று நம்பிக்கை வரவில்லை.// :-) அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம். சாதாரணமாக இருங்க. //இருபாலினரையும் சேர்த்து வளர்ப்பது பற்றி// இரட்டையர் என்று இல்லாமல் எத்தனை வீட்டில் ஆண், பெண் குழந்தைகள் வளர்ராங்க! பயப்படாதீங்க. நீங்க கேட்டீங்கன்னு சொன்ன பதில் அது. யோசிக்க எதுவுமே இல்லை சகோதரி.
- இமா க்றிஸ்
நன்றி இமா அம்மா, இவர்கள்
நன்றி இமா அம்மா,
இவர்கள் பிறந்தபோது பெரியவர்கள் குழந்தைகளை எங்களுடன் அனுப்ப மறுத்துவிட்டார்கள். எங்களால் தனியாக வளர்க்க முடியாதென்று. நாங்கள் குழந்தைகளை பிரிந்து இருக்க முடியாது என்று சண்டை போட்டு இங்கு தூக்கி வந்தோம். அதனால் எனக்கு எப்பவும் சின்ன பயம். எங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்கிறோம். எல்லாம் கடவுள் பார்த்துகொள்வார்.
Uma
தேவை இல்லாத பயம் .2 வயசு வரைக்கும் தான் பெரிய கஷ்டம் அதையே கடந்துட்டீங்களே . இனி பரவாயில்ல .எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டினம் . எனக்கு ரெட்டை குழந்தையில்ல ,ஆனா 2 பேரும் அண்டர் த்ரீ .நீங்கள் சொல்லுற மாதிரியே தான் .ஒராளுக்கு இனிப்பா இருந்தா வேணாம் .ஒராளுக்கு மிளகு சேத்தா வேணாம் . ஒராள் தூங்கினா மற்ராள் கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்கும் .ஒராளுக்கு புடிக்காத விளாட்டை அடுத்த ஆள் தொடக்குடாது ஓடிப்போய் புடுங்கி எறியிறது . சின்னது டொய்ஸ் பாக்ஸ் பக்கமே போகாது . என்னோட புக்ஸ் பாத்திரம் அப்டி. எதாவது பெரியாக்கள் யூஸ் பண்ணுறதுதான் வேணும் .வேற வேற மாதுரி குணமா இருந்தா மட்டுமில்ல ஒரே குணமா இருந்தாலும் பிரச்னை வரும்தான் .எதையாவது ஒன்றை பிடிச்சு வச்சுக்கொண்டு சத்தம் போடுவினம் .இருந்தாலும் நான் அதுக்கேற்ற மாதிரி என்னையும் வீட்டையும் விளாட்டையும் சாப்பாட்டையும் சூழ்னிலை யையும் மாத்தினேனே தவிர குழந்தைகளை மாத்த வேணும் எண்டு முயற்சி எடுக்கவில்லை . ஏனெண்டா அது இப்போதைக்கு முடியாது . குழந்தைகள் அவர்களின் இயல்பா இருக்குறதுதான் அழகு .வேலைக்கும் போய்க்கொண்டு ரெட்டை குழந்தைகளை பாக்குறது சரியான சிரமமா இருந்தாலும் நீங்கள் துணிச்சலாவும் ஸ்மாட் ஆவும் முடிவெடுக்குறது நடந்து கொள்ளுறது மாதுரிதான் எனக்கு தெரியுது .தேவையில்லாத கவலைகளை விட்டுட்டு குழந்தைகள் செய்யுற அடவடித்தனங்களை ரசிச்சு சகிச்சு நாட்களை என்ஜாய் பண்ணுங்கோ .எனக்கு கோப்பி குடிக்க வேணும் மாதுரி இருக்கும் . மசின் ல் போட்டு கப் ல விட்டு வைச்சுட்டு அம்புட்டு தான் நைட் டிஷ் வோஷர் போடுரப்ப ஆங்காங்கே தொடாமல் இருக்குற எல்லா கப் கோப்பியும் ஊத்தி கழுவ போடுறது .சாமத்தில குளிக்கிறது . பாரின் எல்லாம் ஈசியா போய் வந்துட்டுதான் இருக்கன் .ஆனா என்னால யூரின் மட்டும் நினைச்ச நேரம் போக முடியுறதில்ல .இருந்தாலும் இது ஒரு சுகமான கஷ்டமா தான் நான் உணருறன் .ஸோ கவலையை கஷ்டமா இருந்தாலும். விட்டுட்டு ரிலாக்ஸா ஈசியா எடுத்து கொள்ளுங்கோ .