தேதி: July 13, 2015
டவல்
சில்க் கலர்ஸ் அல்லது ஃபேப்பரிக் பெயிண்ட்
காய்கறிகள் - வெண்டைக்காய், முள்ளங்கி
ப்ரஷ்
கத்தி
பெயிண்ட் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

வெண்டைக்காயை 5 செ.மீ அளவு துண்டுகளாக நறுக்கவும். முள்ளங்கியை படத்தில் உள்ளது போல் ஒன்றை பூ வடிவிலும், மற்றொன்றை இலை வடிவிலும் கத்தியால் நறுக்கிக் கொள்ளவும்.

துணியில் நீங்கள் டிசைன் செய்ய விரும்பும் இடத்தை தேர்வு செய்துக் கொள்ளவும். ப்ரஷ்ஷில் பெயிண்ட்டை தொட்டுக் கொண்டு, பூ போல் செய்து வைத்திருக்கும் முள்ளங்கியின் மீது தீட்டவும்.

தேர்வு செய்து வைத்துள்ள இடத்தில் ஆங்காங்கே இடைவெளிவிட்டு பூக்களை பதிக்கவும். படத்தில் உள்ளது போல் மூன்று, இரண்டு, ஒன்று என ஆறு பூக்கள் அச்சிடவும்.

வெண்டைக்காயின் மீது வயலட் நிற பெயிண்ட்டை தீட்டவும்.

இதனை முன்பு பதித்த பூக்களின் இடையில் இடைவெளிவிட்டு அச்சிடவும்.

பச்சை நிற பெயிண்டால் ஒவ்வொருப் பூக்களையும் இணைப்பது போல் கொடிகள் வரைந்து விடவும். அடியில் உள்ள ஒரு பூவுக்கு நடுவே கொடிப் போல் வரைந்து அதன் இருப்பக்கத்திலும் முள்ளங்கியை வைத்து செய்த இலையைக் கொண்டு பச்சை நிற பெயிண்டை தொட்டு அச்சிடவும்.

கொடியில் சின்ன சின்ன இலைகள் போல் வரையவும்.

எல்லா பூக்களின் நடுவிலும் மஞ்சள்நிற பெயிண்டால் சிறு புள்ளிகள் வைத்து முடிக்கவும். ஈஸி வெஜ் ஃபேப்பரிக் பெயிண்ட் ரெடி.

Comments
செண்பகா
சிம்ப்ளி சூப்பர், என் மகளுக்கு இதை காண்பிக்கிறேன், ஸம்மர் விடுப்பு தொடங்குகிறது. செய்து பார்த்து சொல்கிறேன் :)
கைவினை
கைவினை அழகாக இருக்கிறது செண்பகா.
//ஈஸி வெஜ் பேப்பரிக் பெயிண்ட் ரெடி.// ஹ்ம்!! நல்ல தமிழ் கேட்டோம்!! :-)))
படித்துச் சிரிக்க... :-)
ஒரு ஆசிரியர் (என் மச்சாள்) இதே போல வரைதல் பாடம் எடுக்க நினைத்திருக்கிறார். சின்னவர்களிடம், 'artடுக்கு வெண்டிக்காய், உருளைக்கிழங்கு எல்லாம் கொண்டு வாங்கோ,' என்றிருக்கிறார். ஒரு குழந்தையின் ஆசிரியத் தாயார் என்னிடம் வந்து, 'டீச்சர், உங்கட மச்சாள் என்ட மகள்ட்ட, ஆட்டுக்கு காய்கறி எல்லாம் கொண்டு வரச் சொல்லியிருக்கிறா!! ஸ்கூல்ல ஆடு வளக்கிறாவோ!' என்று சந்தேகம் கேட்டார். :-)
ஒரு தடவை செபாவின் ஒரு குட்டி மாணவர் காய்களோடு, வகுப்பிற்கு ஒரு சட்டியையும் எடுத்துப் போயிருக்கிறார். :-)
- இமா க்றிஸ்
செண்பகா
சூப்பர் :) இது போல ஓவியம் வரைய சின்ன பிள்ளைகளா இருந்தப்போ பள்ளியில் சொல்லிக்கொடுத்தார்கள். அம்மாகிட்ட திட்டு விழும்... அடுப்படியில் இருந்து காயை எல்லாம் கொண்டு போறோம்னு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா