என் குழந்தை சாப்பிட மறுக்கிறான்

நான் சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றேன். என் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது.முதல் 4 மாதம் நன்கு பால் குடித்தான். பின்னர் படிப்படியாக குறைத்து நிறுத்திவிட்டான்.வைத்தியசாலையில் ஒரு மாதம் நின்றேன். சகல பரிசோதனைகளும் செய்து நோமல் என்று கூறினார்கள்.ஆனால் வாயினால் எதுவுமே எடுப்பதில்லை. 3 மாதமாக வாயினால் உணவோ,பாலோ எடுக்க மறுக்கிறான்.ஆனால் குழந்தைக்கு 4 மணிக்கொரு முறை பசிக்கிறது.ஒரு நாள் முழுவதற்கும் அதிகப்பட்சமாக 10-15ml பால் மட்டுமே அதுவும் சில நேரங்களில் மட்டும் குடிக்கிறான்.உணவிலும் விருப்பமில்லை.நான் பல வகையான பால் ம வகைகளை மாத்தியும் பயன் இல்லை.தற்போது மூக்கில் குழாய் ஊடகவே பால் கொடுக்கிறேன்.அதுவும் வாந்தி எடுக்கிறான்.நிறை குறைந்து விட்டது.
இந்த வேதனையை கூற வார்த்தைகள் இல்லை.இதற்க்கு ஒரு தீர்வு கூறுங்கள்.

திரும்ப க்ளினிக் வரச் சொல்லேல்லயா? குழந்தைக்கு கை மருந்து, அது இது என்று செய்யப் போனீங்களெண்டால் திரும்ப ஹொஸ்பிட்டல் போகேக்க, அவங்களுக்குச் சொல்லி விளங்கப்படுத்த முடியாது. தொடர்ந்து அங்கயே காட்டிக் கேட்கிறதுதான் புத்திசாலித்தனம். அவங்கள் எப்படியும் ஏதாவது முடிவு சொல்லத்தானே வேணும்! கவலையாகத் தான் இருக்கும். இருந்தாலும் இப்ப மாதிரியே தொடர்ந்து பால் குடுங்க. நிறை குறையுறதால ஒருக்கா போய்க் காட்டுறது நல்லது.

‍- இமா க்றிஸ்

India ku vandhu dr paarungalaen... enna pirechanainu puriyala, aanaa padikka varuthamaa irukku. Iraivan arulaal viraivil gunamaagattum.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது மாதிரியான‌ பிரச்சினை என் பெண்ணுக்கு 2 மாதத்தில் வந்தது. ஆனால் அதுவும் இதுவும் ஒன்றா என்று தெரியவில்லை. அவளும் 3 மாதம் முடியும் வரை 10 மில்லி தான் ஒரு நாளைக்கு குடிப்பாள், அதுக்கே அவளது பாட்டிகள் தலைகீழாக‌ நிற்க‌ வேண்டும். எடை பயங்கரமாக‌ குறைந்தது. அழுது கொண்டேதான் இருப்பாள் எப்போதும்.

நீங்கள் கொஞசம் விவரமாக‌ சொன்னால் வசதியாக‌ இருக்கும். குடிக்க‌ மறுக்கிறான் என்றால் எப்படி? வாயே திறக்க‌ மாட்டேன்கிறானா இல்லை குடித்த‌ அப்புறம் வயிறு வலித்து அழுகிறானா?

குழந்தை எப்படி பால் குடித்தவுடன் புரையேறுகிறதா? என் உறவினர் வீட்டுக்குழந்தைக்கு இது போல் இருந்து, மருத்துவ சிகிச்சையில் உணவுகுழாய் மிகவும் மெல்லியதாக இருப்பதாகவும், பிறகு வயது கூட கூட ஶ்ரீயாகிவிடும் என்றும் கூறினார்கள். இப்பொழுது நார்மலாகிவிட்டார். இதனைப்பற்றி தகவல் அறிந்தோர் நிச்சயம் தக்க பதில் கூறுவார்கள்.

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

அன்புள்ள‌ விழியம்மைக்கு எங்களுக்கு மிக‌ நெருங்கிய‌ நண்பரின் மகளுக்கு
குழந்தை பிறந்து ஒரு மாதத்திலேயே தாயிடமே பால்குடிக்க‌ மறுத்துவிட்டது.
பலவித‌ சோதனைகளைச் செய்தபின் குழந்தைக்கு பாலை உறிஞ்சிக் குடிக்கும்
அளவுக்கு வாயில் தெம்பு இல்லை என்று கூறி அதற்கான‌ சிகிச்சை செய்து
குணப்படுத்தி விட்டார்கள். இப்போது தாயும் சேயும் நலமாக‌ உள்ளனர்.
உங்கள் குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால் இப்போதைக்கு
நல்லது. பாலைத்தவிர‌ வேறு கஞ்சி போன்ற‌ உணவை கெட்டியான‌ பசைப்
பதத்திற்கு பிசைந்து குழைந்த சாதம் இட்லி போன்றவற்றை உங்கள் ஆள்காட்டி
விரலால் சுண்டைக்காய் அளவு எடுத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுங்கள்.
குழைந்த‌ சாதம், இட்லியோடு தேனைக் கலந்து ஊட்டி விடுங்கள். தேன் மிகச்
சிறந்த‌ சத்துணவு, முடிந்தால் தனியாகத் தேனைக்கூட‌ தனியாக‌ நாக்கிலே
விழுங்க‌ விழுங்கத் தடவி விடுங்கள். அதிகமாக‌ வற்புறுத்த‌ வேண்டாம்.
சன் டிவியில் நாட்டு மருத்துவம் பாருங்கள். இறைவனை நம்புங்கள்
உங்கள் குழந்தை விரைவில் நலமடைய‌ இறைவனை நானும் இறைஞ்சுகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Poongathai amma unga advice venum pls.yen paiyanukku ippatha 5th month start aguthu.doctor advice padi kool start pannuna avanum sapara.naatu sarkarai kalanthu kodukara but alum pothu mattum cold mathiri sound varuthu yenna panna.

Aparam daily motion pora but pogum pothu konjam kasta padura.yenna panna sollunga pls.

கேழ்வரகு கூழானால் அதன் தோல் இல்லாமல் ( வர‌ மாவில் கூழ் செய்வதானால் நன்கு சலித்து தோலை எடுத்து விட்டு ) கூழ் காய்ச்சவும்.
நாட்டுச் சர்க்கரை நல்லதாகப் பார்த்து வாங்கவும். வெள்ளையாக‌
இருக்கவேண்டும் என்பதற்காக அதிகமாக‌ ப்ளீச் செய்வதாகக் கேள்வி.
வெள்ளையான‌ வெல்லமும் அப்படித்தான், இரண்டுமே கருப்பு நிறத்தில்
இருந்தால் நல்லதே, பனை வெல்லம் சேர்த்துப் பாருங்கள்.
கூழ் மாவுப்பொருள் என்பதால் மலம் லேசாக‌ இருகலாம். கேழ்வரகு
கஞ்சி சளிக்கு மருந்தாகும், பழ‌ ஜூஸ் கொடுங்கள். முன் சொன்னபடிஓமத் தண்ணீர் ஒருநாளுக்கு ஒரு தடவையாவது கொடுங்கள்.
ஆசனவாயில் ஒவ்வொரு துளி விளக்கெண்ணெய் ஒரு நாளுக்கு மூன்று
நான்கு முறையாவது தடவிவிடவும்.
நீங்கள் தாய்ப்பால் தருவதானால் குப்பைமேனிக்கீரயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், குழந்தைக்கும் அது சேரும் உங்கள் பால் மூலமாக‌.
குழந்தையின் தொப்புளைச் சுற்றி சுட்டுக் கருக்கின‌ வசம்பைக் கல்லில் வெந்நீர் விட்டு இழைத்து பற்று போல் போடவும் சூடு குறையும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Neenga sonna padi panra amma thanks.unga answer romba cleara irukku.neenga yella problem ithukkum easy solution solringa.

Sukku yethukku payanpadum solunga pls

Aparam stomachla puchi pidikkama irukka yenna pannanum.

மாதக்கடைசியில் ஆலோசனைக்கு அழைத்திருக்கிறார்கள்.

தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்

ஒரு முறை வாய் வைத்துவிட்டு எடுத்துவிடுவான். பின்னர் பாலை கண்டாலே அழுகிறான், தலையை மறுபக்கம் திருப்பிக்கொண்டு ஒரே அழுகை. கையை வாயில்சூப்பிக்கொண்டு உறங்கிவிடுவான்.

உமா அக்கா உங்கள் பெண்ணுக்கு என்ன செய்தீர்கள்,

தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்

மேலும் சில பதிவுகள்