தேதி: July 14, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - பாதி
கொத்தமல்லித் தழை - சிறிது
வெண்ணெய் - கால் தேக்கரண்டி
சாட் மசாலா - கால் தேக்கரண்டி
ஓம்பொடி - சிறிது
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் போட்டு கார்ன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அதனுடன் சாட் மசாலா சேர்த்து கிளறவும்.

வாணலியில் இருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி மற்ற பொருட்களை அதில் சேர்க்கவும்.

அனைத்தையும் நன்றாக கிளறவும். சுவையான ஸ்வீட் கார்ன் சாட் தயார்.

Comments
நன்றி
குறிப்பு வெளியிட்ட டீமிற்கு நன்றி.