எப்போது கருவுறுகிறார்கள்

ஹாய் எல்லோரும் எப்படி இருகிங்க.. பொதுவாக குழந்தை பெற்ற பென்கள் எப்போது கருவுருகிறாற்கள்..எப்படி தெறிந்து கொள்வது..தாய் பால் கொடுப்பதும் கர்ப தடை முறைஎன்கிறார்களே,இருந்தும் நிறைய பேர் அந்த நேரத்துலயும் கருவுற்றுருப்பதை கேள்வி பட்ருக்கிறேன்,கனவருடன் எப்படி நடந்துகொள்வது..எப்போது ,மற்றும் என்ன மிகருத்தடை சாதணம் பயன்படுத்தலாம்,அறிவியல் சார்ந்த பதிலாக இருந்தால் ரொம்பவும் சந்தோச படுவேன்..நீங்கள் அனுப்பும் பதில்ளுக்கு நன்றி நன்றி

//பொதுவாக குழந்தை பெற்ற பென்கள் எப்போது கருவுருகிறாற்கள்.// எப்போது கருவுறுகிறார்கள் என்பது உங்கள் கேள்வி அல்ல, எப்போது கருத்தரிக்கச் சாத்தியம் உண்டு என்பதுதானே! அடுத்த மாதம் கூடக் கருத்தரிக்கலாம். அதைத் தொடர்ந்து வரும் எந்த மாதமும் கருத்தரிக்கலாம்.

//எப்படி தெறிந்து கொள்வது.// இது... பெண்ணுக்குத் தெரிய வேண்டும். கருத்தடை முறைகள் எதுவும் பயன்படுத்தாமல் கணவரோடு இருந்திருந்தால், மீண்டும் உடலில் வித்தியாசம் எதுவும் தெரியாமலே உள்ளே கரு வளர ஆரம்பிக்கலாம். ஏதாவது ஒரு ப்ரெக்னன்ஸி டெஸ்ட் கர்ப்பமா இல்லையா என்பதைச் சொல்லும்.

//தாய் பால் கொடுப்பதும் கர்ப தடை முறைஎன்கிறார்களே,// நிச்சயம் இல்லை. அதனால்தான் //நிறைய பேர் அந்த நேரத்துலயும் கருவுற்றுருப்பதை கேள்வி//ப்படுகிறீர்கள். :-)

//கனவருடன் எப்படி நடந்துகொள்வது.// :-) இது அவரவரைப் பொறுத்தது. சில கணவர்கள் எப்போது எப்படி நடந்துகொள்வது என்று தெரிந்து நடப்பார்கள். உடல்நிலை கெட்டிருந்தால், பெண்ணுக்குச் சிரமமாக இருந்தால் தவிர, குழந்தை கிடைத்தது என்பதற்காக எதையும் தவிர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கருத்தடை முறை ஏதாவது பயன்படுத்தினால் மட்டும் போதும்.

//கருத்தடை சாதணம்// இதற்கான பதில் வேறு சகோதரிகளிடமிருந்து கிடைக்கும்.

//அறிவியல் சார்ந்த பதிலாக இருந்தால் ரொம்பவும் சந்தோச படுவேன்.// :-) எல்லோருமே அவரவர் பதிலை அறிவியல் சார்ந்ததாகத்தான் கருதுவோம்; அவரவர் அறிவைக் கொண்டுதானே பதில் சொல்லப் போகிறோம். நாம் கற்றது, கை மண்ணளவு. :-)
~~~~~~
நீங்கள் உங்களுக்குச் சிரமமாக இருந்த போதும் தமிழில் தட்டியிருக்கிறீர்கள். அதற்கு என் மனமார்ந்த பாராட்டுகள் சகோதரி. சின்னதாக ஒரு உதவி... p e capital-N தட்டினால் பெண் என்று எழுதலாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா மேடம், என் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக பதில் அளித்துள்ளீர்கள்.

மேலும் சில பதிவுகள்