கன்னத்தில் கருப்பு

நன்றாக இருந்த கன்னத்தில் ஒரு ரூபாய் அளவுக்கு கறுப்பாக வந்தது. இப்பொ அது படர்ந்து வலது கன்னத்தில் மட்டும் அதிகமாக தெரிகிறது. ஸ்கின் டாக்டர் ட காட்டியும் சரியாகவில்ல. பார்க்கும் அனைவரும் அது என்ன என்று கேட்கிறார்கள். ஏதாவது வழி செல்லுங்கள் தோழிகளே

//ஸ்கின் டாக்டர் ட காட்டியும் சரியாகவில்ல.// முதலில் பார்த்ததும் காரணம் என்னவென்று சொன்னார்கள்!

//பார்க்கும் அனைவரும் அது என்ன என்று கேட்கிறார்கள்.// சிலருக்கு ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாக இப்படி வரும். எதுவும் செய்யாமலே சில நாட்களின் பின் மறைந்துவிடும்.

எப்போதாவது அதிக வெயிலில் நின்றீர்களா? நீண்ட பஸ் பயணத்தில் வெயில் படும் பக்கம் பயணம் செய்தீர்களா?

//ஏதாவது வழி செல்லுங்கள் தோழிகளே// அமைதியாக இருங்கள். வெளியே செல்லும் போது அவசியமானால் ஏதாவது டச்சப் போட்டுக் கொள்ளுங்கள். இதற்கு தேவாவின் இடுகைகளில்தான் நல்ல பதில் இருக்கும்.

வீட்டு வைத்தியம், கை வைத்தியம் எல்லாம் முகத்தில் போடுவது... யோசித்துச் செய்ய வேண்டிய விடயங்கள். இருந்ததை விட மோசமாகி விடக் கூடாது இல்லையா! எதுவானாலும் பிரச்சினை இல்லாத பொருட்கள் என்று நிச்சயம் தெரிந்தால் மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Doctor oilment kuduthaanga. But use agala. Veila ponathe illa akka

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

அன்புள்ள‌ சீதேவிமுத்துவுக்கு
கன்னத்தில் உள்ள‌ கருப்புக்கு எந்த‌ மருந்தையும்
அவசரப்பட்டு முகத்தில் தடவாதீர்கள். முதலில் முகத்திற்கு எந்த‌ சோப்பையும்
போடாதீகள். கடலை மாவு, அல்லது பயற்றம்பருப்பு மாவு இதனோடு மரு,தவனம்,ஆவாரம்பூ,கஸ்தூரி மஞ்சள்,கார்போக‌ அரிசி இவற்றை அரைத்து
அதையே சோப்பிற்குப் பதிலாகப் பயன்படுத்தவும். அதே போல் எந்த‌ விதமான‌
மேக்கப் பொருளையும் தற்போது பயன்படுத்தாதீர்கள்
இதன் நடுவே உங்கள் ரத்தத்தை டெஸ்ட் செய்து பாருங்கள். ரத்தம்
சுத்தமாக‌ சித்தாவிலும் ஓமியோபதியிலும் நல்ல‌ மருந்துகள் உள்ளன‌. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவற்றை முயற்சி செய்து பார்க்கவும்.
அலர்ஜியாக‌ இருந்தாலும் இருக்கலாம். ரத்தம் டெஸ்ட் என்றவுடனே வேறு
எதையாவது தவறாக‌ நினைத்துக் கொள்ளாதீர்கள்.
கடுக்காய்ப் பொடி நாட்டுமருந்து கடையில் கிடைக்கும். அதை வாங்கி
பொடி நனையும் அளவிற்கு தேனை ஊற்றி வைத்து தினமும் இரவில் கால்
தேக்கரண்டி அளவிற்கு சாப்பிடவும். கடுக்காய் உடம்பில் உள்ள‌ கெட்ட‌ நீரை
அனேகமாக‌ 90% வெளியே எடுத்து விடும். கடுக்காய்ப் பொடி சாப்பிடுவதால்
எந்தக் கெடுதலும் வராது. மூலிகைகளுக்கான வெப்சைட்டில் போய்ப் பார்த்து
தெளிவடையவும். தாமதமான‌ பதிலுக்கு மன்னிக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்