சிறுகீரை குணுக்கு

தேதி: July 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம்பருப்பு - ஒரு கப்
சிறுகீரை - ஒரு கப்
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை


 

பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கீரை, கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு வதக்கவும்.
அரைத்த பருப்புடன் வதக்கிய கீரை, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து சிறு சிறு குணுக்குகளாக கிள்ளி போடவும்.
மொறுமொறுவென்று பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். வடையாகவும் தட்டி போடலாம்.
சுவையான சிறுகீரை குணுக்கு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எவ்வளவு வேகமா வேலை நடக்குது. தான்க்யூ அட்மின் அண்ணா & அறுசுவை டீம் மிக்க நன்றி நன்றி நன்றி

Be simple be sample

சிறுகீரை குணுக்கு நானும் வீட்டில் அடிக்௧டி செய்வேன்
வாழ்த்துக்௧ள்
தெரியாத தோழி௧ள் தெரிந்துகொள்ள மி௧வும் பயன்படும்படி பதிவிட்டதற்கு

ML

அதென்ன‌ குணுக்கு முனுக்குன்னு?? அது பக்கோடா ;) நான் செய்து பார்க்கிறேன், பருப்பு ஊற‌ வெச்சு அரைச்சு செய்ததில்லை, ட்ரை பண்றேன். கைவசம் அரைக்கீரை இருக்கு, ட்ரை பண்ணலாமா அதுல‌? :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட நீங்களும் இப்படித்தான் செய்வீங்களா. சூப்பர் . தான்க்யூ கல்யாணி

Be simple be sample

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா. நேம்மா முக்கியம் நாம சாப்புடறதுதான முக்கியம். அரக்கீரை போட்டு செய்ங்க நல்லாத்தான் இருக்கும். அரைக்கீரைலயும் வடை சுடுவாங்களே. அப்ப குணுக்கு முணுக்கு பக்கோடா சுட கூடாதா. தான்க்யூ

Be simple be sample

சிறுகீரை எதுவென்று தெரியாவிட்டாலும்... குணுக்கு சூப்பரா தெரியுது. 5*

‍- இமா க்றிஸ்

அரை கீரையை விட இலை சிறிதாக இருக்கும். எனக்கு தெரிந்த வித்தியாசம் அவ்வளவு தான். தான்க்யூ இமாம்மா

Be simple be sample

Tropical Amaranthus ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள‌ இமா
வலைத்தளத்தில் பார்க்கவும். படம் தெளிவாக‌ உள்ளது.
அருமையான கீரை. லேசான‌ இனிப்புச் சுவை உடையது.
இதனோடு சின்ன‌ வெங்காயம் தக்காளி பூண்டு பச்சைமிளகாய் சீரகம்
போட்டு சட்டியில் வேகவைத்து கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் செத்தல்
மிளகாய் உங்கள் தமிழில் அதாவது காய்ந்த‌ மிளகாய் எங்கள் தமிழில் கிள்ளித்
தாளித்து உப்பிட்டுக் கடைந்து ( மத்தால்) சுடு சோற்றில் நெய் விட்டுப் பிசைந்து
தொட்டுக்கொள்ள‌ புளிப்பாய் ஊறுகாய் அல்லது காரமாக‌ பொரியல் மோர்மிளகாய்
வைத்துக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பரோ சூப்பர்.
எக்காரணம் கொண்டும் எந்த‌ வகையான மருந்து சாப்பிடும் போதும்
சிறுகீரையைச் சாப்பிடக் கூடாது, ஒரே ஒரு செடியின் வேர் கூட‌ மருந்தை
முறித்துவிடும், கைகால்களில் வீக்கம் வந்தால் சிறு நீர் போகாமல் இருந்தால்
இந்தக் கீரை அதை நீக்கிவிடும்
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//அரை கீரையை விட இலை சிறிதாக இருக்கும்.// ;) அப்போ... கால் கீரை எனலாமா அதை! :-)

பதில் சொன்ன அனைவருக்கும் நன்றி. முளைக்கீரையின் வகைகளைப் பற்றித்தான் எல்லோருமே பேசுகிறீர்கள் என்பது புரிகிறது. அது இங்கு ட்ரீட். :-) குளிர் ஆரம்பித்ததும் வீட்டில் முளைத்திருந்தவையும் காலி. ;( அடுத்த சீசனுக்குத்தான் இனி நினைக்கலாம். அப்போது இமா மறக்காமல் இருந்தால்... இங்கு பின்னூட்டம் வரும். :D

‍- இமா க்றிஸ்

ரேவதி
உங்கள் குறிப்பு
மிகவும் சூப்பர்

தான்க்யூப்பா.

Be simple be sample

ரேவ்ஸ் சுவை ரொம்ப‌ அருமை :) க்ரிஸ்பியாவும் இருந்தது. வீட்டில் எல்லாருக்குமே ரொம்ப‌ பிடிச்சுது ரேவ்ஸ். மிக்க‌ நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Kunukku taste super... Thanks for healthy recipe :)

Kalai

சிறுகீரைக்கு பதில் வேறு கீரை சேர்க்கலாமா?

Thanku kala. Seithu parthu pathivu potathuku

Be simple be sample

செய்யலாம் மலர். செய்து பார்த்துட்டு சொல்லுங்க. அரைகீரையும் நல்லாருக்கும்.

Be simple be sample

Thank you so much