வணக்கம்,
உதவும் உஷா தையல் இயந்திரத்தில் இதில் எது சிறந்தது
1.usha wonder stitch
2.usha excella
3.usha allure sewing machine
4.usha dream stitch
ஒப்பிட்டு கூறவும்...
வணக்கம்,
உதவும் உஷா தையல் இயந்திரத்தில் இதில் எது சிறந்தது
1.usha wonder stitch
2.usha excella
3.usha allure sewing machine
4.usha dream stitch
ஒப்பிட்டு கூறவும்...
தையல் இயந்திரம்
உஷா மெஷின்... ப்ராண்ட் நல்லது. வீட்டுக்கு ஒரு மெஷின் வைச்சிருப்போம். மாடல்களை ஒப்பிட்டுக் கூறுவதற்கு உஷா மெஷின் டீலர்ஸ்சாலதான் முடியும். அப்படியில்லாவிட்டால்... நாலு மாடலும் ஒரே சமயம் வைச்சிருக்கிற ஆட்கள் - டெய்லரிங்கை தொழிலாக வைச்சிருக்கிறவங்க வரணும். அப்படி யாராவது வந்து சொன்னால் அதுதான் சிறந்த ஒப்பீடாக இருக்கும்.
உங்களுக்காக ஒரு தேடல்... பார்த்தவரையில், அடிப்படையில் ஒரு மெஷினுக்கு எவையெல்லாம் அவசியமோ அவை எல்லா மாடல்களிலுமே இருக்கின்றன. குறை சொல்ல முடியாதபடி எல்லாமே நன்றாகத்தான் இருக்கின்றன. 'சிறந்தது' என்பது அவரவர் தேவையையும் ரசனையையும் பொறுத்தது. விலையான மெஷினை வாங்கி வைத்து, நேர்த்தையல்களைத் தவிர வேறு எதையும் தைக்காமல், அதுவும் சில முறைகள் மட்டும் பயன்படுத்திவிட்டு வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்; பழைய காலத்து நேர்த்தையல் மட்டும் தைக்கும் மெஷினை வைத்து விதம் விதமாகத் தைத்து உழைப்பவர்களும் இருக்கிறார்கள்.
உங்கள் ரசனை, தேவை எப்படி என்று தெரியவில்லை. யூட்யூபில் எல்லா மாடல்களுக்கும் டெமோ இருக்கிறது. தெளிவாக விளக்கம் கொடுக்கிறார்கள். பாருங்கள். எது உங்கள் ரசனைக்கும் தேவைக்கும் பொருத்தமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
- இமா க்றிஸ்